"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» * மரியாதைகளும் ஒரு சுமையே.
by அ.இராமநாதன் Yesterday at 10:02 pm

» * நிதானமாக ஆத்திரப்படு.- லத்தீன் பழமொழிகள்
by அ.இராமநாதன் Yesterday at 10:01 pm

» அழுவதிலும் நிச்சயம் இன்பம் இருக்கிறது....!!
by அ.இராமநாதன் Yesterday at 9:59 pm

» # பயன்படுத்து, பழுது படுத்தாதே. - லத்தீன் பழமொழிகள்
by அ.இராமநாதன் Yesterday at 9:57 pm

» வண்ணமோ கறுப்பு, குரலோ இனிப்பு - விடுகதைகள்
by அ.இராமநாதன் Yesterday at 9:49 pm

» விடுகதை-விடைகள்
by அ.இராமநாதன் Yesterday at 9:38 pm

» அழகிய காலை வணக்கம்...!
by அ.இராமநாதன் Yesterday at 9:30 pm

» பக்கிங்காம் கால்வாயில் குவியும் வெளிநாட்டு பறவைகள் : மரக்காணத்தில் சுற்றுலா பயணிகள் ஆர்வம்
by அ.இராமநாதன் Yesterday at 6:43 pm

» மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தும் சாயா சிங்
by அ.இராமநாதன் Yesterday at 9:48 am

» மொட்டை மாடியில் விமானம் தயாரித்த விமானிக்கு 35,000 கோடியில் ஆர்டர்
by அ.இராமநாதன் Yesterday at 9:46 am

» தலைமுடி ஸ்டைலை மாற்றிய நடிகை அனுபமா ரசிகர்கள் எதிர்ப்பு
by அ.இராமநாதன் Yesterday at 9:39 am

» குத்துச்சண்டை கற்கும் நடிகை திரிஷா
by அ.இராமநாதன் Yesterday at 9:27 am

» குழந்தைகள் ஆபாச படம், தகவல் பகிர்ந்த ‘வாட்ஸ் அப்’ குழு கும்பல் சிக்கியது
by அ.இராமநாதன் Yesterday at 9:25 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Yesterday at 9:20 am

» மார்ச்-1 முதல் தேர்தல் பத்திரங்கள் விற்பனை
by அ.இராமநாதன் Yesterday at 9:18 am

» தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக சத்யபிரதா சாஹூ நியமனம்
by அ.இராமநாதன் Yesterday at 9:16 am

» சிரிங்க ப்ளீஸ் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Thu Feb 22, 2018 10:47 pm

» இது வாட்ஸ் அப் கலக்கல் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Thu Feb 22, 2018 10:07 pm

» ட்விட்டரில் ரசித்தவை
by அ.இராமநாதன் Thu Feb 22, 2018 7:47 pm

» அறிஞர்கள் சொன்ன முத்தான பத்து
by அ.இராமநாதன் Thu Feb 22, 2018 7:43 pm

» உங்கள் வீட்டில் பயன்படுத்துவது "Sun Flower" எண்ணெயா? இதோ உங்களுக்காக காத்திருக்கும் அதிர்ச்சி தகவல்!!!
by KavithaMohan Thu Feb 22, 2018 7:42 pm

» பிராணாயாமம்
by அ.இராமநாதன் Thu Feb 22, 2018 7:28 pm

» இராயேந்திரனின் எண்ணங்கள்
by ராஜேந்திரன் Thu Feb 22, 2018 11:09 am

» இறக்கை லிங்கம்!
by அ.இராமநாதன் Wed Feb 21, 2018 5:36 pm

» அரசு பள்ளிக்குள் புகுந்து தலைமை ஆசிரியையிடம் சங்கிலி பறிப்பு
by அ.இராமநாதன் Wed Feb 21, 2018 12:50 pm

» கலாம் இல்லத்தில் கமல்; அரசியல் பயணத்தை துவக்கினார்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2018 12:47 pm

» பிரிட்டனில், மூடப்படும் நிலையில் 900 KFC கடைகள்: காரணம் என்ன?
by அ.இராமநாதன் Wed Feb 21, 2018 12:46 pm

» மூட்டையோடு மூட்டையாய் கடத்தப்பட்ட சடலம்: செங்கல்பட்டில் சர்ச்சை!
by அ.இராமநாதன் Wed Feb 21, 2018 12:45 pm

» பண்பே வெல்லும் - கதைப்பாடல்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2018 11:29 am

» மாதிரிப்பள்ளி - சிறுவர் பாடல்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2018 11:25 am

» ஆதிசங்கரர் பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2018 11:20 am

» தண்ணீரே பனிக்கட்டி - சிறுவர்களுக்கான பாடல்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2018 11:15 am

» விலகினால் அடையாளம் - குழந்தைகளுக்கான பாடல்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2018 11:08 am

» பாம்பு இருக்கற இடத்துல பல்லி எப்படி இருக்கும்...?
by அ.இராமநாதன் Tue Feb 20, 2018 9:06 pm

» ‘டியர்... நான் உங்க இதயத்துல இருக்கேனா?’’
by அ.இராமநாதன் Tue Feb 20, 2018 8:57 pm

» இந்த போட்டோ கி.மு.விலே எடுத்தது...!!
by அ.இராமநாதன் Tue Feb 20, 2018 8:46 pm

» படி! படி! - சிறுவர் கவிதை
by அ.இராமநாதன் Tue Feb 20, 2018 8:38 pm

» செயல் - கவிதை
by அ.இராமநாதன் Tue Feb 20, 2018 8:30 pm

» கனவு - கவிதை
by அ.இராமநாதன் Tue Feb 20, 2018 8:29 pm

» வெட்கம் - கவிதை
by அ.இராமநாதன் Tue Feb 20, 2018 8:27 pm

» அழகிய தமிழ் - கவிதை
by அ.இராமநாதன் Tue Feb 20, 2018 8:26 pm

» யாப்பு
by lakshmi.P.R Tue Feb 20, 2018 8:26 pm

» நடவு & ஆசை - கவிதைகள்
by அ.இராமநாதன் Tue Feb 20, 2018 8:23 pm

» சிந்தனை சிகிச்சை-5
by ராஜேந்திரன் Mon Feb 19, 2018 8:39 pm

» வித்தியாசமான வேடத்தில் அனுஷ்கா
by அ.இராமநாதன் Mon Feb 19, 2018 9:29 am

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines வைகை ஆறு! கவிஞர் இரா. இரவி

Go down

வைகை ஆறு! கவிஞர் இரா. இரவி

Post by eraeravi on Tue Nov 21, 2017 8:39 pm

வைகை ஆறு!


கவிஞர் இரா. இரவி.
      உலகின் முதல் மனிதன் தமிழன் !
      உலகின் முதல் மொழி தமிழ் !      தமிழ்மொழியை சங்கம் வைத்து வளர்த்தது மதுரை நாகரிகத் தொட்டில் ஆற்றங்கரை என்பார்கள்.  மதுரையின் பெருமைகளில் ஒன்றானது வைகை. உலகில் முதல் மனிதன் நாகரிகம் பெற்றதும் மதுரை வைகையில் தான்.

      வைகையின் பெருமையை சங்க இலக்கியப் பாடல்கள் பறைசாற்றுகின்றன.  பல புலவர்கள் வைகை ஆற்றை புகழ்ந்து பல பாடல்கள் பாடி உள்ளனர்.

      மாடு கட்டி போரடித்தால் மாளாது செந்நெல்
      யானை கட்டி போரடித்த மதுரை.      வைகையில் ஆற்றில் தண்ணீர் எப்போதும் ஓடிக்   கொண்டே இருந்தால் தான் விவசாயம் செழிப்பாக நடந்துள்ளது.

      இவ்வளவு பெருமை மிக்க வைகை ஆற்றின் இன்றைய நிலையை நினைத்தால் கண்களில் கண்ணீர் வரும்.  ஆனால் வைகை ஆற்றில் தண்ணீர் வரவில்லை.

      சென்னையில் கனமழை, பெருமழை வந்தபோதும் வைகை வறண்டே உள்ளது.

      தமிழகத்தில் உள்ள ஆறுகளையாவது இணைப்பதற்கு முன்வர வேண்டும்.

      தண்ணீர வராத காரணத்தால் தாராளமாக நடக்கும் மணல் கொள்ளை.

      எந்த ஒரு ஆற்றிலும் காண முடியாத காட்சிகளை வைகை ஆற்றில் காணலாம்.

      முதுமக்கள் தாழி போன்ற மிகப்பெரிய குப்பைத் தொட்டிகள் ஆற்றின் உள்ளே பல இடங்களில் வைத்து உள்ளனர்.  ஆனால் யாரும் அதில் குப்பையைக் கொட்டுவதில்லை.  அதன் அருகிலேயே குப்பையைக் கொட்டி வரலாற்று சிறப்புமிக்க வைகை ஆற்றை குப்பைத் தொட்டி ஆக்கி விட்டனர்.  பெரிய மருத்துவமனைகள் மருத்துவக் கழிவுக் குப்பைகளை ஆற்றிலேயே கொட்டுகின்றனர்.  எலெக்டிரானிக் பொருட்களின் குப்பையையும் கொட்டி வருகின்றனர்.  கேள்வி கேட்க நாதியின்றி ஆற்றை, குப்பைத் தொட்டி ஆக்கி விட்டனர்.

      ஆற்றுக்குள்ளேயே மாட்டுக் கொட்டம் அமைத்து, மாடுகள் வளர்த்து வருகின்றனர்.  இன்னும் சிலர் குதிரைகள் வளர்த்து வருகின்றனர்.  வாகனங்கள் நிறுத்துமிடமாக்கி பணம் வாங்கி வாகனக் காப்பகம் ஆக்கி விட்டனர்.  ஆக்கிரமிப்பு என்பது அளவின்றி நடந்துள்ளது, இன்னும் கொஞ்ச நாளில் ஆற்றை பட்டா போட்டு விலைக்கு விற்ரு கட்டிடம் கட்டும் பணி கூட நடந்து விடும்.  அந்த அளவிற்கு வைகை ஆற்று கரையோரங்கள் முழுவதும் ஆற்றுக்குள்ளும் ஆக்கிரமிப்பு நடந்து உள்ளது.

      ஆற்றை ஒட்டி குடிசைகளும் போட்டு விடுகின்றனர்.  இன்னும் சிலர் சாயக்கழிவுகளை துர்நாற்றம் வீசும் சாக்கடைகளை வைகை ஆற்றில் சத்தமின்றி கலந்து வருகின்றனர்.

      மதுரையை ஆண்ட மன்னர் திருமலை நாயக்கர் வெவேறு மாதங்களில் நடந்த சித்திரைத் திருவிழாவை ஒன்றாக்கி சித்திரையில் நடக்க வைத்தார் .வைகை ஆற்றில் அழகர் கடவுளை இறங்க வைத்து விழா வைத்து மக்களைக் கூட வைத்தார் .அதனாலும் வைகை பெருமை பெற்றது .

அழகர் ஆற்றில் இறங்கும் சித்திரைத் திருவிழா நடக்கும் இடத்தில் செயற்கையாக தண்ணீர் நிரப்பி அதில் அழகர் இறங்கும் அவல நிலை.  வரலாற்ரி சிறப்புமிக்க வைகை ஆற்றை காக்க அணிவகுப்போம்.  ஆக்கிரமிப்பை அகற்றுவோம்.  சுத்தப்படுத்துவோம், சுகம் பெறுவோம்.

      டெங்கு ஒழிக்கிறோம் என்ற பெயரில் வீட்டினுள் பிடித்து வைத்துள்ள தண்ணீரை கீழே கொட்டி விட்டு கொசு உற்பத்தி ஆகும் என்கின்றனர்.  மாநகராட்சி அதிகாரிகள் தண்டத்தொகையும் வசூலிக்கின்றனர்.

      ஆனால் இன்று டெங்கு கொசு உற்பத்தியாகும் தொழிற்சாலையாக வைகை ஆறு உள்ளது.  வைகை ஆற்றில் தண்ணீர் ஓடவில்லை. தேங்கி நிற்கும் குட்டைத் தண்ணீர் பாசம் பிடித்து பச்சையாக உள்ளது.  அதை எந்த மூடி போட்டு மூடி வைப்பது.

      குப்பைகள் மலை போல குவிந்து உள்ளன.  இன்னும் சில இடங்களில் ஆற்றின் உள்ளேயே கபடி போட்டிகளும் நடத்துகின்றன.  பொதுக்கூட்டங்களும் போடுகின்றன.  நம் கண் முன்னே புகழ்மிக்க ஆறு புகழ் கெட்டு விடுகின்றது.  விழிப்புணர்வு விதைப்போம், முடிவு கட்டுவோம்.

      வைகை என்பது காரணப் பெயர் வைகை ஆற்றின் ஓரம் நின்று கையை வைத்தல் தண்ணீர் ஓடுவது தெரியும்.  அப்படிப்பட்ட வைகை இன்று பொலிவிழந்து சீர் இழந்து சிதைக்கப்பட்டு வருவது தடுத்து நிறுத்துவோம்.  மண் காப்போம். மண்வளம் காப்போம்.  வைகை ஆற்றை காப்பாற்றி வருங்கால சந்ததிகளுக்கு வழங்குவோம்.  ஆறு இல்லாத ஊரு உண்டு.  ஆறு உள்ள வரை போற்ற வேண்டாமா? வைகை ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்கள் தங்கள் கழிவு நீரை ஆற்றிலேயே கலந்து விடுகின்றனர்.

      வைகை ஆற்றில் கரையோரம் திறந்தவெளி கழிவறையாக மாறி விட்டது.  இந்த நிலை மாற வேண்டும்.  இதனால் தான் நோய்கள் பரவுகின்றன.

      டெங்கு நோயை ஒழிக்க முடியவில்லை, டெங்கு கொசுவை ஒழிக்க முடியவில்லை, காரணம் சுகாதாரமின்மை.  உடல்நலம் கருதியாவது வைகை ஆற்றில் மலம் சலம் கழிக்காமல் தூய்மையாக வைத்துக் கொள்ள மதுரை மக்கள் உதவ வேண்டும். விழிப்புணர்வு வேண்டும்.  விவேகமாகச் சிந்திக்க வேண்டும்.

      முன்னொரு காலத்தில் சங்க இலக்கிய காலத்தில் வைகை ஆற்றில் ஓடியது போன்று தண்ணீர் ஓட வேண்டும். வைகையில் தண்ணீர் ஓடினால் தான் வைகையை நம்பி உள்ள பல கிராமங்களில் விவசாயம் செழிக்கும்.

      வைகை ஆற்றின் அருமை, பெருமை அறிந்து வைகையைச் சுத்தமாக்குவோம்.  மாசற்ற வைகையாக மாற்றுவோம். வைகை ஆற்றை சீரும் சிறப்புமிக்க ஆறாக மாற்றுவதற்கு துணை நிற்போம்.  கடலைச் சேராத ஒரே ஒரு ஆறு வைகை ஆறு.  பெருமைமிக்க ஆறு நம்ம வைகை ஆறு.

eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2172
Points : 4952
Join date : 18/06/2010

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum