"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» நீட் தேர்வு; தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வாய்ப்பில்லை: மத்திய அமைச்சர் அஸ்வினி குமார்
by அ.இராமநாதன் Today at 3:57 am

» ரெயிலில் பெண்கள் பெட்டியில் ஏறி சில்மிஷத்தில் ஈடுபட்ட சாமியார்; பெப்பர் ஸ்பிரே அடித்த மாணவி
by அ.இராமநாதன் Today at 3:54 am

» ஏ.சி. எந்திரம் வெடித்து தலைமை ஆசிரியை பலி
by அ.இராமநாதன் Today at 3:52 am

» உலகின் மிக வயதான ஜப்பானிய பெண் 117வது வயதில் மரணம்
by அ.இராமநாதன் Today at 3:50 am

» பாலியல் வன்கொடுமைக்கு தூக்கு தண்டனை: உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டார் ஸ்வாதி மாலிவால்
by அ.இராமநாதன் Today at 3:47 am

» என் தந்தைக்குள் சக்தி வாய்ந்த ஒரு தலைவர் இருக்கிறார்-சுருதிஹாசன்
by அ.இராமநாதன் Today at 3:45 am

» அமெரிக்காவில் நிர்வாண மனிதன் துப்பாக்கிச் சூட்டுக்கு 3 பேர் பலி
by அ.இராமநாதன் Yesterday at 8:10 pm

» மெகா பட்ஜெட்டில் விக்ரம் படம்!
by அ.இராமநாதன் Yesterday at 7:57 pm

» சினி துளிகள்!
by அ.இராமநாதன் Yesterday at 7:56 pm

» மீண்டும் நிவேதா தாமஸ்!
by அ.இராமநாதன் Yesterday at 7:55 pm

» ரீ - மேக்கில், துாறல் நின்னு போச்சு!
by அ.இராமநாதன் Yesterday at 7:54 pm

» சர்ச்சைகளை சந்திக்க தயாராகி விட்ட விஜய்!
by அ.இராமநாதன் Yesterday at 7:53 pm

» கோடை டிப்ஸ்!
by அ.இராமநாதன் Yesterday at 7:48 pm

» தலைவர் உ.பா.பிரியர்னு எப்படி சொல்றே?
by அ.இராமநாதன் Yesterday at 7:45 pm

» ஜாதகத்திலே கன்னி ராசிங்கிறதை மாத்தணும்...!!
by அ.இராமநாதன் Yesterday at 7:37 pm

» இல்லையென ஆகிவிடுமா?
by அ.இராமநாதன் Yesterday at 7:30 pm

» சமூகக் குற்றம்! கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 4:53 pm

» கல்வி அறிவு வழங்கிய சிதம்பரம் ஸ்ரீஜடா விநாயகர்! -
by அ.இராமநாதன் Sat Apr 21, 2018 7:45 am

» ராஜஸ்தானை வீழ்த்தி சென்னை அபாரம்
by அ.இராமநாதன் Sat Apr 21, 2018 7:38 am

» ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
by அ.இராமநாதன் Sat Apr 21, 2018 7:32 am

» ஜோதிகாவின் புதுப் பட டைட்டில் இதுதான்!
by அ.இராமநாதன் Sat Apr 21, 2018 7:30 am

» பொதுக்கூட்டங்களில் வெற்றிடங்களை நிரப்புவார்!
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 11:08 pm

» தலைவர் தத்துவமா பேசறார்....!!
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:46 pm

» பீடி சுற்றும் பெண்கள்
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:33 pm

» லால்பகதூர் சாஸ்திரி
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:31 pm

» பேசாத வார்த்தக்கு நீ எஜமான்...!!
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:27 pm

» பொது அறிவு தகவல்கள்
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:23 pm

» மனைவியை அரசியலுக்கு கொண்டு வந்தது தப்பு...!!
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:15 pm

» தைராய்டு பிரச்சனைக்கு...
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:11 pm

» மூத்தோர் சொல் அமிழ்தம் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:09 pm

» ட்விட்டரில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:02 pm

» தலைவருக்கு ஓவர் மறதி...!!
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 9:57 pm

» ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 9:16 pm

» நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 6:02 pm

» சிறுமி பலாத்காரம் நாட்டிற்கே அவமானம் : ஜனாதிபதி
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 5:25 pm

» சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 4:58 pm

» தலைமை நீதிபதி மீது கண்டன தீர்மானம்: 7 கட்சி ஆதரவு
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 4:57 pm

» பெண்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளில் 48 எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள்
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 4:53 pm

» கடல் சீற்றம்: குமரி, ராமநாதபுரம் மீனவர்களுக்கு எச்சரிக்கை
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 4:50 pm

» இணைய வெளியினில....
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 1:30 pm

» பசித்த வயிறு கற்றுத்தரும் வாழ்க்கை
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 1:27 pm

» 10 பர்சென்ட் கேஷ்பேக் ஆஃபர் சாமி...!!
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 1:23 pm

» ஃபேஸ்புக் ஸ்மைல்
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 1:16 pm

» சர்வ தேச ரத்தம் உறையாமை தினம்
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 12:07 pm

» சர்வ தேச கல்லீரல் தினம்
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 11:59 am

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



ஹைக்கூ உலா ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !

Go down

ஹைக்கூ உலா ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !

Post by eraeravi on Tue Dec 19, 2017 9:53 pm

ஹைக்கூ உலா !
நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி !

நூல் விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !

வெளியீடு : வானதி பதிப்பகம், 23, தீனதயாளு தெரு,
தியாகராய நகர், சென்னை-600 017.தொலைபேசி : 044 24342810, 24310769 மின்னஞ்சல் :
vanathipathippakam@gmail.com  விலை : ரூ. 80.
******
நுழைவாயில் :
      ஹைக்கூ திலகம் இரா.இரவியின் பதினேழாவது நூலான ‘ஹைக்கூ உலா’ நூற்றுப் பதினேழு பக்கங்களை உள்ளடக்கிய உன்னத நூல்.  ஹைக்கூ என்னும் பாரசூட்டில் ஏறிப் பயணித்தால் சமூக விபத்துக்கள் எதுவும் நேராமல் சமநிலைச் சாலையில் சீராகப் பயணிக்கலாம் என்பதோடு இலக்கியப் பயணம் வாசகர் வாழ்வை வண்ணத்துப்பூச்சியாய் ஒளிரச் செய்யும் என்பதனை முன் அட்டைப்படம் கூறுகின்றது.
      சிவபெருமானுக்கு வலமும் புறமுமாய் நந்தனாரும் ஞானசம்பந்தரும் அமைந்தது போல, இரா.இரவிக்கு தமிழ்த்தேனீயாய் இரா. மோகன் அவர்களும், இளைஞர்களின் மனத்தில் வாசம் புரியும் இறையன்பு அவர்களும் பக்கபலம் என்பதனை நூலின் பின் அட்டைப்படம் உணர்த்துகின்றது.
எது முதல் எது வரை?
      உழவர் முதல் உதிரிப்பூக்கள் வரை, ஜல்லிக்கட்டு முதல் கால்கட்டு வரை, தன்னம்பிக்கை முதல் தானம் வரை, அறம் முதல் மரம் வரை, காதல் முதல் கந்துவட்டி வரை, சில்வண்டு முதல் துப்பாக்கி குண்டு வரை, கரையோர நாணல் முதல் காட்தோரத் தேக்கு வரை என கற்காலத்திலிருந்து கணினி காலம் வரை அலசி ஆராய்ந்து ஆணிவேர் எது, சிறுவேர் எது? பெருவேர் எது? என்று இந்நூல் முழுவதும் சுட்டிக்காட்டுகிறார் கவிஞர் இரா.இரவி.
கவிஞர் கரங்களில் ...
      பக்கத்திற்குப் பக்கம் வானவில் வளைகின்றது.  வளைந்த வானவில்லோ வர்ணங்களோடு வசனத்தையும் பிரதிபலிக்கின்றது.  துள்ளிக் குதிக்கும் மீன்களோ தண்ணீரிலிருந்து தாவி தரைக்கு வந்து கவிஞரின் உள்மனதோடு உரையாடி விட்டுச் செல்கின்றது. இரும்பு கூட கரும்பாக உருமாறி இனிமை பேசுகின்றது.  இஷ்டப்பட்டு கஷ்டப்பட்டு என சோளக்கதிர் சொல்லாமல் சொல்கின்றது.

செம்பருத்தி செடியில் இருந்து கொண்டு சிரிக்கின்றது.  வேப்பம்பூவோ தித்திக்கின்றது. ஆமையோ கூட்டிலிருந்து எட்டிப் பார்த்து உயர்திணை உயிர்க்கு புத்தி புகட்டிச் செல்கின்றது. தாமரை மலரோ கரைக்கு வரை தத்துவம் பேசுகின்றது.  சில்வண்டு நூலை வாசிக்கும் வாசகர்கள் காதிற்கும் வந்து சீண்டிச் செல்கின்றது.  மரங்களும், மரத்தில் பூக்கும் மலர்களும் மனிதனால் உருவெடுத்து கவிஞரிடம் மண்டியிட்டுப் பேசுகின்றன.
பழமொழியா? புதுமொழியா?
      பழமொழிகளை எல்லாம் புதுமொழிகளாக்கி அவற்றை அனைவர்க்கும் புரியும் வண்ணமாய் பொதுமொழிகளாக்கி ஹைக்கூ வடிவத்தில் வழங்குவதில் கவிஞர் இரா.இரவிக்கு நிகர் அவர் மட்டுமே.  உதாரணத்திற்கு இதோ ஒன்றிரண்டு – ஹைக்கூ.
      “திரைகடல் ஓடி
      திரவியம் தேடினால்
      சுடுகிறான் சிங்களன்”       (ப.109)
மூடப்பழக்கத்திற்கு முட்டுக்கட்டைப் போடும் கவிதை இதோ.
      “பொய் சொன்ன வாய்க்கு
      போசனம் கிடைத்தது
      சோதிடர்”                    (ப.53)
காகிதக் கல்வெட்டு :
      “தனித்து இருந்தால் கிழிக்கலாம்
      சேர்ந்து இருந்தால் கிழிக்க முடியாது
      காகிதம்”                     (ப.103)
சாட்டையடி கவிதை :
      “நடிகர் விளம்பரத்தில் ஒருமுறை
      நாம் பலமுறை குடிக்கிறோம்
      குளிர்பானம்”                (ப.50)
கருணைக் கவிதை :
      “மதிக்கப்படுகின்றன
      வருடத்தில் ஒரு நாள்
      எருக்கம்பூக்கள்”             (ப. 44)
முரண் நயம் :
      “அடுக்கு மாடியில்
      நெருக்கமான வீடுகள்
      தூரமான மனசுகள்”        
மனதில் பதிந்த கவிதை :
      “தாமதமானாலும்
      இறுதியில் வெல்வது
      அறம்”                        (ப.74)
மனமார ...
      சாதி, மதம், இனம், மொழி, நிறம் என்ற ஐந்து அரக்கர்களையும் ஹைக்கூ என்னும் அஸ்திரம் கொண்டு அடியோடு தகர்க்கும் வல்லமை கவிஞர் இரா. இரவிக்கு உண்டு என்பது மறுக்க முடியாத உண்மை.  காலத்தோடு கரங்கோர்த்து உருமாற்றும் வல்லமை மிக்க இரா. இரவியின் புகழ் இலக்கிய உலகில் பரவி ஒளிரட்டும் என என் போன்ற இணையதள வாசகியர் பாராட்டி மகிழ்கின்றோம்.

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

http://tamil.pratilipi.com/kavignar-eraravi

https://www.facebook.com/rravi.ravi

www.kavimalar.com

http://www.eraeravi.blogspot.in/
.
http://www.tamilthottam.in/f16-forum

http://eluthu.com/user/index.php?user=eraeravi

http://www.eegarai.net/sta/eraeravi

இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !

eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2196
Points : 5024
Join date : 18/06/2010

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum