"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» நீ இளவரசி மாதிரி இருக்கேன்னு சொல்லல? -
by அ.இராமநாதன் Today at 11:16 pm

» வினாத்தாள் அவுட் ஆகியும் ஏன் உன்னால பாஸ் ஆக முடியலே?
by அ.இராமநாதன் Today at 10:56 pm

» பல்சுவை - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Today at 10:47 pm

» நிதானத்தைக் கடைப்பிடி,...
by அ.இராமநாதன் Today at 10:37 pm

» விண்மீன்கள் - கவிதை
by அ.இராமநாதன் Today at 5:03 pm

» நொடிக் கதைகள்
by அ.இராமநாதன் Today at 4:59 pm

» மல்லையா, நிரவ் மோடி போல 31 பேர் இந்தியாவை விட்டு தப்பி ஓடியுள்ளனர் - மத்திய மந்திரி தகவல்
by அ.இராமநாதன் Today at 8:47 am

» இந்திய வீரர் வீராங்கணைகளுக்கு ஜப்பான் முட்டை...
by அ.இராமநாதன் Today at 8:40 am

» தனுஷ் இயக்கும் அடுத்த படத்தின் பெயர் ‘நான் ருத்ரன்’?
by அ.இராமநாதன் Today at 8:38 am

» சுசீந்தரனின் ’ஏஞ்சலினா’ படப்பிடிப்பு நிறைவடைந்தது
by அ.இராமநாதன் Today at 8:37 am

» ஒரு சாவி கூட பீரோவுக்கு பொருந்த மாட்டேங்குதே?
by அ.இராமநாதன் Yesterday at 11:59 pm

» 2 கி.மீ தூரத்தை 2 மணி 44 நிமிடங்களில் கடந்து சாதனை படைத்த சைலேந்திரபாபுவின் நீச்சல் குழு!
by அ.இராமநாதன் Yesterday at 11:42 pm

» பள்ளிக்கு ஒரு லட்சம் சீர்வரிசை... ஆசிரியர்களைப் பிரமிக்க வைத்த ஊர்மக்கள்
by அ.இராமநாதன் Yesterday at 11:33 pm

» - கொஞ்ச நேரம் நடிக்கலாம்
by அ.இராமநாதன் Yesterday at 10:43 pm

» - இரும்பு இதயங்களுக்கான திறவுகோல்
by அ.இராமநாதன் Yesterday at 10:31 pm

» அதிர்ஷ்டம் உழைப்பின் முதுகில் ஒட்டிககிடக்கும்
by அ.இராமநாதன் Yesterday at 10:30 pm

» போலி நபரை பரீட்சை எழுத அனுப்பி விட்டு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த பள்ளி முதல்வர்
by அ.இராமநாதன் Yesterday at 8:20 pm

» நீர்பயாவின் தாயார் நல்ல உடலமைப்பு கொண்டவர் விருது விழாவில் முன்னாள் டிஜிபி சர்ச்சை பேச்சு
by அ.இராமநாதன் Yesterday at 8:18 pm

» பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி
by அ.இராமநாதன் Yesterday at 8:12 pm

» பெண் நிருபரை சீண்டிய அமைச்சர் விஜயபாஸ்கர்
by அ.இராமநாதன் Yesterday at 8:09 pm

» தமிழக பாஜ அடுத்த தலைவர் யார்?
by அ.இராமநாதன் Yesterday at 8:07 pm

» தேசிய கீதத்தில் திருத்தம்: காங்., எம்பி., தீர்மானம்
by அ.இராமநாதன் Yesterday at 8:06 pm

» ஓட்டுக்குப் பணம் தர நாங்கள் தயார்....
by அ.இராமநாதன் Yesterday at 4:54 pm

» வேண்டாம் தாயீ....மூணாவது நாளா பட்டினி கிடந்துட்டுப் போறேன்...
by அ.இராமநாதன் Yesterday at 4:51 pm

» இங்கேயும் இடது - அங்கேயும் அதே!
by அ.இராமநாதன் Yesterday at 2:51 pm

» முல்லா நஸ்ருதீன்!
by அ.இராமநாதன் Yesterday at 2:47 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by அ.இராமநாதன் Yesterday at 2:20 pm

» கீர்த்தி சுரேஷ் மகிழ்ச்சி
by அ.இராமநாதன் Yesterday at 2:16 pm

» குடியிருப்பு பகுதியில் புகுந்த மலைப் பாம்பு: லாவகமாக பிடித்த பெண்
by அ.இராமநாதன் Yesterday at 2:12 pm

» மலச்சிக்கலை தீர்க்கும் சூசி முத்திரை
by அ.இராமநாதன் Yesterday at 2:01 pm

» துல்கர் சல்மான் ஜோடியாக நடிக்கும் சோனம் கபூர்
by அ.இராமநாதன் Yesterday at 1:55 pm

» வீராணம் ஏரி நீர் திடீர் நிறுத்தம்: சென்னையில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படுமா?
by அ.இராமநாதன் Yesterday at 1:52 pm

» வெல்வெட் நகரத்தில் வரலட்சுமி சரத்குமார்
by அ.இராமநாதன் Yesterday at 12:53 pm

» சாவித்திரி வேடத்தில் நடிக்கும் கீர்த்தி சுரேஷ் தோற்றம் வெளியானது
by அ.இராமநாதன் Yesterday at 12:49 pm

» இந்தியன் ஆயில் கார்ப்பரே‌ஷன் பெட்ரோல் பங்கில் 5 கிலோ சமையல் கியாஸ் விற்பனை
by அ.இராமநாதன் Yesterday at 12:42 pm

» லட்சுமி கடாட்சம் பெற விரும்புபவர்கள் சண்டை போடுவதைத் தவிருங்கள்.
by அ.இராமநாதன் Yesterday at 9:37 am

» ஆவடியில் ராணுவ உடை தொழிற்சாலை மூடப்படாது: மத்திய அரசு அறிவிப்பால் தொழிலாளர்கள் மகிழ்ச்சி
by அ.இராமநாதன் Yesterday at 9:12 am

» வந்துவிட்டது, ‘வைசார்ஜர்’
by அ.இராமநாதன் Yesterday at 9:04 am

» முத்தரப்பு கிரிக்கெட்டில் வங்காளதேசத்தை வீழ்த்தியது இந்தியா: வாஷிங்டன் சுந்தரின் மாயாஜால பந்துவீச்சால் வெற்றி பெற்றோம்
by அ.இராமநாதன் Yesterday at 8:59 am

» காங். மாநாடு இன்று துவக்கம்
by அ.இராமநாதன் Yesterday at 8:20 am

» 12 பேர் ராஜ்யசபா எம்.பி.க்களாக போட்டியின்றி தேர்வு
by அ.இராமநாதன் Yesterday at 8:04 am

» ஜனாதிபதியின் அதிகாரப்பூர்வ டுவிட்டரில் முதன்முறையாக தமிழ்
by அ.இராமநாதன் Yesterday at 8:02 am

» அரசு வேலையில் சேர 5 ஆண்டு ராணுவ பணி கட்டாயம்
by அ.இராமநாதன் Yesterday at 8:00 am

» அமெரிக்காவில் நடைமேடை பாலம் இடிந்து விபத்து: பலர் சிக்கியுள்ளதாக தகவல்
by அ.இராமநாதன் Yesterday at 7:58 am

» மோடிக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்:ஜெகன் மோகன்,நாயுடு கைகோர்ப்பு
by அ.இராமநாதன் Yesterday at 7:56 am

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines விடுகதை-விடைகள்

Go down

விடுகதை-விடைகள்

Post by அ.இராமநாதன் on Fri Feb 23, 2018 9:37 pm

1)ஒன்றும் இரண்டும் சேரில் செல்வம்
மூன்றும் நான்கும் சேரில் குளம்
மூன்றும் ஐந்தும் ஒன்றும் சேரில் கங்கை
மூன்றும் ஆறும் சேரில் பெருமை
ஏழும் எட்டும் சேரில் பருகு அஃது என்ன?
2)சிவப்பு பைக்குள் சில்லறை கொட்டிக் கிடக்குது? அது என்ன?
3)ஆயிரம் தச்சர் கூடி, அழகான மண்டபம் கட்டி, ஒருவன் கண்பட்டு, உடைந்ததாம் மண்டபம். அது என்ன?
4)ஒத்த கால் குள்ளனுக்கு எட்டு கைகள்.அவன் யார்?
5)பூ பூப்பது கண்ணுக்குத் தெரியும். காய் காய்ப்பது கண்ணுக்குத் தெரியாது. அது என்ன?
6)குதிரை ஓட ஓட வால் குறையும்.அது என்ன?
7 )பூக்கும்,காய்க்கும்,வெடிக்கும். ஆனால் பழுக்க மட்டும் செய்யாது.அது என்ன?
8 )தொப்பைப் பையனுக்கு ஒரு வாசல். தோழனுக்கு இரண்டு வாசல்.அவன் யார்?
9 ) அடிப்பக்கம் மத்தளம்,இலை பர்வதம், குலை பெரிது,காய் துவர்ப்பு,கனி தித்திப்பு - அது என்ன?
10 )ஒருவனுக்கு உணவளித்தால் ஊரையே கூட்டுவான்.அவன் யார்?   
11)இடி இடிக்கும், மின்னல் மின்னும்,ஆனால் மழை பெய்யாது.- அது என்ன?
12 )ஆயிரம் பேர் அணிவகுத்தாலும் ஆரவாரம் இராது.அவர்கள் யார்?
13 )எத்தனை தரம் சுற்றினாலும் தலை சுற்றாது.அது என்ன?
14 ) குடிக்க உதவாத நீர் , குளத்தில் தங்காத நீர் , தொடமுடியாத நீர் ,கண்களுக்கு மட்டுமே தெரியும் நீர் .அது என்ன?
15 ) காலில் தண்ணீர் குடிப்பான்.தலையில் முட்டையிடுவான். அவன் யார்? 
16) நீருக்குள் இருக்கும்; மீனும் அல்ல. வெளியில் வந்தால் எரியும்; நெருப்பும் அல்ல அது என்ன?
17) ஊர்ந்து தவழ்ந்து அலையும், ஊழியந்தனில் உயரும், கூர்ந்து நகர்ந்து எங்கும் கூடி இரையைச் சேர்க்கும், கண்ணில்லாச் சிறிய உயிர். அது என்ன?
18) பனி ஊரில் பிறந்த பழம், பார்க்கச் சிவப்புப் பழம், தினம் ஒன்று சாப்பிட்டால் மருத்துவரை விரட்டும் பழம். அது என்ன?
19) முட்டையிடும் குஞ்சு பொரிக்காது, கூட்டில் குடியிருக்கும், கூடு கட்டத் தெரியாது. குரலில் இனிமையுண்டு, சங்கீதம் தெரியாது. அது என்ன?
20) எட்டெழுத்து ஊர் அதுவாம், யார்க்கும் தெரிந்த ஊர் அதுவாம், முதலும் இரண்டும் அழகாகும். மூன்றும் நான்கும் பதிலாகும். அய்ந்தும் ஆறும் மருந்தாகும். ஏழும் எட்டும் அடிமரமாம். அந்த ஊர் எந்த ஊர்?
21) சேலை  ஊடுத்தியிருக்கும் பெண்ணல்ல; அதனுள்ளே முத்து இருக்கும்; சிப்பியல்ல, தாடியுண்டு கிழவனல்ல மக்களுக்கு உணவாகும். அது என்ன?
22) உச்சியில் பூவிருக்கும் ஊருணிக் கரையிலிருக்கும் வெள்ளம் புரண்டு வந்தாலும் அவரை வீழ்த்த முடியாது. அது என்ன?
23) பக்கமெல்லாம் முள்ளிருக்கும் பலாக்காயல்ல. உள்ளே வெளுத்திருக்கும் தேங்காயல்ல. உருக்கினால் நெய்வடியும் வெண்ணெய் அல்ல. அது என்ன?
24)கடல் நீரில் பிறந்தானாம் வெள்ளையப்பன்.மழை நீரில் மறைந்தானாம்
வெள்ளையப்பன்......அவன் யார்
?
25)உயர்ந்த இடத்தில் பிறந்தானாம் ஒரு ஜாணு மனுஷன்,ஒரு ஜாணு மனுஷனுக்கு அரை ஜாணு குடுமி...............அவன் யார்?
26)மூடித் திறக்கும் பெட்டி முத்திருக்கும் பெட்டி பாட்டுப் பாடும் பெட்டி
பாம்பிருக்கும் பெட்டி...............அது என்ன பெட்டி?
27)காகிதத்தைப் பார்த்தாலே குட்டியக்கா கண்ணீரு வுடுவாளே குட்டியக்கா
முக்காடு போட்டிருப்பா குட்டியக்கா சொருக குச்சி வச்சிருப்பா குட்டியக்கா......அவள் யார்?
28)மரம் போல வளர்ந்திருக்கும்  வேர் இருக்காது  கிளையிருக்கும் கிளைதனிலே இலை இருக்காது..................அது என்ன?
29) மஞசள் போர்வைக்குள் வெள்ளையப்பன்.அது யார்?
30) பகிர்ந்து உண்ணும் கருத்தம்மா ஆகாயத்தோட்டியும் நான் தானே?
31)உப்புத் தண்ணியோடு உருளுது ஒரு பந்து.அது என்ன?
32)கோயிலைச் சுற்றி கருப்பு! கோயிலுக்குள் வெளுப்பு! அது என்ன? 
33)யாரும் விரும்பாத மீசைக்காரனுக்கு எங்கு சென்றாலும் அடி உதை அவன் யார்?
34)அண்ணனின் தயவால் ஆட்சி செய்து கொண்டிருக்கும் அழகான தம்பி அவன் யார்?
35)சிவப்புப் பெட்டிக்குள் சிறிய பெரிய செய்திகள் அது என்ன?
36) சித்திரையில் சிறு பிள்ளை வைகாசியில் வளரும் பிள்ளை ஆனியில் அழகுப்பிள்ளை ஆடியில் விழும் பிள்ளை!-அது என்ன?  
37) உங்கள் அக்கா குளித்ததும் கருப்பு. எங்கள் அக்கா 
குளிக்காமல் சிகப்பு. அது என்ன?
38) அள்ள அள்ள பெரிதாகும். அது என்ன?
39) துடித்து இடி இடிக்கும். சடசடவென்று படபடக்கும்.
அது என்ன?
40) இரட்டைக் கிளவியில் ஒற்றை ஓணான் .அது என்ன?
41) எங்க அக்கா குள்ளக்கா...எது வைத்தாலும் தாங்கும்க்கா..
அது என்ன?
42) பச்சை பச்சை டாக்டர், பால் பால் டாக்டர், குண்டு குண்டு
டாக்டர், குதிரை வால் டாக்டர்..அது என்ன?
43) ஆழக் குழி தோண்டி அதிலே ஓர் முட்டை இட்டு
அண்ணாந்து பார்த்தால் தொண்ணூறு முட்டை..அது என்ன?
44) ஏணி, ஏணி மேலே கோணி, கோணி மேலே குண்டு,
குண்டு மேலே புல்லு, அது என்ன?

45) பையில் இது இருந்தால் வேறு எதுவும் இருக்காது - அது என்ன?
46) நூறு கிளிக்கு ஒரே வாய் - அது என்ன?
47) பயந்தால் விட மாட்டான். பழகினால் மறக்க மாட்டான் 
அது என்ன?
48) உச்சிக்கிளையில் சாட்டை தொங்குது - அது என்ன?
49) ஊசி மூக்கன், உள்ளங்கை கட்டையன் , ஊருக்கு
செல்லப்பிள்ளை - அது என்ன?
50) வாசலில் பூத்திருக்கும் வாழ்வரசி - அவள் யார்?
51) பிடிக்கவே முடியாத கள்வன் அவன் யார்?
52) பூவில் பிறக்கும், நாவில் சுவைக்கும் - அது என்ன?
53) மொட்டைப் பாறையில் மூடிய கண்கள் மூன்று - அது என்ன?
54) கொடுக்க முடியும், எடுக்க முடியாது - அது என்ன?
55) அண்ணன் தம்பி சேராவிட்டால் ஊருக்கெல்லாம்
கொண்டாட்டம் - அது என்ன?
56) சிவப்புப் பெட்டிக்குள் சில்லறை கொட்டிக் கிடக்குது -
அது என்ன? 
57) மூன்று கண்கள் இருக்கும், இவனால் பார்க்க முடியாது -
அது என்ன?
58) நெருப்பு பட்டால் அழுவான் - அவன் யார்?      
59) அடியில் உள்ளவன் அடக்கமாயிருப்பான் மேலே உள்ளவன் நறுக்கென்று கடிப்பான் - அவன் யார் ?

60) ராத்திரி பிறந்த பையன் தலைப்பாகையுடன் பிறந்தான் -அவன் யார் ? 
61) விழுந்தால் படுக்காது அழந்தால் நிற்காது - அது என்ன ? 
62) ஆகாயத்தில் காற்றுக்கு ஆடும் அரிவாள்கள் - அது என்ன ? 
63) நான் ஏறும் குதிரை நாலு கால் குதிரை ,அந்த குதிரைக்கு ஆயிரம் கண்கள் - அது என்ன? 
64) வேகமாய் போகிற அம்மணிக்கு விழுந்த கைக்குட்டையை எடுக்க நேரமில்லை - அது என்ன ?
65) நாளெல்லாம் நடந்தால் கூட நான்கடி செல்லாத நாயகன் அவனுக்கோ உடல் முழுக்க கவசம் வேறு - அது என்ன ? 
66) ஆற்றோரம் பிறந்து அழகழகாய் விரிந்து சந்தைக்கு வந்து மாமன் வாங்கிபோனால் மங்கை நல்லாள் சிரிப்பாள் - அவள் யார் ?  
67) குதி குதியெனக் குதிக்கிறான், கொட்டைப்
பல்லால் சிரிக்கிறான் - அது என்ன?
68) குழந்தைக்கு எந்தக் கை பலமான கை?
69) குட்டியும் போடும், குவலயத்திலும் பறக்கும் - அது என்ன?
70) குட்டைப் பெண்ணுக்கு எட்டு முழச்சேலை - அது என்ன?
71) குடுக்கை நிறைய வைரமணி - அது என்ன?

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 26181
Points : 57135
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

Re: விடுகதை-விடைகள்

Post by அ.இராமநாதன் on Fri Feb 23, 2018 9:38 pm

1)திருவாவினன்குடி
2)காய்ந்த சிவப்பு மிளகாய் (மிளகாய் வற்றல்)
3)தேன்கூடு
4)குடை
5)நிலக்கடலை
6)ஊசி நூல்
7)இலவம்பஞ்சு
8)சட்டை
9)வாழை மரம்
10)காகம்
11) பட்டாசு
12 )எறும்பு
13 )மின் விசிறி / காற்றாடி
14 )கானல் நீர்
15 )தென்னை மரம்
16) பாஸ்பரஸ்
17) எறும்பு
18) ஆப்பிள்
19) குயில்
20) திருவிடைமருதூர்
21) மக்காச்சோளம்
22) நாணல்
23) ஆமணக்குக்காய்
24) உப்பு
25) தேங்காய்
26) வாய்
27) பேனா
28) தந்திக் கம்பம்
29)வாழைப்பழம்
30)காகம்
31) கண்ணீர், கருவிழி
32) சோற்றுப்பானை
33) கரப்பான்பூச்சி 
34) சூரியன் - நிலவு 
35) அஞ்சல் பெட்டி 
36) பனம்பழம்
37) அடுப்புக் கரி/நெருப்பு
38) குழி (பள்ளம்)
39) பட்டாசு, வெடி
40) இரயில் வண்டி
41) அடுப்பு
42) வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு
43) தென்னை மரம்
44) மனிதன்
45) ஓட்டை
46) வாழைப்பூ
47)  நாய்
48) முருங்கை காய்
49) வெற்றிலை
50) கோலம்
51) புகை
52) தேன்
53) தேங்காய்
54) கல்வி
55) தண்டவாளம் 
56) மிளகாய் வற்றல் 
57) தேங்காய்
58) மெழுகுவத்தி    
59) பாக்கு வெட்டி  
60) காளான்
61) தஞ்சாவூர் பொம்மை
62) புளியங்காய்
63) கயிற்றுக் கட்டில்
64)  பறவை இறகு
65) நத்தை
66) கோரைப் பாய்
67) சோளப்பொறி
68)அழுகை
69) வௌவால்
70) நீர் இறைக்கும் வாளி
71) மாதுளம் பழம்
 

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 26181
Points : 57135
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum