"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» கல்வி அறிவு வழங்கிய சிதம்பரம் ஸ்ரீஜடா விநாயகர்! -
by அ.இராமநாதன் Yesterday at 7:45 am

» ராஜஸ்தானை வீழ்த்தி சென்னை அபாரம்
by அ.இராமநாதன் Yesterday at 7:38 am

» ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
by அ.இராமநாதன் Yesterday at 7:32 am

» ஜோதிகாவின் புதுப் பட டைட்டில் இதுதான்!
by அ.இராமநாதன் Yesterday at 7:30 am

» பொதுக்கூட்டங்களில் வெற்றிடங்களை நிரப்புவார்!
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 11:08 pm

» தலைவர் தத்துவமா பேசறார்....!!
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:46 pm

» பீடி சுற்றும் பெண்கள்
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:33 pm

» லால்பகதூர் சாஸ்திரி
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:31 pm

» பேசாத வார்த்தக்கு நீ எஜமான்...!!
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:27 pm

» பொது அறிவு தகவல்கள்
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:23 pm

» மனைவியை அரசியலுக்கு கொண்டு வந்தது தப்பு...!!
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:15 pm

» தைராய்டு பிரச்சனைக்கு...
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:11 pm

» மூத்தோர் சொல் அமிழ்தம் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:09 pm

» ட்விட்டரில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:02 pm

» தலைவருக்கு ஓவர் மறதி...!!
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 9:57 pm

» ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 9:16 pm

» நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 6:02 pm

» சிறுமி பலாத்காரம் நாட்டிற்கே அவமானம் : ஜனாதிபதி
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 5:25 pm

» சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 4:58 pm

» தலைமை நீதிபதி மீது கண்டன தீர்மானம்: 7 கட்சி ஆதரவு
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 4:57 pm

» பெண்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளில் 48 எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள்
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 4:53 pm

» கடல் சீற்றம்: குமரி, ராமநாதபுரம் மீனவர்களுக்கு எச்சரிக்கை
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 4:50 pm

» இணைய வெளியினில....
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 1:30 pm

» பசித்த வயிறு கற்றுத்தரும் வாழ்க்கை
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 1:27 pm

» 10 பர்சென்ட் கேஷ்பேக் ஆஃபர் சாமி...!!
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 1:23 pm

» ஃபேஸ்புக் ஸ்மைல்
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 1:16 pm

» சர்வ தேச ரத்தம் உறையாமை தினம்
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 12:07 pm

» சர்வ தேச கல்லீரல் தினம்
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 11:59 am

» தக்காளி விஷயத்தில் கவனிக்க....
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 11:55 am

» ட்விட்டரில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 11:53 am

» பன்னாட்டுப் பழமொழிகள்
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 11:41 am

» கேரளா பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் நயன்தாரா.
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 11:36 am

» 100 பந்து கிரிக்கெட் தொடரை அறிமுகப் படுத்துகிறது இங்கிலாந்து
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 9:45 am

» நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 9:42 am

» - பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கா
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 9:19 am

» என் டேஸ்டுக்குத்தான் சமைப்பேன்....!!
by அ.இராமநாதன் Thu Apr 19, 2018 9:13 pm

» சிந்திக்க சில நொடிகள்
by அ.இராமநாதன் Thu Apr 19, 2018 9:02 pm

» ரூ.7 கோடி கள்ளநோட்டுகள் பறிமுதல்: கர்நாடகாவில் ஓட்டுக்கு கொடுக்கும் பணத்துடன் கலக்க திட்டம்
by அ.இராமநாதன் Thu Apr 19, 2018 11:25 am

» ஓடும் மேகங்களே ஒருசொல் கேளீரோ
by அ.இராமநாதன் Thu Apr 19, 2018 11:18 am

» மான்களோடு ஒன்றாக விளையாடும் புலிகள்
by அ.இராமநாதன் Thu Apr 19, 2018 10:18 am

» துளிப்பாக்கள் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Thu Apr 19, 2018 10:11 am

» முருங்கைக்கீரை கூட்டு
by அ.இராமநாதன் Thu Apr 19, 2018 9:54 am

» பாசிப்பருப்பு-முருங்கைக்கீரை அடை
by அ.இராமநாதன் Thu Apr 19, 2018 9:52 am

» வரவு எட்டணா! செலவு பத்தணா! - பழமொழிகள்!
by அ.இராமநாதன் Thu Apr 19, 2018 9:44 am

» அதிகாலை எழுவதால் 5 பயன்கள்
by அ.இராமநாதன் Thu Apr 19, 2018 8:32 am

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines எல்லோரும் நலம் வாழ ! ஏர்வாடியாரின் சிந்தனைகள் ! தொகுப்பாசிரியர் : தமிழ்த்தேனீ முனைவர் இரா. மோகன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.

Go down

எல்லோரும் நலம் வாழ ! ஏர்வாடியாரின் சிந்தனைகள் ! தொகுப்பாசிரியர் : தமிழ்த்தேனீ முனைவர் இரா. மோகன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.

Post by eraeravi on Sat Apr 14, 2018 2:13 pm

எல்லோரும் நலம் வாழ !

ஏர்வாடியாரின் சிந்தனைகள் !

தொகுப்பாசிரியர் : தமிழ்த்தேனீ முனைவர் 
இரா. மோகன் !


நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
வானதி பதிப்பகம், 23, தீன தயாளு தெரு, தியாகராய நகர், சென்னை-600 017.  பக்கம் : 270, விலை : ரூ. 170.******
      " எல்லோரும் நலம் வாழ்" நூலின் தலைப்பு புகழ்பெற்ற பாடலை நினைவூட்டியது.  வாழும் காலத்திலேயே படைப்பாளிக்குச் செய்ய வேண்டிய சிறப்புகளைச் செய்துவிட வேண்டும்.  மகாகவி பாரதிக்கு இதுபோன்ற சிறப்புகளைச் செய்து இருந்தால் 39 வயதில் அவன் இறந்திருக்க மாட்டான்.
      ஏர்வாடியார் அவர்கள் பண்பாளர், இனியவர், பாரத மாநில வங்கியில் தணிக்கை அலுவலராகப் பணியாற்றி ஓய்வு பெற்றபின், ஓய்வுக்கு ஓய்வு தந்து ஓய்வின்றி உழைத்து வருபவர்.  ‘கவிதை உறவு’ என்ற மாத இதழை பல்லாண்டுகளாக நடத்தி வருகின்றார்.  ஆண்டுதோறும் ஆண்டு விழா வைத்து சிறந்த நூல்களுக்குப் பரிசும், சான்றோர்களுக்கு விருதும் வழங்கி வருகிறார். 
 மாத இதழ் நடத்துவது என்பது நெருப்பாற்றலில் எதிர்நீச்சல்  போடுவது போலாகும். படைப்பாளியாகவும் இருந்து, ஏழாம்பக்காம் கவிதையும், மனத்தில் பதிந்தவர்கள் பகுதி, நூல் மதிப்புரை என்று எழுதி வருபவர். சகலகலா வல்லவர்.
      இவரது நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களில் இருந்து பழச்சாறாக தேன்விருந்தாக வழங்கி உள்ளார் தமிழ்த்தேனீ முனைவர் இரா. மோகன் அவர்கள்.  மற்றவர்களைப் பாராட்டுவதில் கஞ்சத்தனம் இல்லாத கடைவள்ளல் தமிழ்த்தேனீ இரா. மோகன் அவர்கள். 
 இந்த நூலிற்கு வைத்த மகுடமாக முதன்மைச் செயலர் முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப. அவர்களின் அணிந்துரை உள்ளது.  அணிந்துரை-யிலிருந்து சில துளிகள்.
      “பேராசிரியர் மோகன் பெருந்தன்மைக்குச் சொந்தக்காரர் ; பெரும்பாலும் எழுதுபவர்கள் அடுத்தவர் எழுத்தைக் கொண்டாடுவது அரிது. ஆனால் மோகன் அவர்கள் இந்தப் பணியை இடைவிடாமல் செய்து வருகிறார். அரிய செய்திகளைத் திரட்டி வந்து தேன்கூடாக்கித் தரும் இலக்கியத் தேனீ அவர். எண்ணற்ற நூல்களைத் தொகுத்துக் கொண்டே வரும் இடைவிடாத உழைப்புக்குச் சொந்தக்காரர்.
      தமிழ்த்தேனீ முனைவர் இரா. மோகன் அவர்கள் மு.வ. கருவூலம், ஜெயகாந்தன் சிந்தனைகள், நாள் ஒரு சிந்தனை, குலோத்துங்கன் பண்ணையில் கொய்த கதிர்கள், இறையன்பு களஞ்சியம் ஆகிய வரிசையில் ஆறாவது தொகை நூல் இது. பாராட்டுக்கள்.
      படைப்பாளி படைக்கும் போது தோன்றாதவைகள், திறனாய்வாளர்கள் மேற்கோள் காட்டும் போது பெருமிதமாக இருக்கும்.  மேலும் மேலும் நன்றாக எழுதுவதற்கு ஊக்கம் தரும் விதமாக இருக்கும்.  இந்த நூல் ஏர்வாடியாரை நூற்றாண்டுகள் வாழ வைக்கும். வாசகனாகப் படிக்கும் நமக்கும் ஏற்படும் மகிழ்ச்சி. படைப்பாளியான ஏர்வாடியாருக்கும் மட்டற்ற மகிழ்ச்சி கிடைத்திருக்கும்.  இன்னும் பல படைப்புகள் ஏர்வாடியாரிடமிருந்து வருவதறு கதவுகளைத் திறந்து விட்டுள்ளது இந்நூல்.
      சூரியன் போல் வாழ்க! என கவிஞர் முத்துலிங்கம் அவர்களும் வாழ்த்துக்கவிதை வழங்கி உள்ளார்.
      அனுபவக் கீற்றுகள் என்று தொடங்கி உதிரிப்பூக்கள் வரை குறிஞ்சி மலர் போல 12 தலைப்புகளில் பகுத்து, வகுத்து தொகுத்து வழங்கி உள்ளார்.
      அம்மாவின் அறிவுரை !
      “உனக்கு எது நல்லதாகப் படுகிறதோ அதன்படி நடந்து கொள்” என்று ஏர்வாடியாரின் அம்மா அவர்கள் சொன்ன இந்த மந்திரச்சொல் ஏர்வாடியாரின் வெற்றிக்கு வித்தாக இருந்துள்ளது என்பதை உணர முடிந்தது. 
 கலைஞானி கமலகாசனுக்கு அவரது அம்மா “கழிவறை சுத்தம் செய்தாலும் உன் அளவிற்கு வேறு யாரும் சுத்தம் செய்ய முடியாது என்கிற அளவிற்கு பெயர் எடு” என்று சொன்ன சொல் தான் அவரது திரையுலக வெற்றிக்கு மந்திரச்சொல்லாக அமைந்தது. 
அது என் நினைவிற்கு வந்தது.  ஒன்றைப்படிக்கும் போது அது தொடர்பான மற்றொன்று நினைவிற்கு வருவது தான் நூலின் வெற்றி.
      ஏர்வாடியாரின் வாழ்க்கையில் நடந்த சுவையான பல நிகழ்வுகள் நூலில் உள்ளன.
      மனைவியின் மீது குறைப்பட்டுக் கொள்ளும் கணவன் கவனத்தில் கொள்ள வேண்டிய வைர வரிகள் இது.
  “எல்லோருக்குமே இறைவன் நல்ல மனைவியைத் தான் தருகிறான்.  நம்மில் எத்தனை பேர் நல்ல கணவனாய் அவர்களுக்கு அமைகிறோம்? உண்மை தான். நல்ல கணவனாக இருந்து கொண்டு தான் நல்ல மனைவியை நேசிக்க வேண்டும்.
      “நான் எழுதுகிறவற்றுள் எனக்கு இதம் சேர்ப்பது கவிதை தான்”. உண்மை தான், அதனால் தான், தான் நடத்தும் இதழுக்கு கவிதை உறவு என்று பெயர் சூட்டி கவிதை இதழாகவே நடத்தி வருவது தனிச்சிறப்பு.  பல கவிதை இதழ்கள் காணாமல் போய் விட்டன.
      கையே இல்லை என்பதை விடவா
      கையில் இல்லை என்கிற கவலை?உண்மை தான்.அப்பன் சொத்துத் தரவில்லை, வசதி இல்லை என்று வருத்தப்படும் கோடி மக்களுக்கு ஆறுதல் தரும் வைர வரிகள் நன்று .நல்ல சிந்தனை .ஏர்வாடியார் நேர்மையான மனிதர் .நேர்மையாகவே எப்போதும் சிந்திப்பவர் .சிந்தனைக்கு களஞ்சியமாக விளங்குபவர் .அவரது சிந்தைனையின் மேன்மைகளைத் தொகுத்து நூலாக வழங்கி உள்ள தமிழ்த் தேனீயாருக்கு   பாராட்டுக்கள் .
“நல்ல மனிதனாக இல்லாமல் 
நல்ல கவிஞனாக இருந்து என்ன பயன்? 
இதைத்தான் மகாகவி பாரதியார் "கவிதை எழுதுபவன் கவிஞன் அல்லன், கவிதையாகவே வாழ்பவனே கவிஞன். " என்றார்.
      வெற்றி வெறும் நிகழ்ச்சி தான்
      தோல்வி தான் நல்ல அனுபவம்.      தோல்வியில் துவண்டுள்ள உள்ளங்களின் காயத்திற்கு மருந்து போடும் வைர வரிகள்.
      கவிதைக்கு பொய் அழகு
      கவிஞனுக்கு பொய் அழிவு!      உண்மை தான். ஒரு கவிஞன் ஊருக்கு உபதேசம் என்று வாழாமல் எழுதியபடி நேர்மையாளனாக, உண்மை பேசுபவனாக இருக்க வேண்டும் என்ற அவசியத்தை உணர்த்திடும் வைர வரிகள். 
 நம்மை செம்மைபடுத்திக்கொள்ள உதவிடும் உன்னத நூல்.  ஏர்வாடியாருக்கும் தமிழ்த்தேனீக்கும் பாராட்டுக்கள்.  நூலினை தரமாக பதித்துள்ள வானதி அதிபர் மதிப்புறு முனைவர் இராமநாதன் அவர்களுக்கும்  பாராட்டுக்கள். 
ஏர்வாடியாரின் சிந்தனைகள்  எனும் களஞ்சியத்திலிருந்து வைரம்,   முத்து,  பவளம்   என்று தேர்ந்தெடுத்து வாழ்வியல் சிந்தனை கற்பிக்கும்  நவரத்தின மாலை செய்துள்ளார் தமிழ்த்  தேனீயார் .
 வானதி பதிப்பகம் , தமிழ்த்தேனீ இரா.மோகன், ஏர்வாடியார் என வெற்றிக்கூட்டணி அமைத்து தரமான நூல்களாக வருகின்றன.வெற்றிக்கொடி நாட்டி வருகின்றன.மூவருக்கும் பாராட்டுக்கள் 

eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2195
Points : 5021
Join date : 18/06/2010

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum