"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» ஓம் வடிவத்தில் விநாயகப்பெருமானின் திருவுருவம்
by அ.இராமநாதன் Today at 3:03 pm

» சமைக்கும்போது மட்டும் குடிக்கமாட்டார்...!!
by அ.இராமநாதன் Today at 12:04 am

» பழைய இரும்புச்சத்து மாத்திரைகளுக்கு பேரீச்சம்பழம்…!!
by அ.இராமநாதன் Today at 12:03 am

» உலக அழகி மனுஷியால் திணறிய கூகுள்
by அ.இராமநாதன் Yesterday at 11:05 pm

» நடிகரானார் கவுதம் மேனன்!-
by அ.இராமநாதன் Yesterday at 9:13 pm

» இயக்குனராகும் மதுபாலா!
by அ.இராமநாதன் Yesterday at 9:12 pm

» கதாபாத்திரத்திற்காக மொட்டையடித்த, பூர்ணா!
by அ.இராமநாதன் Yesterday at 9:12 pm

» சுபாஷ் சந்திரபோஸ் வேடத்தில் ராணா!
by அ.இராமநாதன் Yesterday at 9:11 pm

» பாஸ்கர் ஒரு ராஸ்கல்' படத்தில் ஆண்ட்ரியா பாடியுள்ளார்
by அ.இராமநாதன் Yesterday at 9:10 pm

» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by கவிப்புயல் இனியவன் Sat Nov 18, 2017 9:04 pm

» டூ லெட் தமிழ் திரைபடம் சிறந்த படமாக தேர்வு
by அ.இராமநாதன் Sat Nov 18, 2017 5:17 am

» முதல் பார்வை: 'தீரன் அதிகாரம் ஒன்று' - நேர்த்தியான போலீஸ் சினிமா!
by அ.இராமநாதன் Sat Nov 18, 2017 5:15 am

» வெளியானது 'ஒரு பக்க கதை' படத்தின் ட்ரைலர்!
by அ.இராமநாதன் Sat Nov 18, 2017 5:11 am

» எந்த கட்சி ஆட்சிக்கு வருதோ, அதுதான் நம்ம கட்சி…!!
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 9:56 pm

» ஆபரேசன் பண்ணிக்க பயப்படாதீங்க…!!
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 9:56 pm

» கிட்னி திருடுபோனா நிர்வாகம் பொறுப்பல்ல…!!
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 9:55 pm

» மாமியாரை சமாளிக்க சக்களத்தி துணை வேணும்...!!
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 7:42 pm

» வீட்டுலதான் எட்டு ஓட்டு இருக்கே...?!
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 7:36 pm

» வீடு வரும்போதே ஏன் இறங்கலை...!!
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 7:34 pm

» சொரணை இருக்கிறவளான்னு கிள்ளி பார்த்தேன்...!!
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 7:26 pm

» - மேய்ச்சல் - கவிதை
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 5:44 pm

» பயம் - கவிதை
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 5:44 pm

» கும்ப ராசிக்காரர்களுக்கு காரத்திகை மாத பலன்
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 5:23 pm

» சென்னையில் 5ஜி சேவை: நோக்கியா தகவல்!!
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 5:18 pm

» போர்ப்ஸ் பத்திரிக்கையின் இளம் கண்டுபிடிப்பாளர்கள் பட்டியலில் இடம்பிடித்த சென்னை பெண்
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 5:12 pm

» உரிய அனுமதி கிடைத்தவுடன் தமிழகத்தில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்கப்படும்: இந்திய அணுசக்தி கழகம்
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 5:09 pm

» குரலை இனிமையாக்கும் மாங்கனி
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 5:07 pm

» இது வாட்ஸ் அப் கலக்கல்...!!
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 3:18 pm

» காலை வணக்கம்....
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 3:17 pm

» கழுதை போச்சே! - சிறுவர் கதை
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 3:12 pm

» போஸ்ட் ஆபீசில், 'ஆதார்' சேவை
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 3:03 pm

» ‘இம்சை அரசன்’ படத்தில் நடிக்க மறுப்பு நடிகர் வடிவேலுவுக்கு நோட்டீஸ்
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 2:56 pm

» சூர்யா வெளியிட்ட நாச்சியார் டீசர்!
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 2:56 pm

» கட்டுகட்டாக ரூ. 2000 ஆயிரம் ரூபாய் நோட்டுகளுடன் நடிகர் விஷால் டுமீல் வீடியோ...
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 2:55 pm

» தீபிகாவின் மூக்கை வெட்டுவோம்! ராஜபுத்திர அமைப்பு கடும் மிரட்டல்
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 2:51 pm

» ஆசிய பணக்கார குடும்பங்களில் முகேஷ் அம்பானிக்கு முதலிடம்
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 2:50 pm

» புதிய உச்சத்தை தொட்டது முட்டை விலை
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 2:49 pm

» நகைக்கடையின் கூரையில் துளைபோட்டு பட்டப்பகலில் உள்ளே இறங்கி துணிகர கொள்ளை
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 2:48 pm

» நாங்க சுற்றுலா பயணிகள் அல்ல... இரயில்வே பணியாளர்கள்!
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 2:47 pm

» பத்மாவதி படத்திற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 2:45 pm

» வங்கியில் சேமிப்பு கணக்கு ஆரம்பித்தல் (தொடர் பதிவு)
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 11:51 am

» கணவர் தேவைன்னு விளம்பரம் கொடுத்தது தப்பா போச்சு...!!
by அ.இராமநாதன் Thu Nov 16, 2017 6:59 pm

» தாத்தாவுக்கு பல்ஸ் விழுந்து போச்சு...!!
by அ.இராமநாதன் Thu Nov 16, 2017 6:57 pm

» தங்கம் இலவசம்னு தப்பா புரிஞ்சுகிட்டாங்க....!!
by அ.இராமநாதன் Thu Nov 16, 2017 6:56 pm

» நர்ஸோட ஸ்ட்ரக்சர் சூப்பர்னு கமெண்ட் அடிச்சார்...!!
by அ.இராமநாதன் Thu Nov 16, 2017 6:56 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



தண்ணீர் அஞ்சலி ! நூல் ஆசிரியர் : தில்பாரதி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

View previous topic View next topic Go down

தண்ணீர் அஞ்சலி ! நூல் ஆசிரியர் : தில்பாரதி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

Post by eraeravi on Thu Sep 28, 2017 8:37 pm

தண்ணீர் அஞ்சலி ! 
நூல் ஆசிரியர் : தில்பாரதி ! 
நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

மனோபாரதி காகிதம் பதிப்பகம்,
104, பாரதியார் தெரு, அம்மாகுளம், அரியமங்கலம், திருச்சி-620 010.  பக்கம் : 64, விலை : ரூ. 50

******
      நூல் ஆசிரியர் கவிஞர் தில் பாரதி அவர்களுக்கு இது புனைப் பெயர் என்றாலும், பொருத்தமான பெயர் தான்.  மனதில் பட்ட கருத்துக்களை (தில்லாக) துணிவாக ஹைக்கூ கவிதையாக்கி உள்ளார்.  கண்ணீர் அஞ்சலி புகழ்பெற்ற சொற்கள்.  அதையொட்டி ‘தண்ணீர் அஞ்சலி’ என வித்தியாசமாக பெயர் சூட்டி உள்ளார் தில்பாரதி அவர்கள்.  ‘மாற்றுத்திறனாளி’ ஆனால் அதுபற்றி கவலை எதுவும் கொள்ளாமல் தொடர்ந்து இயங்கி வரும் படைப்பாளி.  மற்றவர் நூல்களையும் படித்து இணையத்தில் விமர்சனத்தை ஒளிப்படமாக (Youtube) ஏற்றி வருகிறார்.  எனது நூல்களுக்கும் விமர்சனத்தைப் பதிவேற்றி உள்ளார்.

      ஆற்றில் 
      ஓடுகின்றன 
      மணல் லாரிகள்!

      ஆறுகள் வறண்டு விட்டன.  ஆனால் அது மணல் கொள்ளையருக்கு வசதியாகி விட்டது.  ஆற்றிலேயே லாரிகளை ஓட விட்டு மணல் கொள்ளையடித்து மற்ற மாநிலங்களுக்கும் கடத்தி வரும் கொடுமையை ஹைக்கூவில் உணர்த்தி உள்ளார். பாராட்டுக்கள்.

      ஏற்ற இறக்கங்கள் 
      வாழ்க்கையை ஓட்டுகிறது /
      மின் தூக்கியில் வேலை!

      வாழ்க்கை என்றால் ஏற்ற இறக்கம் உண்டு, மேடு பள்ளம், இன்பம் துன்பம் உண்டு. வாழ்வியல் சிந்தனையை மின்தூக்கியில் வேலை என்று எள்ளல் சுவையுடன் உணர்த்த்தி உள்ளார்.

      பணக்காரன் 
      ஏழையானான் 
      பையனைப் படிக்க வைத்து !

      இன்றைக்கு கல்வி என்பது வியாபாரப் பொருளாகி விட்டது.  மழலைக் கல்வி முதல் மருத்துவக் கல்வி வரை தனியார் வசம் உள்ளதால் கேள்வியே இன்றி கூட்டுக் கொள்ளை அடித்து வருகின்றனர்.  பணம் பிடுங்கும் அரக்கனாக பள்ளிகளும், கல்லூரிகளும் மாறி விட்ட நிலையை உணர்த்திடும் ஹைக்கூ நன்று.
      கண்ணாடியில் நிலவு 
      முகம் பார்க்கும் 
      என்னவள் !

      ஒரு வியப்பை ஏற்படுத்தி, முடிவில் விடை சொல்வது, அது எதிர்பாராத விடையாக இருப்பது.  இது ஹைக்கூவின் யுத்தி. அந்த வகையில் வடித்த ஹைக்கூ நன்றி. ஹைக்கூ கவிதையில் எது குறித்தும் பாடலாம் என்பதற்கு எடுத்துக்காட்டு இந்நூல்.

      பச்சைப்பொய் 
      ஊரே நம்புகிறது 
      அரசியல்வாதிகளின் பேச்சு!

      உண்மை தான்.  இன்றைக்கு நாட்டு நடப்பு அப்படித்தான் உள்ளது.  நேற்று வரை நல்லவர், வல்லவர் என்றனர்.  இன்று ஊழல்வாதி, கெட்டவர் என்கினறனர்.  நம்மைப் பார்த்து மக்கள் சிரிப்பார்கள் என்ற கூச்சம் கொஞ்சம் கூட இல்லாமல் மாறி மாறி பேசுகின்றனர்.  

      குழந்தையின் கண்ணில் தூசி 
      உறுத்தியது 
      அம்மாவுக்கு !

      குழந்தைகள் கண்ணில் தூசி விழுந்தால் கூட துடித்திடும் உயர்ந்த உள்ளம் அன்னை உள்ளம். இந்த உலகில் உள்ள உறவுகளுக்கு எல்லாம் சிகரமானதும், அகரமானதும் அம்மா என்ற அற்புத உறவு தான். அதனை உணர்த்திடும் ஹைக்கூ நன்று.

      கடவுளும் 
      பிச்சைக்காரன் 
      உண்டியல்!

      பரமன் படியளக்கிறான் என்பார்கள்.  ஊழல் செய்து ஈட்டிய பணத்தில், கடவுளுக்கு கொஞ்சம் உண்டியலில் போட்டு, கடவுளையும் செய்த ஊழலுக்கு கூட்டாளியாக்கிக் கொள்கின்றனர்.  உண்டியலில் பணம் போடுவதை விடச் சிறந்தது ஏழைக்கு உதவுவது என்பதை உணர்த்திடும் ஹைக்கூ.

      வசதியானவர்களும் 
      ஓடுகிறார்கள் 
      சர்க்கரை வியாதி!

      இன்று இரு நண்பர்கள் சந்தித்துக் கொண்டால் முதலில் கேட்கும் கேள்வி, உன் சர்க்கரை அளவு எவ்வளவு என்பது தான்.  இன்று உலகமயம் போல பரவலாகி விட்டது சர்க்கரை நோய்.  உடல் உழைப்பு இல்லாமல் போனதால் தான் நோய்கள் வந்தன.  நடைப்பயிற்சியும், ஓட்டமும் சர்க்கரையின் அளவைக் குறைக்கின்றன.  வசதி படைத்தவர்களும், மகிழுந்தில் சென்று ஓட வேண்டிய அவல நிலை.  காரணம் நவீன வாழ்க்கை முறை என்பதை உணர்த்திடும் ஹைக்கூ.

      ரூ.500, ரூ.1000 நோட்டு செல்லாது என்ற அறிவிப்பில் கருப்புப்பணம் வந்து சேரவில்லை  மாறாக கருப்புப்பணத்தையும், வெள்ளையாக்கி விட்டனர். ஒரே வரி ஜிஎஸ்டி என்று சொல்லி விட்டு பலவகைகளில் வரிகள் வாங்கி துன்புறுத்தி வருகின்றன்ர்.  பெட்ரோல் விலையை தினந்தோறும் ஏற்றி மக்களை வெறுப்படையச் செய்துள்ளனர்.  ஆனாலும் மக்கள் அரசியல்வாதிகளை இன்னமும் நம்பி வருவதை ஏளனம் செய்யும் விதமாக வடித்த ஹைக்கூ இதோ!

      வெட்டுபவனையே 
      நம்பும் ஆடு 
      ஓட்டுப்போட்ட மக்கள்!

      சென்னையில் மழை வந்து, பலர் வீடுகள் இழந்து அல்லல்பட்ட சோகத்தை நினைவூட்டும் விதமாகவும், ஏரிகளை ஆக்கிரமிப்பு செய்வதை இனியாவது நிறுத்துங்கள். ஆக்கிரமிப்புகளை அகற்றிட ஆணையிட வேண்டிய மதுரை உயர்நீதிமன்றமே ‘உலகனேரி’ என்ற ஏரியின் மீது தான் கட்டி உள்ளார்.  போனது போகட்டும், இனி புதிதாக ஏரி ஆக்கிரமிப்பு நிகழாமல் தடுப்போம்.

ஏரிக்குள் வீடுகள் 
காலி செய்தது 
மழை!

நிலவு நடிகைக்கு 
இத்தனை ரசிகர்களோ 
நட்சத்திரம்!

கவிதைக்கு கற்பனை அழகு.  நூல் ஆசிரியர் தில்பாரதி நிலவை நடிகையாகவும், நட்சத்திரங்களை நடிகையின் ரசிகர்களாகவும் பார்த்து இருப்பது வித்தியாசமான புதிய கற்பனை. பாராட்டுகள்.

நூலின் தலைப்பான, ‘தண்ணீர் அஞ்சலி’ பற்றிய ஹைக்கூ.

வறண்டு போனது நதி
      யார் ஒட்டுவது 
      தண்ணீர் அஞ்சலி போஸ்டர்!

ஹைக்கூ மிக நன்று.  அடுத்த பதிப்பில் போஸ்டர் என்பதை ‘சுவரொட்டி’ என மாற்றி, பிரசுரம் செய்யுங்கள்.  சுவரொட்டி என்றால், இன்று எல்லோருக்கும் விளங்கும்.

      வாழும் போது தொலைத்துவிட்டு
      சாகும் போது தேடுகிறார்கள்
      வாழ்க்கையை!

      உண்மை தான்.  மிகப்பெரிய பணக்காரர்கள் பலர் இறக்கும் தருவாயில் வருந்துகின்றனர்.  பணம், பணம் என்று அலைந்தே வாழ்க்கையைத் தொலைத்து விட்டேன். இறக்கும் போது பணம் உடன் வரப் போவதில்லை.  ஆனால் வாழும் காலத்தில் உறவுகளையும், நண்பர்களையும் மதிக்கத் தவறி விட்டேன் என்று மரண வாக்குமூலம் தரும் அவலம் நடந்து கொண்டிருக்கின்றது.

      நூல் ஆசிரியர் கவிஞர் தில்பாரதி ஹைக்கூ கவிதைகள் மூலம் பல நல்ல சிந்தனைகளை விதைத்து உள்ளார். பாராட்டுகள்.


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

http://tamil.pratilipi.com/kavignar-eraravi

https://www.facebook.com/rravi.ravi

www.kavimalar.com

http://www.eraeravi.blogspot.in/
.
http://www.tamilthottam.in/f16-forum

http://eluthu.com/user/index.php?user=eraeravi

http://www.eegarai.net/sta/eraeravi

இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !

eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2131
Points : 4829
Join date : 18/06/2010

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum