"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» ஓம் வடிவத்தில் விநாயகப்பெருமானின் திருவுருவம்
by அ.இராமநாதன் Today at 3:03 pm

» சமைக்கும்போது மட்டும் குடிக்கமாட்டார்...!!
by அ.இராமநாதன் Today at 12:04 am

» பழைய இரும்புச்சத்து மாத்திரைகளுக்கு பேரீச்சம்பழம்…!!
by அ.இராமநாதன் Today at 12:03 am

» உலக அழகி மனுஷியால் திணறிய கூகுள்
by அ.இராமநாதன் Yesterday at 11:05 pm

» நடிகரானார் கவுதம் மேனன்!-
by அ.இராமநாதன் Yesterday at 9:13 pm

» இயக்குனராகும் மதுபாலா!
by அ.இராமநாதன் Yesterday at 9:12 pm

» கதாபாத்திரத்திற்காக மொட்டையடித்த, பூர்ணா!
by அ.இராமநாதன் Yesterday at 9:12 pm

» சுபாஷ் சந்திரபோஸ் வேடத்தில் ராணா!
by அ.இராமநாதன் Yesterday at 9:11 pm

» பாஸ்கர் ஒரு ராஸ்கல்' படத்தில் ஆண்ட்ரியா பாடியுள்ளார்
by அ.இராமநாதன் Yesterday at 9:10 pm

» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by கவிப்புயல் இனியவன் Sat Nov 18, 2017 9:04 pm

» டூ லெட் தமிழ் திரைபடம் சிறந்த படமாக தேர்வு
by அ.இராமநாதன் Sat Nov 18, 2017 5:17 am

» முதல் பார்வை: 'தீரன் அதிகாரம் ஒன்று' - நேர்த்தியான போலீஸ் சினிமா!
by அ.இராமநாதன் Sat Nov 18, 2017 5:15 am

» வெளியானது 'ஒரு பக்க கதை' படத்தின் ட்ரைலர்!
by அ.இராமநாதன் Sat Nov 18, 2017 5:11 am

» எந்த கட்சி ஆட்சிக்கு வருதோ, அதுதான் நம்ம கட்சி…!!
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 9:56 pm

» ஆபரேசன் பண்ணிக்க பயப்படாதீங்க…!!
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 9:56 pm

» கிட்னி திருடுபோனா நிர்வாகம் பொறுப்பல்ல…!!
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 9:55 pm

» மாமியாரை சமாளிக்க சக்களத்தி துணை வேணும்...!!
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 7:42 pm

» வீட்டுலதான் எட்டு ஓட்டு இருக்கே...?!
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 7:36 pm

» வீடு வரும்போதே ஏன் இறங்கலை...!!
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 7:34 pm

» சொரணை இருக்கிறவளான்னு கிள்ளி பார்த்தேன்...!!
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 7:26 pm

» - மேய்ச்சல் - கவிதை
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 5:44 pm

» பயம் - கவிதை
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 5:44 pm

» கும்ப ராசிக்காரர்களுக்கு காரத்திகை மாத பலன்
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 5:23 pm

» சென்னையில் 5ஜி சேவை: நோக்கியா தகவல்!!
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 5:18 pm

» போர்ப்ஸ் பத்திரிக்கையின் இளம் கண்டுபிடிப்பாளர்கள் பட்டியலில் இடம்பிடித்த சென்னை பெண்
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 5:12 pm

» உரிய அனுமதி கிடைத்தவுடன் தமிழகத்தில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்கப்படும்: இந்திய அணுசக்தி கழகம்
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 5:09 pm

» குரலை இனிமையாக்கும் மாங்கனி
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 5:07 pm

» இது வாட்ஸ் அப் கலக்கல்...!!
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 3:18 pm

» காலை வணக்கம்....
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 3:17 pm

» கழுதை போச்சே! - சிறுவர் கதை
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 3:12 pm

» போஸ்ட் ஆபீசில், 'ஆதார்' சேவை
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 3:03 pm

» ‘இம்சை அரசன்’ படத்தில் நடிக்க மறுப்பு நடிகர் வடிவேலுவுக்கு நோட்டீஸ்
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 2:56 pm

» சூர்யா வெளியிட்ட நாச்சியார் டீசர்!
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 2:56 pm

» கட்டுகட்டாக ரூ. 2000 ஆயிரம் ரூபாய் நோட்டுகளுடன் நடிகர் விஷால் டுமீல் வீடியோ...
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 2:55 pm

» தீபிகாவின் மூக்கை வெட்டுவோம்! ராஜபுத்திர அமைப்பு கடும் மிரட்டல்
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 2:51 pm

» ஆசிய பணக்கார குடும்பங்களில் முகேஷ் அம்பானிக்கு முதலிடம்
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 2:50 pm

» புதிய உச்சத்தை தொட்டது முட்டை விலை
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 2:49 pm

» நகைக்கடையின் கூரையில் துளைபோட்டு பட்டப்பகலில் உள்ளே இறங்கி துணிகர கொள்ளை
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 2:48 pm

» நாங்க சுற்றுலா பயணிகள் அல்ல... இரயில்வே பணியாளர்கள்!
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 2:47 pm

» பத்மாவதி படத்திற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 2:45 pm

» வங்கியில் சேமிப்பு கணக்கு ஆரம்பித்தல் (தொடர் பதிவு)
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 11:51 am

» கணவர் தேவைன்னு விளம்பரம் கொடுத்தது தப்பா போச்சு...!!
by அ.இராமநாதன் Thu Nov 16, 2017 6:59 pm

» தாத்தாவுக்கு பல்ஸ் விழுந்து போச்சு...!!
by அ.இராமநாதன் Thu Nov 16, 2017 6:57 pm

» தங்கம் இலவசம்னு தப்பா புரிஞ்சுகிட்டாங்க....!!
by அ.இராமநாதன் Thu Nov 16, 2017 6:56 pm

» நர்ஸோட ஸ்ட்ரக்சர் சூப்பர்னு கமெண்ட் அடிச்சார்...!!
by அ.இராமநாதன் Thu Nov 16, 2017 6:56 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



வான் தொட்டில் !

View previous topic View next topic Go down

வான் தொட்டில் !

Post by eraeravi on Fri Sep 23, 2016 12:09 pm

வான் தொட்டில்
நூல் ஆசிரியர் :
காவல் உதவி ஆணையர், கவிஞர் முனைவர்

ஆ. மணிவண்ணன் a.m.lastcitizen@gmail.com

நூல் விமர்சனம் : கவிஞர் இரா இரவி !



வானதி பதிப்பகம், 23 தீனதயாளு தெரு, தியாகராயர் நகர், சென்னை17
192 பக்கங்கள் விலை ரூ. 125/- 044-24342810/2310769
vanathipathippakam@gmail.com



******

     நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் ஆ.மணிவண்ணன் அவர்கள் காவல்துறை உதவி ஆணையாளர் பதவியில் இருந்த போதும் எல்லோரிடமும் மிக அன்பாக பழகிடும் பண்பாளர்.  காவல் துறையில் இருந்து கொண்டு கவிதைத்துறையிலும் தடம் பதித்து வருபவர்.  சிறந்த கவிஞர் என்பதைத் தாண்டி சிறந்த மனிதர் என்றே சொல்ல வேண்டும்.  உதவி ஆய்வாளராக பதவியில் சேர்ந்து உதவி ஆணையர் பதவி வரை பதவி உயர்வு பெற்றுள்ளார்.  நேர்மையான அதிகாரி.

     கவிதைஉறவு ஆசிரியர் கலைமாமணி ஏர்வாடியார் அவர்கள் சகோதரி மதுரையில் இருக்கிறார். அவர்களுக்கு காவல்துறை உதவி தேவைப்பட்ட்து.  நூல் ஆசிரியர் கவிஞர் மணிவண்ணன் அவர்களுக்கு அலைபேசியில் அழைத்து வேண்டினேன்.  உடன் உதவி செய்து முடித்துவிட்டு அலைபேசியில் அழைத்துத் தகவல் தந்தார்.  பதச்சோறாக ஒன்று சொல்லி உள்ளேன்.

என் போன்ற பல இலக்கியவாதிகளுக்கு சட்டத்திற்குட்பட்ட பல உதவிகளை செய்தவர், செய்து வருபவர். அகவிழி பார்வையற்றோர் விடுதிக்கு வர வேண்டும் என்று நான் அழைத்ததும் உடன் வந்து விழாவைச் சிறப்பித்தவர்.

     ‘வான் தொட்டில்’ நூலின் பெயரே வித்தியாசமாக உள்ளது.  வான் தொட்டில் என்று படித்ததும் என் நினைவிற்கு வான்மேகம் வந்து போனது, இந்த நூலை மாமனிதர் அப்துல்கலாமிற்கு காணிக்கை ஆக்கி இருக்கிறார்.

காவல்துறை இயக்குநர் முனைவர் கி. இராதாகிருஷ்ணன், மேனாள் காவல்துறை கூடுதல் தலைமை இயக்குநர் கி. இராதாகிருஷ்ணன், காவல்துறை தலைவர் அ. பாரி இ.கா.ப. ஆகியோரின் வாழ்த்துரையும்,தமிழ்த்தேனீ முனைவர் இரா. மோகன் அவர்களின் விரிவான விளக்கமான அணிந்துரையும் நூலின் அழகிற்கு மேலும் அழகு சேர்ப்பதாக உள்ளது.

வானதி பதிப்பகத்தார் இந்த நூலை கவிதைக்குப் பொருத்தமான படங்களுடன் மிக நேர்த்தியாக அச்சிட்டுள்ளனர். பாராட்டுகள்.

     இது நூலாசிரியரின் 4வது நூல். அவரது முந்தைய நூல்கள் படித்து மதிப்புரை இணையத்தில் பதிவு செய்து இருக்கிறேன்.

     நூல் ஆசிரியர் உலகப் பொதுமறை திருக்குறள் ஆழ்ந்து படித்தவர். அறவழியில் நடப்பவர், கவிதைகளும் அறம் பாடுகின்றன.

நான்

பொதுப்பாதை

வரிசையில் கடைசியில் நிற்கிறேன்
சிலர்

குறிப்பிட்ட

குறுக்குவழியில்

சென்று அடையும்

பதவியை...!

என் பொதுப்பாதையில் நிற்போர்
எவ்வளவு மனதால் சாபமிடுவார்கள்

அந்தச் சாபம்
எனக்கு வேண்டாம்

மெதுவாய்க்

கிடைக்கட்டும்

மேன்மைப்பதவி,

நேர்வழியில் நடப்பதுவே நிம்மதியான வாழ்க்கை, குறுக்கு வழி என்பது கேடு தரும் என்பதை அழகாக காட்டி உள்ளார். பாராட்டுகள்.

உயிர்காக்கும் உன்னதப் பணிபுரியும் மருத்துவர்களில் சிலர் பணத்திற்காக பலரைச் சுரண்டிடும் அவலத்தை எள்ளல் சுவையுடன் உணர்த்தியுள்ளார். பாராட்டுக்கள்.




தெப்பக்குளம் வெட்டித்தான்

அன்றைய மன்னன்
திருமலை நாயக்கர்  

அவ்வளவு பெரிய

அரண்மனையைக் கட்டினான் !

இன்றைய மருத்துவமன்னர்களும்


அரண்மனை கட்ட

நோயாளிகள்
நாங்கள் ஒத்துழைக்கிறோம்.

உண்மைதான் நோயாளிகளிடம் சுரண்டி சிலர் அரண்மனை போல வீடு கட்டி உள்ளனர்.

கடவுளின் சன்னதியில் நடக்கும் பராபட்சத்தை கடிந்து உள்ளார்.  நூல் ஆசிரியர் கவிஞர் மணிவண்ணன் சிறந்த ஆன்மிகவாதி, பகுத்தறிவுவாதி அல்ல.  ஆனாலும் நாட்டில் கடவுள் முன் நடக்கும் அநீதியை கவிதையில் சுட்டி  உள்ளார்.

ஆயிரத்தெட்டு தடவை

போற்றிப் பாடிய

என்னை
விடுத்து !

‘ஆடி’ காரில்

வந்தவரை முதலில்

அழைத்தவரே !
என்னைவிட உனக்காக

அலகு குத்தி

பறவைக் காவடியில்

தொங்கிய பக்தனை

அழைத்திருந்தால் !

உன்னைப் பாராட்டியிருப்பேன்.

     நூல் ஆசிரியர் அவர்கள் காவல்துறை அலுவலராகப் பணி புரிவதால் மனதில் பட்டதை எழுத முடியாது. எதையும் அடக்கியே வாசிக்க வேண்டும்.  அதனையும் கவிதையில் காட்டி உள்ளார்.

தெரியவில்லை ஆண்டவனே

அகத்தியனாக மாறி இந்த

ஆ.மணிவண்ணன்

என்ற  

காவிரி நதியை காவல்துறையெனும்

கமண்டலத்தில்

அடைத்து விட்டான்.  எந்த விநாயகர்

வந்து

கொட்டிவிட்டு

நதியாக்கப்போகிறாரோ. தெரியவில்லை.

இன்னும் சில ஆண்டுகள் உள்ளன.  ஓய்வுபெற்ற பின் நீங்கள் சுத்ந்திரமாக எழுதிக் கொள்ளலாம்.  நெஞ்சு பொறுக்குதில்லையே என சில கவிதைகளும் பாடி உள்ளார்.  வாக்களிக்க பணம் வாங்கிடும் அவலத்தையும் கட்டி உள்ளார்.

நமக்காக சிந்திப்போம்!

மக்க்ளாட்சித் திருவிழாவான

தேர்தல் !

ஊழல் பணம்
கடைசிக் குடிமகனுக்கும்

பாய்கின்றது !
உண்மையான

பொதுவுடைமை

இதுவென்று நாம்
பெருமை கொள்ள! இயலாது !

வெட்கப்பட வேண்டும்.

உண்மைதான் உலகின் மிகப்பெரிய மக்களாட்சி நாடு என்று மார் தட்டும் நமக்கு, இது தலைகுனிவுதான். கேவலம் தான்.

எந்த சூழ்நிலையிலும் யார் எள்ளி நகையாடினாலும் அறம் தவறாதே நேர்வழியிலேயே தொடர்ந்து செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தியது சிறப்பு. பாராட்டுகள்.




நீ நீயாகவே இரு

உன் கொள்கையால்!
உன் குடும்பத்தார்

சற்று சங்கடம்

அனுபவித்தாலும் தலைமுறையை நிமிரச்செய்கின்றாய்

அது

உன்
தலைமுறையை ஒங்கச் செய்யும்.

தடுக்கி விழுந்தால் மதுக்கடை. முன்பு யாராவது ஒருவர்தான் குடிப்பார். ஆனால் இன்று யாராவது ஒருவர் தான் குடிக்காமல் இருக்கிறார். அவரையும் கேலி செய்து மகிழ்கின்றனர்.

 குடித்துவிட்டு வாகனம் ஒட்டுவது வாடிக்கையாகி விட்டது.  விழிப்புணர்வு விதைக்கும் வாகனங்கள் பல எழுதி உள்ளார்.  அவற்றிலிருந்து பதச்சோறாக ஒன்று.

சாதாரணமாய்! தடுமாறும் நீ

‘சரக்கை’ ஏற்றி
சறுக்கி விழலாமா

சாவினை

வரவேற்கலாமா?

காவல்துறையில் உள்ள இடப்பாடுகளை காவலர் அடையும் துன்பங்களையும் கவிதையில் கட்டி உள்ளார்.

எல்லைக் காக்கும்

ராணுவம் சந்திப்பது!

என்றாவது
ஒரு தடவை போர் !

நாங்கள் மக்களி(ன்)டம்

உள் நாட்டுப் போர்களை

தினமும் சந்திக்கின்றோம் !

உண்மைதான் இன்றைக்கு தினந்தோறும் போராட்டம் ,கலவரம் செய்தியாக வருகின்றது.

நான் மிகவும் நேசிக்கும் என் பிறந்த ஊரான மதுரையைப் பற்றியும் கவிதை எழுதி உள்ளார்.

மதுரைக்காரனுக்கு

தங்கம் மட்டுமல்ல

வாழும் போதே சொர்க்கம்

தமிழ் வளரச் சங்கம் வளர்த்து

தலைநிமிர்ந்த பூமி.

மதிப்புரையில் குறிப்பிட என்று மடித்து வைத்துக் கொண்டே வந்தேன் கடைசியில் எல்லாப்பக்கத்தையும் மடித்துவிட்டேன். பின் மறு ஆய்வு செய்து தேர்ந்தெடுத்தேன். பாராட்டுகள்.

வாழ்த்துகள்..! தொடர்ந்து எழுதுங்கள்..!



நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

http://tamil.pratilipi.com/kavignar-eraravi



https://www.facebook.com/rravi.ravi


www.kavimalar.com



http://www.eraeravi.blogspot.in/
.

http://www.tamilthottam.in/f16-forum


http://eluthu.com/user/index.php?user=eraeravi




http://www.eegarai.net/sta/eraeravi



இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !

eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2131
Points : 4829
Join date : 18/06/2010

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum