"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» அமெரிக்காவில் நிர்வாண மனிதன் துப்பாக்கிச் சூட்டுக்கு 3 பேர் பலி
by அ.இராமநாதன் Today at 8:10 pm

» மெகா பட்ஜெட்டில் விக்ரம் படம்!
by அ.இராமநாதன் Today at 7:57 pm

» சினி துளிகள்!
by அ.இராமநாதன் Today at 7:56 pm

» மீண்டும் நிவேதா தாமஸ்!
by அ.இராமநாதன் Today at 7:55 pm

» ரீ - மேக்கில், துாறல் நின்னு போச்சு!
by அ.இராமநாதன் Today at 7:54 pm

» சர்ச்சைகளை சந்திக்க தயாராகி விட்ட விஜய்!
by அ.இராமநாதன் Today at 7:53 pm

» கோடை டிப்ஸ்!
by அ.இராமநாதன் Today at 7:48 pm

» தலைவர் உ.பா.பிரியர்னு எப்படி சொல்றே?
by அ.இராமநாதன் Today at 7:45 pm

» ஜாதகத்திலே கன்னி ராசிங்கிறதை மாத்தணும்...!!
by அ.இராமநாதன் Today at 7:37 pm

» இல்லையென ஆகிவிடுமா?
by அ.இராமநாதன் Today at 7:30 pm

» சமூகக் குற்றம்! கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 4:53 pm

» கல்வி அறிவு வழங்கிய சிதம்பரம் ஸ்ரீஜடா விநாயகர்! -
by அ.இராமநாதன் Yesterday at 7:45 am

» ராஜஸ்தானை வீழ்த்தி சென்னை அபாரம்
by அ.இராமநாதன் Yesterday at 7:38 am

» ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
by அ.இராமநாதன் Yesterday at 7:32 am

» ஜோதிகாவின் புதுப் பட டைட்டில் இதுதான்!
by அ.இராமநாதன் Yesterday at 7:30 am

» பொதுக்கூட்டங்களில் வெற்றிடங்களை நிரப்புவார்!
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 11:08 pm

» தலைவர் தத்துவமா பேசறார்....!!
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:46 pm

» பீடி சுற்றும் பெண்கள்
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:33 pm

» லால்பகதூர் சாஸ்திரி
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:31 pm

» பேசாத வார்த்தக்கு நீ எஜமான்...!!
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:27 pm

» பொது அறிவு தகவல்கள்
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:23 pm

» மனைவியை அரசியலுக்கு கொண்டு வந்தது தப்பு...!!
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:15 pm

» தைராய்டு பிரச்சனைக்கு...
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:11 pm

» மூத்தோர் சொல் அமிழ்தம் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:09 pm

» ட்விட்டரில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:02 pm

» தலைவருக்கு ஓவர் மறதி...!!
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 9:57 pm

» ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 9:16 pm

» நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 6:02 pm

» சிறுமி பலாத்காரம் நாட்டிற்கே அவமானம் : ஜனாதிபதி
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 5:25 pm

» சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 4:58 pm

» தலைமை நீதிபதி மீது கண்டன தீர்மானம்: 7 கட்சி ஆதரவு
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 4:57 pm

» பெண்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளில் 48 எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள்
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 4:53 pm

» கடல் சீற்றம்: குமரி, ராமநாதபுரம் மீனவர்களுக்கு எச்சரிக்கை
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 4:50 pm

» இணைய வெளியினில....
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 1:30 pm

» பசித்த வயிறு கற்றுத்தரும் வாழ்க்கை
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 1:27 pm

» 10 பர்சென்ட் கேஷ்பேக் ஆஃபர் சாமி...!!
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 1:23 pm

» ஃபேஸ்புக் ஸ்மைல்
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 1:16 pm

» சர்வ தேச ரத்தம் உறையாமை தினம்
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 12:07 pm

» சர்வ தேச கல்லீரல் தினம்
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 11:59 am

» தக்காளி விஷயத்தில் கவனிக்க....
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 11:55 am

» ட்விட்டரில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 11:53 am

» பன்னாட்டுப் பழமொழிகள்
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 11:41 am

» கேரளா பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் நயன்தாரா.
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 11:36 am

» 100 பந்து கிரிக்கெட் தொடரை அறிமுகப் படுத்துகிறது இங்கிலாந்து
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 9:45 am

» நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 9:42 am

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines புரோஸ்டேட் சுரப்பி என்றால் என்ன?

Go down

புரோஸ்டேட் சுரப்பி என்றால் என்ன?

Post by அ.இராமநாதன் on Fri Jan 12, 2018 10:10 pm

புரோஸ்டேட் சுரப்பி என்றால் என்ன?
-
ஆண்களின் சிறுநீர்ப் பையை ஒட்டியவாறு, சிறுநீர்ப்பாதையின் 
அருகில் இருக்கும், 20 முதல் 25 கிராம் எடையுள்ள சுரப்பி.
புரோஸ்டேட் சுரப்பியில், 


கட்டி ஏற்பட காரணம் என்ன?
-
டெஸ்டோஸ்டிரோன் (Testosterone) என்னும் ஹார்மோன் 
சுரப்பு, 40 வயதுக்கு மேல் அதிகரிப்பதால், வீக்கமடைந்து 
புரோஸ்டேட் சுரப்பியில் பாதிப்பு ஏற்படுகிறது.


புரோஸ்டேட் சுரப்பியில் கட்டி இருப்பதற்கான அறிகுறிகள் 
என்னென்ன?
-
சிறுநீர் கழிப்பதில் சிரமம், சிறுநீரில் ரத்தம் வெளியேறுவது, 
அடிக்கடி சிறுநீர் வரும் உணர்வு, சிறுநீர் வராமல் அடைத்துக் 
கொள்வது, சிறுநீர்த் தொற்று, சிறுநீர்ப்பையில் கல் உருவாவது, 
போன்றவை.புரோஸ்டேட் சுரப்பி கோளாறுகளை 


கண்டறியும் பரிசோதனைகள் என்னென்ன?
-
மல வாய் பரிசோதனை (DRE), அல்ட்ரா சவுண்ட், சிறுநீர் 
மற்றும் ரத்தப் பரிசோதனைகள் உள்ளன. புரோஸ்டேட் அளவு, 
வடிவத்தை இதில் அறியலாம். புற்றுநோய் காரணமாக, 
புரோஸ்டேட் சுரப்பி உயிரணுக்கள் (PSA}
அதிக அளவில் புரதத்தை உற்பத்தி செய்கின்றனவா 
என்பதையும் தெரிந்து கொள்ளலாம். 


இப்பாதிப்பு யாருக்கெல்லாம் வரும்?


40 வயதிற்கு குறைவான ஆண்களில் அரிதாகவும், 60 வயது
 ஆண்களுக்கு, 50 சதவீதமும், 70 முதல், 80 வயது ஆண்களுக்கு, 
அதிக அளவிலும், இப்பாதிப்பு ஏற்படலாம்.


புரோஸ்டேட் சுரப்பியில் இருக்கும் கட்டியின் தன்மையை 
அறிவது எப்படி?


மல வாய் பரிசோதனை (DRE), ஸ்கேன் மற்றும் ரத்தப் 
பரிசோதனைகள் மூலம் அறியலாம்.


சிகிச்சைகள் என்னென்ன?


புரோஸ்டேட் சுரப்பியின் வளர்ச்சி, ஆரம்ப கட்டத்தில் இருந்தால், 
மருந்துகளே போதுமானது. மருந்துகள் பயனளிக்காத,
 10 சதவீதம் நோயாளிகளுக்கு, எண்டோஸ்கோபி எனப்படும் 
நுண்துளை அறுவைச் சிகிச்சையின் மூலம் குணப்படுத்தலாம்.


இப்பிரச்னையால், சிறுநீர் கழிப்பதில் ஏன் சிரமம் ஏற்படுகிறது?


சிறுநீர் செல்லும் குழாயை ஒட்டியவாறு புரோஸ்டேட் சுரப்பி 
உள்ளது. வயது அதிகரிக்கும் ஆண்களுக்கு, புரோஸ்டேட் சுரப்பி 
சிறுநீர்ப் பாதையை அழுத்துவதால், சிறுநீர் ஓட்டம் குறைகிறது.


இதனால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும்?
-
சிறுநீரகப் பாதை தொற்று, சிறுநீர் வருவதை கட்டுப்படுத்த
 இயலாதநிலை உட்பட சிறுநீரகங்கள் தொடர்பான அனைத்துப் 
பிரச்னைகளும் ஏற்படும்.


புரோஸ்டேட் சுரப்பியில் கட்டியை திறந்த நிலை அறுவைச் 
சிகிச்சையின் மூலம் அகற்றலாமா?


70 முதல் 300 கிராம் வரை உள்ள பெரிய கட்டிகளையும் 
ஹோல்மியம் லேசர் சிகிச்சை (Holep) மூலம் அகற்ற 
முடிகிறது. இது எண்டோஸ்கோபி எனப்படும் நுண்துளை 
அறுவைச் சிகிச்சை ஆகும். இதன் மூலம், ரத்த விரயமும் 
குறைவாக இருக்கும்.
-
---------------------------------
டாக்டர் எம்.ஜீவகன் 
சிறுநீரக அறுவைச் சிகிச்சை சிறப்பு நிபுணர், 
காவேரி மருத்துவமனை,
சென்னை.
நன்றி - தினமலர்

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
http://rammalar.wordpress.com
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 27176
Points : 59496
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum