"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» வினாத்தாள் அவுட் ஆகியும் ஏன் உன்னால பாஸ் ஆக முடியலே?
by அ.இராமநாதன் Today at 10:56 pm

» பல்சுவை - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Today at 10:47 pm

» நிதானத்தைக் கடைப்பிடி,...
by அ.இராமநாதன் Today at 10:37 pm

» விண்மீன்கள் - கவிதை
by அ.இராமநாதன் Today at 5:03 pm

» நொடிக் கதைகள்
by அ.இராமநாதன் Today at 4:59 pm

» மல்லையா, நிரவ் மோடி போல 31 பேர் இந்தியாவை விட்டு தப்பி ஓடியுள்ளனர் - மத்திய மந்திரி தகவல்
by அ.இராமநாதன் Today at 8:47 am

» இந்திய வீரர் வீராங்கணைகளுக்கு ஜப்பான் முட்டை...
by அ.இராமநாதன் Today at 8:40 am

» தனுஷ் இயக்கும் அடுத்த படத்தின் பெயர் ‘நான் ருத்ரன்’?
by அ.இராமநாதன் Today at 8:38 am

» சுசீந்தரனின் ’ஏஞ்சலினா’ படப்பிடிப்பு நிறைவடைந்தது
by அ.இராமநாதன் Today at 8:37 am

» ஒரு சாவி கூட பீரோவுக்கு பொருந்த மாட்டேங்குதே?
by அ.இராமநாதன் Yesterday at 11:59 pm

» 2 கி.மீ தூரத்தை 2 மணி 44 நிமிடங்களில் கடந்து சாதனை படைத்த சைலேந்திரபாபுவின் நீச்சல் குழு!
by அ.இராமநாதன் Yesterday at 11:42 pm

» பள்ளிக்கு ஒரு லட்சம் சீர்வரிசை... ஆசிரியர்களைப் பிரமிக்க வைத்த ஊர்மக்கள்
by அ.இராமநாதன் Yesterday at 11:33 pm

» - கொஞ்ச நேரம் நடிக்கலாம்
by அ.இராமநாதன் Yesterday at 10:43 pm

» - இரும்பு இதயங்களுக்கான திறவுகோல்
by அ.இராமநாதன் Yesterday at 10:31 pm

» அதிர்ஷ்டம் உழைப்பின் முதுகில் ஒட்டிககிடக்கும்
by அ.இராமநாதன் Yesterday at 10:30 pm

» போலி நபரை பரீட்சை எழுத அனுப்பி விட்டு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த பள்ளி முதல்வர்
by அ.இராமநாதன் Yesterday at 8:20 pm

» நீர்பயாவின் தாயார் நல்ல உடலமைப்பு கொண்டவர் விருது விழாவில் முன்னாள் டிஜிபி சர்ச்சை பேச்சு
by அ.இராமநாதன் Yesterday at 8:18 pm

» பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி
by அ.இராமநாதன் Yesterday at 8:12 pm

» பெண் நிருபரை சீண்டிய அமைச்சர் விஜயபாஸ்கர்
by அ.இராமநாதன் Yesterday at 8:09 pm

» தமிழக பாஜ அடுத்த தலைவர் யார்?
by அ.இராமநாதன் Yesterday at 8:07 pm

» தேசிய கீதத்தில் திருத்தம்: காங்., எம்பி., தீர்மானம்
by அ.இராமநாதன் Yesterday at 8:06 pm

» ஓட்டுக்குப் பணம் தர நாங்கள் தயார்....
by அ.இராமநாதன் Yesterday at 4:54 pm

» வேண்டாம் தாயீ....மூணாவது நாளா பட்டினி கிடந்துட்டுப் போறேன்...
by அ.இராமநாதன் Yesterday at 4:51 pm

» இங்கேயும் இடது - அங்கேயும் அதே!
by அ.இராமநாதன் Yesterday at 2:51 pm

» முல்லா நஸ்ருதீன்!
by அ.இராமநாதன் Yesterday at 2:47 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by அ.இராமநாதன் Yesterday at 2:20 pm

» கீர்த்தி சுரேஷ் மகிழ்ச்சி
by அ.இராமநாதன் Yesterday at 2:16 pm

» குடியிருப்பு பகுதியில் புகுந்த மலைப் பாம்பு: லாவகமாக பிடித்த பெண்
by அ.இராமநாதன் Yesterday at 2:12 pm

» மலச்சிக்கலை தீர்க்கும் சூசி முத்திரை
by அ.இராமநாதன் Yesterday at 2:01 pm

» துல்கர் சல்மான் ஜோடியாக நடிக்கும் சோனம் கபூர்
by அ.இராமநாதன் Yesterday at 1:55 pm

» வீராணம் ஏரி நீர் திடீர் நிறுத்தம்: சென்னையில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படுமா?
by அ.இராமநாதன் Yesterday at 1:52 pm

» வெல்வெட் நகரத்தில் வரலட்சுமி சரத்குமார்
by அ.இராமநாதன் Yesterday at 12:53 pm

» சாவித்திரி வேடத்தில் நடிக்கும் கீர்த்தி சுரேஷ் தோற்றம் வெளியானது
by அ.இராமநாதன் Yesterday at 12:49 pm

» இந்தியன் ஆயில் கார்ப்பரே‌ஷன் பெட்ரோல் பங்கில் 5 கிலோ சமையல் கியாஸ் விற்பனை
by அ.இராமநாதன் Yesterday at 12:42 pm

» லட்சுமி கடாட்சம் பெற விரும்புபவர்கள் சண்டை போடுவதைத் தவிருங்கள்.
by அ.இராமநாதன் Yesterday at 9:37 am

» ஆவடியில் ராணுவ உடை தொழிற்சாலை மூடப்படாது: மத்திய அரசு அறிவிப்பால் தொழிலாளர்கள் மகிழ்ச்சி
by அ.இராமநாதன் Yesterday at 9:12 am

» வந்துவிட்டது, ‘வைசார்ஜர்’
by அ.இராமநாதன் Yesterday at 9:04 am

» முத்தரப்பு கிரிக்கெட்டில் வங்காளதேசத்தை வீழ்த்தியது இந்தியா: வாஷிங்டன் சுந்தரின் மாயாஜால பந்துவீச்சால் வெற்றி பெற்றோம்
by அ.இராமநாதன் Yesterday at 8:59 am

» காங். மாநாடு இன்று துவக்கம்
by அ.இராமநாதன் Yesterday at 8:20 am

» 12 பேர் ராஜ்யசபா எம்.பி.க்களாக போட்டியின்றி தேர்வு
by அ.இராமநாதன் Yesterday at 8:04 am

» ஜனாதிபதியின் அதிகாரப்பூர்வ டுவிட்டரில் முதன்முறையாக தமிழ்
by அ.இராமநாதன் Yesterday at 8:02 am

» அரசு வேலையில் சேர 5 ஆண்டு ராணுவ பணி கட்டாயம்
by அ.இராமநாதன் Yesterday at 8:00 am

» அமெரிக்காவில் நடைமேடை பாலம் இடிந்து விபத்து: பலர் சிக்கியுள்ளதாக தகவல்
by அ.இராமநாதன் Yesterday at 7:58 am

» மோடிக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்:ஜெகன் மோகன்,நாயுடு கைகோர்ப்பு
by அ.இராமநாதன் Yesterday at 7:56 am

» ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Thu Mar 15, 2018 9:56 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines ஓலமிடும் ஆற்று மணல் ! நூல் ஆசிரியர்கள் : மூத்த எழுத்தாளர் ப. திருமலை, கே.கே.என். ராஜன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.

Go down

ஓலமிடும் ஆற்று மணல் ! நூல் ஆசிரியர்கள் : மூத்த எழுத்தாளர் ப. திருமலை, கே.கே.என். ராஜன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.

Post by eraeravi on Fri Feb 16, 2018 8:35 am

ஓலமிடும் ஆற்று மணல் !

நூல் ஆசிரியர்கள் : மூத்த எழுத்தாளர் ப. திருமலை,
    கே.கே.என். ராஜன் !


[size=13]நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. 
[/size]

வெளியீடு :
புதிய தரிசனம், 10/1, அப்துல் ரசாக் 2ஆவது தெரு, சைதாப்பேட்டை, சென்னை – 600 015. பக்கம் : 192, விலை : ரூ. 160.******
     ‘ஓலமிடும் ஆற்று மணல்’ நூலின் தலைப்பே சிந்திக்க வைத்தது.  மூத்த எழுத்தாளர் ப. திருமலை அவர்களும் திரு. கே.கே.என். ராஜன் அவர்களும் இணைந்து எழுதியுள்ள நூல்.  ஆற்றுமணல் கொள்கைக்கு எதிரான போராட்ட்த்தில் உயிர்த்தியாகம் செய்தவர்களுக்கு நூலை காணிக்கை ஆக்கி இருப்பது சிறப்பு. பொதுவுடைமைக்கட்சியின் மூத்த தலைவர் நேர்மையான அரசியல்வாதி தோழர் நல்லகண்ணு அவர்களின் அணிந்துரை பொருத்தம்.

     மணல் கொள்ளையடிக்கும் கொள்ளையர்கள் மணல் உற்பத்தி செய்ய முடியாது என்பதை உணர் வேண்டும். இயற்கையாக உருவாவதே மணல் நூலின் தொடக்கத்திலேயே மணல் உருவாகும் விதம் பற்றி எழுதி உள்ளனர்.

     “இயற்கையின் அற்புத நிகழ்வுகளில் மணல் உருவாதலும் ஒன்று.  மணல் உருவாவது என்பது எளிதான விஷயம் அல்ல.  மணல் உருவாக ஆயிரம் ஆண்டுகள் கூட ஆகலாம்.  பருவகால வேறுபாட்டின் காரணமாக பாறைகளில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படுகின்றன.  குளிர்காலத்தில் பாறைகள் இறுக்கமடைகின்றன.  வெயில் காலங்களில் பாறைகள் விரிவடைந்து நொறுங்குகின்றன.  இவ்வாறு நொறுங்கும் பாறைகள் மழைக்காலங்களில் மழைநீரின் வேகத்தில் உருட்டப்படுகின்றன.  இத்தகைய செயல்களால் மோதி மோதி உடைந்து சிறுசிறு துகள்களாக மணலாக மாற்றம் அடைகின்றன.  உடையாத பகுதிகள் கூழாங்கற்களாக உருமாறுகின்றன. உடையாத பகுதிகள் கூழாங்கற்களாக உரு பெறுகின்றன.  அதிக அளவில் உடைந்து மிகச்சிறிய துகள்களாக மாறுகின்ற போது அவைகள் எவ்வித கனமும் இன்றி இருப்பதால் நீரில் மிதந்து அடித்துச் செல்லப்படுகின்றன”.

     மணல் என்று சாதாரணமாக நினைக்கும் நாம் அந்த மணல் உருவாகும் விதம் அறிந்து வியந்து விட்டேன்.  இப்படிப்பட்ட இயற்கை வளத்தை கொள்ளையடிப்பது முறையா? வருங்கால சமுதாயத்திற்கு வைத்துச் செல்ல வேண்டிய மணலை கடத்தி விற்பது முறையா? என்ற கேள்வி கேட்கும் நூல் இது.

     மணல் கொள்ளையின் காரணமாக ஆறுகள் மரணத்தை நோக்கிச் செல்கின்றன என்று குறிப்பிட்டுள்ளது உண்மை தான். வரலாற்று சிறப்புமிக்க சங்கப்பாடலில் இடம் பெற்ற வைகை அன்று எப்படி ஓடியது இன்றைக்கு வைகை ஆறு எப்படி உள்ளது என்பதைப் பார்த்தாலே புரியும்.  கள்ளழகர் ஆற்றில் இறங்குவதற்க்குக்க கூட லாரியில் தண்ணீர் கொண்டு வந்து ஊற்றும் நிலைமை ஏன் வந்த்து.  மணல் கொள்ளை தான் மூல காரணம் என்பதை நூல் உணர்த்தியது.

     மணல் பற்றிய பல தகவல்கள் உள்ளன.

     “மணல் உற்பத்திப் பொருள் அல்ல. தண்ணீர் போல் மணலும் இயற்கை அளித்த அருட்கொடை. அனைத்துப் பகுதியிலும் மணல் கிடைக்க்கும் என்று சொல்ல முடியாது”.

     இப்படி மணல் பற்றியே பேசிடும் நூல் இது.  இயற்கை தந்த மணலை பணத்தாசை காரணமாக பலர் கொள்ளையடித்து பக்கத்து மாநிலங்களுக்குக் கடத்தி பகல் கொள்ளை அடித்து வருகின்றனர்.  முற்றிலும் இக்கொள்ளை தடுக்கப்பட வேண்டும் என்ற சிந்தனையை விதைத்தது.

     நீதியரசர் மகாதேவன் அவர்கள் மணல் குவாரிகளை மூடிட வேண்டும் என்று அருமையான தீர்ப்பு வழங்கினார்கள்.  இறக்குமதி செய்யப்பட்ட மணல்களைப் பயன்படுத்தலாம் என்றும் சொன்னார்கள்.  ஆனால் அந்த நல்ல தீர்ப்பிற்கும் தடை வாங்கி மணல் குவாரிகள் மூடாமல் தொடர்ந்து மணல் கொள்ளை நடந்து வருவது வேதனை.

     சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் பலர், குரல் கொடுத்தபோதும் மணல் கொள்ளையர்கள் திருந்துவதாக இல்லை. அரசாங்கமே மது விற்பது போலவே, அரசாங்கமே மணலும் விற்பனை செய்து வருவது தமிழகத்தில் தான்.  குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு ஒட்டுமொத்தமாக எல்லா மணல் குவாரிகளையும் மூடினால் தான் நாட்டின் வளத்தை, ஆறுகளின் நலத்தைக் காத்திட முடியும்.

     மணல் கொள்ளைக்கு அடுக்குமாடி வீடுகளும் காரணமாகின்றன.  அரசுக் கட்டிடங்கள் கட்டுவதற்கும் மணல் பயன்படுத்தப்படுகின்றது.  மணல் அள்ளுவதால் ஏரி, குளங்கள் காணாமல் போகின்றன.  மதுரையில் உள்ள உயர்நீதிமன்றமே உலகனேரி என்ற ஏரியின் மீது கட்டப்பட்டுள்ளது. 

 இதுபோன்று ஏராளமான ஏரிகளையும், குளங்களையும் அரசுக் கட்டிடங்களே ஆக்கிரமித்து உள்ளன.  போனது போகட்டும், இனியாவது விழிப்புணர்வுடன் இருப்போம்.  ஏரிகளையும், குளங்களையும் ஆறுகளையும் காப்போம்.  குறிப்பாக மணல் கொள்ளை எங்கும் நடக்காமல் தடுப்போம். இப்படி பல எண்ணங்களை விதைத்தது இந்த நூல்.

     இந்நூலிற்கு அணிந்துரை வழங்கி உள்ள தோழர் நல்லகண்ணு அவர்கள் தொடர்ந்த வழக்கு விபரமும் நூலில் உள்ளது.

     குவாரிகளை மூடிட நீதிமன்ற உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்ட போதும், பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் அவர்கள் எழுதிய பாடல் வரிகள் தான் நினைவிற்கு வந்தன.

     திட்டம் போட்டு திருடுற கூட்டம்
     திருடிக் கொண்டே இருக்குது - அதை
     சட்டம் போட்டு தடுக்குற கூட்டம்
     தடுத்துக் கொண்டே இருக்குது
     திருடராய் பார்த்து திருந்தாவிட்டால்
     திருட்டை ஒழிக்க முடியாது.     மணல் திருடர்களுக்கு இந்த நூலை வழங்கி படிக்க வைக்க வேண்டும்.  இதில் உள்ள விபரங்களைப் பார்த்து அவர்கள் மனம் திருந்த வாய்ப்பு உண்டு.

     “மணல் திருட்டு மணல் கடத்தல் மணற்கொள்ளை ஆகியவற்றில் ஈடுபடுவோர் மீது அபராதம் விதிப்பதுடன் சிறைதண்டனை வழங்கும் வகையில் சட்டங்கள் கொண்டு வரப்பட வேண்டும் அல்லது இருக்கும் சட்டங்களைக் கடுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும்”.

     மணல் கொள்ளை என்பது வருங்கால சந்ததிகளை வளம் இழந்து வறட்சியில் வாடிட வைக்கும் செயல் என்பதை உணர்ந்து, மணல் கொள்ளையால் பல நீர்நிலைகளை இழந்து விட்டோம். விவசாயம் பொய்த்து விட்டது.  இனியாவது விழிப்புணர்வுடன் இருந்து மணல் வளம் காப்போம். மணல் கொள்ளை ஒழிப்போம்.  மணல் என்பது வருங்கால வைப்பு நிதி என்பதை உணர்த்திடும் நூல்.  நூலாசிரியர்  இருவருக்கும் பாராட்டுக்கள். 

eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2179
Points : 4973
Join date : 18/06/2010

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum