"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» அமெரிக்காவில் நிர்வாண மனிதன் துப்பாக்கிச் சூட்டுக்கு 3 பேர் பலி
by அ.இராமநாதன் Today at 8:10 pm

» மெகா பட்ஜெட்டில் விக்ரம் படம்!
by அ.இராமநாதன் Today at 7:57 pm

» சினி துளிகள்!
by அ.இராமநாதன் Today at 7:56 pm

» மீண்டும் நிவேதா தாமஸ்!
by அ.இராமநாதன் Today at 7:55 pm

» ரீ - மேக்கில், துாறல் நின்னு போச்சு!
by அ.இராமநாதன் Today at 7:54 pm

» சர்ச்சைகளை சந்திக்க தயாராகி விட்ட விஜய்!
by அ.இராமநாதன் Today at 7:53 pm

» கோடை டிப்ஸ்!
by அ.இராமநாதன் Today at 7:48 pm

» தலைவர் உ.பா.பிரியர்னு எப்படி சொல்றே?
by அ.இராமநாதன் Today at 7:45 pm

» ஜாதகத்திலே கன்னி ராசிங்கிறதை மாத்தணும்...!!
by அ.இராமநாதன் Today at 7:37 pm

» இல்லையென ஆகிவிடுமா?
by அ.இராமநாதன் Today at 7:30 pm

» சமூகக் குற்றம்! கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 4:53 pm

» கல்வி அறிவு வழங்கிய சிதம்பரம் ஸ்ரீஜடா விநாயகர்! -
by அ.இராமநாதன் Yesterday at 7:45 am

» ராஜஸ்தானை வீழ்த்தி சென்னை அபாரம்
by அ.இராமநாதன் Yesterday at 7:38 am

» ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
by அ.இராமநாதன் Yesterday at 7:32 am

» ஜோதிகாவின் புதுப் பட டைட்டில் இதுதான்!
by அ.இராமநாதன் Yesterday at 7:30 am

» பொதுக்கூட்டங்களில் வெற்றிடங்களை நிரப்புவார்!
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 11:08 pm

» தலைவர் தத்துவமா பேசறார்....!!
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:46 pm

» பீடி சுற்றும் பெண்கள்
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:33 pm

» லால்பகதூர் சாஸ்திரி
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:31 pm

» பேசாத வார்த்தக்கு நீ எஜமான்...!!
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:27 pm

» பொது அறிவு தகவல்கள்
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:23 pm

» மனைவியை அரசியலுக்கு கொண்டு வந்தது தப்பு...!!
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:15 pm

» தைராய்டு பிரச்சனைக்கு...
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:11 pm

» மூத்தோர் சொல் அமிழ்தம் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:09 pm

» ட்விட்டரில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:02 pm

» தலைவருக்கு ஓவர் மறதி...!!
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 9:57 pm

» ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 9:16 pm

» நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 6:02 pm

» சிறுமி பலாத்காரம் நாட்டிற்கே அவமானம் : ஜனாதிபதி
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 5:25 pm

» சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 4:58 pm

» தலைமை நீதிபதி மீது கண்டன தீர்மானம்: 7 கட்சி ஆதரவு
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 4:57 pm

» பெண்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளில் 48 எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள்
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 4:53 pm

» கடல் சீற்றம்: குமரி, ராமநாதபுரம் மீனவர்களுக்கு எச்சரிக்கை
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 4:50 pm

» இணைய வெளியினில....
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 1:30 pm

» பசித்த வயிறு கற்றுத்தரும் வாழ்க்கை
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 1:27 pm

» 10 பர்சென்ட் கேஷ்பேக் ஆஃபர் சாமி...!!
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 1:23 pm

» ஃபேஸ்புக் ஸ்மைல்
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 1:16 pm

» சர்வ தேச ரத்தம் உறையாமை தினம்
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 12:07 pm

» சர்வ தேச கல்லீரல் தினம்
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 11:59 am

» தக்காளி விஷயத்தில் கவனிக்க....
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 11:55 am

» ட்விட்டரில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 11:53 am

» பன்னாட்டுப் பழமொழிகள்
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 11:41 am

» கேரளா பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் நயன்தாரா.
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 11:36 am

» 100 பந்து கிரிக்கெட் தொடரை அறிமுகப் படுத்துகிறது இங்கிலாந்து
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 9:45 am

» நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 9:42 am

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines கவிஞர் இரா. இரவியின் “வெளிச்ச விதைகள்” நூல் மதிப்புரை முதுபெரும் எழுத்தாளர் திருச்சி சந்தர் !

Go down

கவிஞர் இரா. இரவியின் “வெளிச்ச விதைகள்” நூல் மதிப்புரை முதுபெரும் எழுத்தாளர் திருச்சி சந்தர் !

Post by eraeravi on Mon Jan 16, 2017 10:53 pm

கவிஞர் இரா. இரவியின் வெளிச்ச விதைகள்நூல் மதிப்புரை முதுபெரும் எழுத்தாளர் திருச்சி சந்தர் !


நிறுவனர் : முத்தமிழ் அறக்கட்டளை
பதிவு எண் : 969,
10, ராமமூர்த்தி ரோடு,
சின்ன சொக்கிகுளம், மதுரை – 625 002.
தொ.பெ. எண் : 2533524
செல்போன் : 94427 43524


     ஹைக்கூ திலகமென செல்லமாக... செல்வமாக அழைக்கப்படும் கவிஞர் இரா. இரவி, “வெளிச்ச விதைகள்” என்ற கவிதை நூலில், அன்றைய சமுதாய நிலையையும், இன்றைய சமூக அவலங்களையும் அலசி, ஆராய்ந்து, ஈரடியில் உலகளந்துள்ளார்.

      “உயிரும் மெய்யும், உயிர் மெய்யும் இணைந்த
      உயிர்கள் உச்சரிக்கும் உன்னதச் சொல் “அம்மா!”
            தாய்மைச் சிறப்பின் சிகரம்.

      “நெறிப்படுத்தி நல்வழி காட்டுபவர் தந்தை
      நன்மை தீமை எடுத்து இயம்புயவர் தந்தை”
            தந்தை உறவுக்கு மகுடம்.

      “கவலைகளை மறக்கடிக்கும் ஆற்றல் மிக்கவர்
      கண்களின் காட்சிக்கு இனிமை தருபவள்”
            இல்லத்தரசிகளுக்கு நல்ல இனிப்புச் சுவை

      “பென்ணிலா வீடு வீடல்ல காடு
      பெண்ணே இருளகற்றும் விளக்கு”
            விளக்கு வெளிச்சத்தில் பெண்ணின் பெருமை.

      “இன்று முதல் இணையும் இணைகள் இவர்கள்
      என்று உலகிற்கும் அறிவிக்கும் அற்புத நாள்”
            திருமணம் நறுமணம் வீசுகிறது.

      “நிழலின் பெருமை வெயிலில் தெரியும்
      நின் பெற்றோர் அருமை இழந்தால் புரியும்”
            பெற்றவர் பெருமைக்கு ஒரு ‘கொடை’

      “பண்மொழி அறிஞர் பாரதியார் போற்றிய தமிழ்
      பண் இசைத்து பாடல்கள் தந்திட்ட தமிழ்”
            பாரதீயம் சாரதீயம் செய்கிறது, தமிழ்த்தேரில்.

      “உலகம் உள்ளவரை தமிழ் மொழி இருக்கும்
      தமிழ் உள்ளவரை தமிழன் புகழ் நிலைக்கும்”
            “தமிழ்” - உலகம் சுற்றும் வாலிபன்.

      “பாடாத பொருளில்லை எனப் பாடினான்!
      பாடிய அனைத்திலும் பொருள் வைத்தான்!” 
            வள்ளுவரின் நெறி உலகெங்கும் குரல் கொடுக்கிறது.

      “கவனத்தை, கண்டதில் சிதற விடாமல்
      கவனம் செலுத்தினால் வாகை சூடலாம்”
            தன்னம்பிக்கையான கவன ஈர்ப்புத் தீர்மானம்.

      “காகிதத்தில் உள்ள எழுத்துக்களை வாசிப்பது
      குழந்தைகளின் சிரிப்புப் போல இனிமையானது”
            காகித எழுத்துக்களின் சிறப்பு - குழந்தைகளின் சிரிப்பு

      “இங்கிலாந்துக்காரன் மட்டும் ஆண்டான் அன்று
      எல்லா நாட்டுக்காரனும் ஆள்கிறான் இன்று” 
            ஆளவைத்த இளிச்சவாயர்களுக்கு புத்திக் கொள்முதல்

      “கணினி யுகத்திலும் காட்டுமிராண்டிக் காலத்தை
      கண்களில் காட்டும் உணர்வு காதல் கொலை”
            காதல் நெறி, கலை – காம வெறி, கொலை.

      “பெரியார் இங்கே மீண்டும் பிறக்க வேண்டும்
      புத்தி கெட்ட மனிதர்களுக்கு புத்தி புகட்ட வேண்டும்”
            மறுபிறவி இல்லையென்ற துணிவில்,
            நம் அறிவு அடமானப்       பொருளாகி விட்டது.

      “கிடைக்கும் வேலை பார்க்க மனமில்லை
      கிடைக்காத வேலையில் மீது ஏக்கம் உண்டு”
            வேலையில்லா பட்டதாரிகளுக்கு ஒரு படிப்பினை.

      “கர்நாடகமோ காவிரியைத் திறக்க மறுக்கிறது
      கேரளமோ முல்லைப் பெரியாற்றில் உயர்த்திடத் தடுக்கிறது”
            நம்பாதீர் அண்டை மாநிலத்தை.
            நம்புங்கள் மையம் கொள்ளும் புயலை. 
            மழை மையல் கொண்டாவது பெய்யும்.

      “சங்கம் வைத்து தமிழ் வளர்த்த தமிழகத்தில்
      சங்கம் வைத்துச் சாதி வெறி வளர்க்கும் அவலம்”
            சாதியின் நீதி? வீதிக்கொரு சாதிக் கட்சிக் கொடி!

      “காதலர்கள் அழிந்தாலும் காதல் அழிவதில்லை
      காதல் முக்காலமும் எக்காலமும் வாழும்”
            காதல் வாழும் - காதலர்கள் வாழமாட்டார்களே! ?

      “மாமனிதர் அப்துல்கலாம் அவர்களே
      என்றும் எப்பொழுதும் நினைவில் வாழ்பவர்”
            அரசு அவரை உரசிப் பார்த்து,
            சலாம் போட்டு மறந்துவிட்டார்களே!.

      “காந்தியடிகள் அகிம்சை வழி மாறாமல்
      காலமெல்லாம் போராடிப் பெற்றுத் தந்தார்”
            காந்தி படம் – சிரித்தபடி - காகிதத்தில்!      பெற்றுத்தந்த சுதந்திர நாட்டின் எதிர்கால கோமாளித்தனங்களை எண்ணியா? அல்லது ஒன்றிரண்டு காகிதத்தில் செல்லாமல் போய் விட்டதின் வேதனையா? அழுதுகொண்டே சிரிக்கிறாரா? – சிரித்துக் கொண்டே அழுகிறாரா? யாருக்குத் தெரியும்!.

      “இனியாவது பெண்களை அனைவரும் மதித்து நடப்போம்    இனியவர்களின் திறமை வெளிப்பட வாய்ப்பளிப்போம்”
            விளையாட்டு வீரப் பெண்மணிகளுக்கும்,
            நெறிதவறாது வாழும் பெண்மணிக்கும் மட்டுமே
            இது பொருந்தும்.

      “தமிழன் என்று சொல்லடா தங்கவேலு மாரியப்பா
      தலை நிமிர்ந்து நில்லடா தங்கவேலு மாரியப்பா!”
            ஊனம் என்ற சொல்லை ஊனமாக்கிய
            தங்கமான தங்கவேலு மாரியப்பா!
            தமிழினத்தையே நிமிரச் செய்த தங்கமே! நிமிர்ந்து நில்!.

      “நவில்தொறும் நூல் நயம் போலும், பயில் தொறும்
      பண்புடையாளர் தொடர்பு”      வள்ளுவரின் வாய்மொழிக் கேற்ப கவிஞர் இரா. இரவியின் நண்பன் “நான்” என்று சொல்லிக்கொள்வதில் பெருமைப் படுகிறேன்.
      “இவரின் வெளிச்ச விதைகள்” கவிதை நூலுக்கு விமர்சனமாக, சத்தான கருத்து விதைகளை நீருள்ள, இயற்கை உரமிட்ட, சூரிய வெளிச்சமுள்ள பூமியில் விதைத்துள்ளேன். நல்ல மகசூல் நிச்சயம் கிடைக்கும்.  உங்களுக்கும் பலனில் பங்கு வேண்டுமானால், உழைக்க வேண்டாமா? உழைப்பு என்பது “வெளிச்ச விதைகளைப்” படிப்பதே!.

eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2196
Points : 5024
Join date : 18/06/2010

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum