"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» ட்விட்டரில் ரசித்தவை
by அ.இராமநாதன் Today at 7:47 pm

» அறிஞர்கள் சொன்ன முத்தான பத்து
by அ.இராமநாதன் Today at 7:43 pm

» உங்கள் வீட்டில் பயன்படுத்துவது "Sun Flower" எண்ணெயா? இதோ உங்களுக்காக காத்திருக்கும் அதிர்ச்சி தகவல்!!!
by KavithaMohan Today at 7:42 pm

» பிராணாயாமம்
by அ.இராமநாதன் Today at 7:28 pm

» இராயேந்திரனின் எண்ணங்கள்
by ராஜேந்திரன் Today at 11:09 am

» இது வாட்ஸ் அப் கலக்கல் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Yesterday at 11:41 pm

» இறக்கை லிங்கம்!
by அ.இராமநாதன் Yesterday at 5:36 pm

» அரசு பள்ளிக்குள் புகுந்து தலைமை ஆசிரியையிடம் சங்கிலி பறிப்பு
by அ.இராமநாதன் Yesterday at 12:50 pm

» கலாம் இல்லத்தில் கமல்; அரசியல் பயணத்தை துவக்கினார்
by அ.இராமநாதன் Yesterday at 12:47 pm

» பிரிட்டனில், மூடப்படும் நிலையில் 900 KFC கடைகள்: காரணம் என்ன?
by அ.இராமநாதன் Yesterday at 12:46 pm

» மூட்டையோடு மூட்டையாய் கடத்தப்பட்ட சடலம்: செங்கல்பட்டில் சர்ச்சை!
by அ.இராமநாதன் Yesterday at 12:45 pm

» அழகிய காலை வணக்கம்...!
by அ.இராமநாதன் Yesterday at 12:43 pm

» பண்பே வெல்லும் - கதைப்பாடல்
by அ.இராமநாதன் Yesterday at 11:29 am

» மாதிரிப்பள்ளி - சிறுவர் பாடல்
by அ.இராமநாதன் Yesterday at 11:25 am

» ஆதிசங்கரர் பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Yesterday at 11:20 am

» தண்ணீரே பனிக்கட்டி - சிறுவர்களுக்கான பாடல்
by அ.இராமநாதன் Yesterday at 11:15 am

» விலகினால் அடையாளம் - குழந்தைகளுக்கான பாடல்
by அ.இராமநாதன் Yesterday at 11:08 am

» பாம்பு இருக்கற இடத்துல பல்லி எப்படி இருக்கும்...?
by அ.இராமநாதன் Tue Feb 20, 2018 9:06 pm

» ‘டியர்... நான் உங்க இதயத்துல இருக்கேனா?’’
by அ.இராமநாதன் Tue Feb 20, 2018 8:57 pm

» இந்த போட்டோ கி.மு.விலே எடுத்தது...!!
by அ.இராமநாதன் Tue Feb 20, 2018 8:46 pm

» படி! படி! - சிறுவர் கவிதை
by அ.இராமநாதன் Tue Feb 20, 2018 8:38 pm

» செயல் - கவிதை
by அ.இராமநாதன் Tue Feb 20, 2018 8:30 pm

» கனவு - கவிதை
by அ.இராமநாதன் Tue Feb 20, 2018 8:29 pm

» வெட்கம் - கவிதை
by அ.இராமநாதன் Tue Feb 20, 2018 8:27 pm

» அழகிய தமிழ் - கவிதை
by அ.இராமநாதன் Tue Feb 20, 2018 8:26 pm

» யாப்பு
by lakshmi.P.R Tue Feb 20, 2018 8:26 pm

» நடவு & ஆசை - கவிதைகள்
by அ.இராமநாதன் Tue Feb 20, 2018 8:23 pm

» சிந்தனை சிகிச்சை-5
by ராஜேந்திரன் Mon Feb 19, 2018 8:39 pm

» வித்தியாசமான வேடத்தில் அனுஷ்கா
by அ.இராமநாதன் Mon Feb 19, 2018 9:29 am

» வித்தியாசமான வேடத்தில் சமந்தா
by அ.இராமநாதன் Mon Feb 19, 2018 9:23 am

» பிரபுதேவாவின் டைட்டில் சென்டிமென்ட்!
by அ.இராமநாதன் Sun Feb 18, 2018 8:52 am

» ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் ஸ்ரீதேவியின் மகள்!
by அ.இராமநாதன் Sun Feb 18, 2018 8:51 am

» சமந்தா வரவேற்பு!
by அ.இராமநாதன் Sun Feb 18, 2018 8:50 am

» சினி துளிகள்!
by அ.இராமநாதன் Sun Feb 18, 2018 8:49 am

» சிலம்பம் பயிலும் விஜய் ஆண்டனி!
by அ.இராமநாதன் Sun Feb 18, 2018 8:48 am

» மாப்பிள்ளைக்கு ஏன் இரண்டு டூ வீலர் வாங்கி கொடுத்திருக்கீங்க?
by அ.இராமநாதன் Sun Feb 18, 2018 8:37 am

» இந்த ஆஸ்பத்திரிக்கா உயிரையே கொடுத்தவங்க...!!
by அ.இராமநாதன் Sun Feb 18, 2018 2:12 am

» நாச்சியார் விமர்சனம்
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 11:50 pm

» பிரியா வாரியர் கண்ணடிக்கும் பாடல் வாபஸ் இல்லை ; நடிகை பேட்டி கொடுக்க இயக்குனர் தடை
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 11:24 pm

» ரஜினிகாந்த், கமல்ஹாசன் உரையுடன் நடிகை ஸ்ரீதேவி வாழ்க்கை வரலாறு ஆவணப்படம்
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 11:20 pm

» தெலுங்கில் நடித்த ஸ்ரேயா படம் இணையதளத்தில் வெளியானது
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 11:17 pm

» நாட்டை சூறையாடும் வங்கியின் விஐபி வாடிக்கையாளர்கள்: மம்தா தாக்கு
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 6:38 pm

» மெக்சிகோவில் 7.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் கட்டிடங்கள் குலுங்கின
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 6:37 pm

» பிஎன்பி மோசடி: மேலும் ரூ. 549 கோடி மதிப்பிலான பொருட்கள் பறிமுதல்; நிரவ் மோடி இருப்பிடம் தெரியாது - வெளியுறவுத்துறை
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 6:36 pm

» தொழில்நுட்ப ஆஸ்கர் விருது வென்ற இந்தியர்
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 6:35 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines அடுப்பங்கரை ! நூல் ஆசிரியர் : புதுவைக்குமாரி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

Go down

அடுப்பங்கரை ! நூல் ஆசிரியர் : புதுவைக்குமாரி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

Post by eraeravi on Thu Sep 28, 2017 8:53 pm

அடுப்பங்கரை !
நூல் ஆசிரியர் : புதுவைக்குமாரி !

நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !


வெளியீடு : தமிழ்மொழி பதிப்பகம், அறிவாளன் இல்லம், 
01, முருகன் கோயில் தெரு, சண்முகாபுரம், புதுச்சேரி – 605 009.
பக்கம் : 100 விலை : ரூ. 100

*****

      “அடுப்பங்கரை” என்ற நூலின் தலைப்பே சிந்திக்க வைத்தது.  பெண்ணியம் பேசும் துளிப்பாக்களாக இருக்கும் என்பதை தலைப்பே உணர்த்தி விடுகின்றது.  ‘அடுப்பங்கரை’ என்றால் அது பெண்னுக்குத்தான் என்று இட ஒதுக்கீடு செய்யும் ஆணாதிக்க சிந்தனை அழிய வேண்டும்.  அடுப்பங்கரையில் ஆண்களும் வேலைகளை பகிர்ந்து கொள்ள முன்வர வேண்டும்.  இப்படி பல சிந்தனைகளை நூலின் தலைப்பே தந்தது.


      துளிப்பாவை சப்பான் நாட்டில் பொதுமக்கள் பலரும் இயற்றுவார்கள் என்று படித்து இருக்கிறேன்.  புதுவையில் வாழும் தமிழ்இன உணர்வாளர் புதுவைத் தமிழ்நெஞ்சன், அவரின் மனைவி புதுவைக்குமாரி, இவர்களின் அன்புமகள் தமிழ்மொழி என குடும்பத்தில் உள்ள மூவருமே துளிப்பா எழுதுவதில் வல்லவர்கள்.  புதுவைத் தமிழ்நெஞ்சன் அவர்களின் சகோதரர் புதுவை சீனு தமிழ்மணி அய்யாவும் துளிப்பா படைப்பாளி.  குடும்பத்தோடு துளிப்பா எழுதுவது புதுவைக்குப் பெருமை.


      கவிஞர் அறிவுமதி உள்ளிட்ட பலரின் அணிந்துரை நூலின் அழகிற்கு அழகு சேர்ப்பதாக உள்ளன.      அடுப்பங்கரை
      இல்லா வீடு
      பெண் விடுதலை!


      பகுத்தறிவுப் பகலவன் பெரியார் வழியில் சிந்தித்து வடித்த துளிப்பா நன்று.  அடுப்பங்கரையிலிருந்து விடுதலை வேண்டும், கரண்டியை பிடுங்கிவிட்டு புத்தகத்தைக் கொடு என்றார் பெரியார். படித்த பெண்கள் பலரும் அடுப்பங்கரையில் முடங்கி உள்ளனர் என்பது வேதனை.  இப்படி பல சிந்தனைகளை விதைத்தது, பாராட்டுகள்.
[size]


      எல்லா வீட்டிலும்
      பெண்களுக்கான இடம்
      அடுப்பங்கரை!


[/size]
      பெண்கள் அலுவலகம் சென்று பணம் ஈட்டிய போதும், வீட்டிற்கு வந்தால் சமையலும் செய்தாக வேண்டும்  என்பது எழுதப்படாத விதியாக உள்ளது.  இவை மாற வேண்டும்.
[size]


      தேர்வில் வெற்றி
      வாழ்வில் தோல்வி
      இன்றைய கல்வி!


[/size]
      தேர்வில் வெற்றியடைந்து முதல் மதிப்பெண் பெற்றவர்கள் வாழ்க்கையை, வாழ்வை, வெளிஉலகத்தை புரிந்து கொள்ளாத மக்காகவே பலர் உள்ளனர் என்பதை எடுத்தியம்பும் துளிப்பா நன்று.
[size]


      நகை புடவையில்
      அடக்கமானாள்
      பெண்!


[/size]
      படித்த பெண்களும் விதிவிலக்கு அல்ல, பெண்களில் பலரும் பட்டுச்சேலைக்கும், தங்க நகைகளுக்கும் ஆசைப்பட்டு வருகின்றனர்.  இந்த ஆசைகளை அறவே அழித்தால் தான் பெண் சமுதாயம் எழுச்சி அடையும், மேன்மையுறும், சாதனைகளை நிகழ்த்தும்.


      ஆண் குழந்தைகளுக்க் பிஞ்சிலேயே நஞ்சு விதைக்கும் விதமாக ஆணாதிக்கச் சிந்தனையை விதைத்து வருகின்றனர்.  இதன் காரணமாகவே ஆணாதிக்கச் சிந்தனை ஆணுக்கு குழந்தையிலேயே வந்து விடுகின்றது.  இதன் காரணமாக பெண் என்றால் மட்டம் தட்டி பேசுவது, மதிக்காதிருப்பது என்ற குணங்களுடைய ஆண்கள் நாட்டில் பெரும்பான்மையோர் உள்ளனர்.  மனைவியை மதித்து இன்சொல் பேசிடும் ஆண்கள் எண்ணிக்கையில் சிறுபான்மையினராகவே உள்ளனர்.
[size]


      உள்ளம் முழுவதும் 
      ஊமைக் காயங்கள்
      ஆணாளுமை!


[/size]
      ஆணாதிக்க சிந்தனை ஆண்களின் மனதிலிருந்து அகற்றப்பட வேண்டும்.  சமத்துவ சமதர்மம் சமுதாயம் மலர வேண்டும். இருபாலரையும் சமமாக மதிக்கும் மாண்பு மலர வேண்டும்.
[size]


      புதை மணலாய்
      உள்ளிழுக்கும்
      சின்னத்திரை!!


[/size]
      அயல்நாடுகளில்லும் தொலைக்காட்சி வசதி உள்ளது.  அதனை அவர்கள் ஊறுகாய் போலவே பயன்படுத்துகின்றனர்.  ஆனால் நம் நாட்டில் சோறு போல பயன்படுத்தி வருகின்றனர்.  தொலைக்காட்சித் தொடர்களுக்க் அடிமையாகி விட்டனர்.  தொடர்களும் வன்மம் வளர்த்து வருகின்றன. மீட்டு எடுக்க ஒரு இயக்கம் காண வேண்டும்.
[size]


      நிலத்தை விற்றவர்
      தொழிற்சாலையில் 
      காவல் பணி!


[/size]
      வெளிநாட்டு நிறுவனங்கள் நம் நாட்டிற்கு வந்து நமது நிலங்களை சொற்ப விலைக்கு வாங்கி விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கேலிக்கூத்தாக்கி வருகின்றனர்.  அயல்நாட்டு நிறுவனங்களை ரத்தினக்கம்பளம் விரித்து வரவேற்று வருகின்றனர்.  மண்ணின் மைந்தர்களை அவர்களிடம் வேலை பார்க்கும் கூலிகளாகி வருகின்றனர்.   இன்னும் ஒரு விடுதலை போராட்டம் தொடங்க வேண்டிய நிலைக்கு தள்ளி வருகின்றனர். 


      வெள்ளைக்கொடி
      செங்கொடியானது
      புத்தன் நாடு!


      நடந்து செல்லும் பொது எறும்புகளை மிதித்து விடக் கூடாது, பூச்சி கூட சாகக்கூடாது என்பதற்காக மயிலிறகால் கூட்டி விட்டு நடக்கும் புத்தபிட்சுகள் உள்ள நாடு, புத்தரை வணங்கும் நாடு இலங்கை, தமிழினப் படுகொலை நடத்தி ரத்தம் குடித்தது, வெள்ளைக்கொடி ஏந்தி வந்தவர்களையும் சுட்டு வீழ்த்தியது.  பெண்கள், முதியவர்கள், குழந்தைகள் என்றும் பாராமல் கலங்கப்பட்டது புத்தன் தேசம்.  படுகொலைக்குக் காரணமான ராசபக்சே குறைந்தபட்சம் கைது கூட ஆகாதது மனிதகுலம் வெட்கப்பட வேண்டிய வேதனையாகும்.
[size]


      பெண்களுக்கில்லை
      ஆண்களுக்குண்டு
      ஞாயிற்றுக்கிழமை!


[/size]
      உண்மை தான், விடுமுறை தினம் என்றால், ஆண்கள் அலுவலகம் செல்லாமல் மனம் விரும்பும் வரை தூங்கி ஓய்வு எடுத்து, வெளியில் சுற்றி எப்படியும் கழிக்க முடியும்.  ஆனால் பெண்களுக்கு எந்த ஒரு நாளும் விடுமுறை இல்லை. ஆண்கள் ஒரு நிமிடம், பெண்களை அவர்களது கோணத்தில் எண்ணிப்பார்த்து அவர்களுக்கு ஓய்வு வழங்கிட முன்வர வேண்டும்.
[size]


      நிலா ஆட்சியில்
      பனிமகுடம் சூடிய புல்
      கதிரவன் மறுப்பு!


[/size]
      நிலவொளியில் மலர் மீது இருந்த பனித்துளிகளை விடிந்ததும் கதிரவன் தன் கதிர்வீச்சுகள் மூலம் பனித்துளியை காணாமல் செய்யும் காட்சியை மனக்கண்ணிற்கு கொண்டு வந்து வெற்றி பெறுகின்றார்  நூல் ஆசிரியர் கவிஞர் புதுவைக்குமாரி. குடி கெடுக்கும் மதுவிற்கு எதிரான துளிப்பாக்கள் நன்று.
[size]


      இலட்சுமி இல்லாததால்
      தற்குறியானாள்
      சரசுவதி!


[/size]
      கல்வி என்பது தனியார் உடைமை. மதுக்கடை என்பது அரசுடைமை.  வித்தியாசமான சூழ்நிலை தமிழகத்தில் நிலவுகின்றது.  முன்பு சாராயம் விற்றவர்கள் எல்லாம் கல்வித்துறைக்குள் நுழைந்து கல்வி வள்ளல் என்ற பெயரில் கல்விக்கொள்ளை, பகல் கொள்ளை அடித்து வருகின்றனர்.  மழலையர் பள்ளி தொடங்கி மருத்துவக் கல்வி வரை பெரும்பான்மை தனியார் வசமே உள்ளது. 


 ஏழைகளுக்கு எட்டாக்கனியாகி வரும் கல்வியை அரசுடைமையாக்கி எல்லோருக்கும் தரமான கல்வியை அரசே வழங்கிட முன்வர வேண்டும்.  இப்படி பல் சிந்தனைகளை விதைத்தது. நூலின் இறுதியில் உள்ள புகைப்படங்கள் இலக்கியப் பயணத்தை உணர்த்தின.  வாழ்த்துக்கள், தொடர்ந்து எழுதுங்கள்.

eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2172
Points : 4952
Join date : 18/06/2010

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum