"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by கவிப்புயல் இனியவன் Today at 9:04 pm

» டூ லெட் தமிழ் திரைபடம் சிறந்த படமாக தேர்வு
by அ.இராமநாதன் Today at 5:17 am

» முதல் பார்வை: 'தீரன் அதிகாரம் ஒன்று' - நேர்த்தியான போலீஸ் சினிமா!
by அ.இராமநாதன் Today at 5:15 am

» வெளியானது 'ஒரு பக்க கதை' படத்தின் ட்ரைலர்!
by அ.இராமநாதன் Today at 5:11 am

» எந்த கட்சி ஆட்சிக்கு வருதோ, அதுதான் நம்ம கட்சி…!!
by அ.இராமநாதன் Yesterday at 9:56 pm

» ஆபரேசன் பண்ணிக்க பயப்படாதீங்க…!!
by அ.இராமநாதன் Yesterday at 9:56 pm

» கிட்னி திருடுபோனா நிர்வாகம் பொறுப்பல்ல…!!
by அ.இராமநாதன் Yesterday at 9:55 pm

» மாமியாரை சமாளிக்க சக்களத்தி துணை வேணும்...!!
by அ.இராமநாதன் Yesterday at 7:42 pm

» வீட்டுலதான் எட்டு ஓட்டு இருக்கே...?!
by அ.இராமநாதன் Yesterday at 7:36 pm

» வீடு வரும்போதே ஏன் இறங்கலை...!!
by அ.இராமநாதன் Yesterday at 7:34 pm

» சொரணை இருக்கிறவளான்னு கிள்ளி பார்த்தேன்...!!
by அ.இராமநாதன் Yesterday at 7:26 pm

» - மேய்ச்சல் - கவிதை
by அ.இராமநாதன் Yesterday at 5:44 pm

» பயம் - கவிதை
by அ.இராமநாதன் Yesterday at 5:44 pm

» கும்ப ராசிக்காரர்களுக்கு காரத்திகை மாத பலன்
by அ.இராமநாதன் Yesterday at 5:23 pm

» சென்னையில் 5ஜி சேவை: நோக்கியா தகவல்!!
by அ.இராமநாதன் Yesterday at 5:18 pm

» போர்ப்ஸ் பத்திரிக்கையின் இளம் கண்டுபிடிப்பாளர்கள் பட்டியலில் இடம்பிடித்த சென்னை பெண்
by அ.இராமநாதன் Yesterday at 5:12 pm

» உரிய அனுமதி கிடைத்தவுடன் தமிழகத்தில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்கப்படும்: இந்திய அணுசக்தி கழகம்
by அ.இராமநாதன் Yesterday at 5:09 pm

» குரலை இனிமையாக்கும் மாங்கனி
by அ.இராமநாதன் Yesterday at 5:07 pm

» இது வாட்ஸ் அப் கலக்கல்...!!
by அ.இராமநாதன் Yesterday at 3:18 pm

» காலை வணக்கம்....
by அ.இராமநாதன் Yesterday at 3:17 pm

» கழுதை போச்சே! - சிறுவர் கதை
by அ.இராமநாதன் Yesterday at 3:12 pm

» போஸ்ட் ஆபீசில், 'ஆதார்' சேவை
by அ.இராமநாதன் Yesterday at 3:03 pm

» ‘இம்சை அரசன்’ படத்தில் நடிக்க மறுப்பு நடிகர் வடிவேலுவுக்கு நோட்டீஸ்
by அ.இராமநாதன் Yesterday at 2:56 pm

» சூர்யா வெளியிட்ட நாச்சியார் டீசர்!
by அ.இராமநாதன் Yesterday at 2:56 pm

» கட்டுகட்டாக ரூ. 2000 ஆயிரம் ரூபாய் நோட்டுகளுடன் நடிகர் விஷால் டுமீல் வீடியோ...
by அ.இராமநாதன் Yesterday at 2:55 pm

» தீபிகாவின் மூக்கை வெட்டுவோம்! ராஜபுத்திர அமைப்பு கடும் மிரட்டல்
by அ.இராமநாதன் Yesterday at 2:51 pm

» ஆசிய பணக்கார குடும்பங்களில் முகேஷ் அம்பானிக்கு முதலிடம்
by அ.இராமநாதன் Yesterday at 2:50 pm

» புதிய உச்சத்தை தொட்டது முட்டை விலை
by அ.இராமநாதன் Yesterday at 2:49 pm

» நகைக்கடையின் கூரையில் துளைபோட்டு பட்டப்பகலில் உள்ளே இறங்கி துணிகர கொள்ளை
by அ.இராமநாதன் Yesterday at 2:48 pm

» நாங்க சுற்றுலா பயணிகள் அல்ல... இரயில்வே பணியாளர்கள்!
by அ.இராமநாதன் Yesterday at 2:47 pm

» பத்மாவதி படத்திற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு
by அ.இராமநாதன் Yesterday at 2:45 pm

» வங்கியில் சேமிப்பு கணக்கு ஆரம்பித்தல் (தொடர் பதிவு)
by அ.இராமநாதன் Yesterday at 11:51 am

» கணவர் தேவைன்னு விளம்பரம் கொடுத்தது தப்பா போச்சு...!!
by அ.இராமநாதன் Thu Nov 16, 2017 6:59 pm

» தாத்தாவுக்கு பல்ஸ் விழுந்து போச்சு...!!
by அ.இராமநாதன் Thu Nov 16, 2017 6:57 pm

» தங்கம் இலவசம்னு தப்பா புரிஞ்சுகிட்டாங்க....!!
by அ.இராமநாதன் Thu Nov 16, 2017 6:56 pm

» நர்ஸோட ஸ்ட்ரக்சர் சூப்பர்னு கமெண்ட் அடிச்சார்...!!
by அ.இராமநாதன் Thu Nov 16, 2017 6:56 pm

» வீட்டை வித்துத்தான் வாடகை கொடுக்கணும்...!!
by அ.இராமநாதன் Thu Nov 16, 2017 6:54 pm

» திரைப்பட பாடல் மூலம் பிரிந்த தம்பதி இணைந்தனர்
by அ.இராமநாதன் Thu Nov 16, 2017 1:57 pm

» மொபைல் - ஆதார் இணைப்பு: 3 புதிய வசதிகள் அறிவிப்பு
by அ.இராமநாதன் Thu Nov 16, 2017 1:48 pm

» பாம்பனில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு
by அ.இராமநாதன் Thu Nov 16, 2017 1:47 pm

» சீட் பெல்ட் அணியாததால் நாளொன்றிற்கு 15 பேர் மரணம்
by அ.இராமநாதன் Thu Nov 16, 2017 1:46 pm

» உறக்கம் எப்போது இனிமையாகிறது?
by அ.இராமநாதன் Thu Nov 16, 2017 11:57 am

» குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்குமா?
by அ.இராமநாதன் Thu Nov 16, 2017 11:57 am

» பெண்கள் அதிகம் பயன்படுத்தும் ஆயுதம் எது?
by அ.இராமநாதன் Thu Nov 16, 2017 11:56 am

» காதலியைப் புகழ்வது போல…!! –
by அ.இராமநாதன் Thu Nov 16, 2017 11:55 am

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



புத்திசாலியான திருடன்

View previous topic View next topic Go down

புத்திசாலியான திருடன்

Post by கவிப்புயல் இனியவன் on Tue Jul 16, 2013 10:22 pm

திருடர்கள் பலவிதம். ஒவ்வொரு திருடரும் ஒவ்வொரு விதம்.  திருடர்களை அறிந்து கொள்வதற்கு முன்னர் 'திருட்டு' என்றால் என்ன என்பதைப் பார்ப்போம். 'ஒருவருக்குச் சொந்தமான ஒன்றை அவரது அனுமதி இன்றி உடமை கொள்ளல் திருட்டு' ஆகும். 

இங்கே அனுமதி என்பது கொடுப்பவரின் உரிமை மாற்றம்.  அதாவது ஒன்றை நாம் எமது சொந்தம் ஆக்குவதற்கு அதன் உரிமையாளர்  அதன் மீதான தனது உரிமையை எமக்கு மாற்றம் செய்தல் வேண்டும். உரிமை மாற்றம் செய்யப்படாமல் நாம் உடமை கொள்ளும் அனைத்தும் திருட்டுத்தான்.   

திருட்டு இரண்டு வகையானது.  ஒன்று நேரடியான திருட்டு. மற்றையது மறைமுகமான திருட்டு. நேரடியான திருட்டு என்பது  மேலே குறிப்பிட்டதைப் போன்று ஒன்றை நாம் உரிமை மாற்றம் செய்யப்படாமல்  

சொந்தமாக்கியிருத்தலாகும்.. மறைமுகமான  திருட்டானது  ஒன்றை நாம் சொந்தம்  கொள்வதற்கு அதற்கான வெகுமதியைக் கொடுத்தாலும் அந்தப் பொருளை எமக்குக் கொடுத்தவருக்கு  அதன் மீது உரிமை இல்லாவிடின்  அதுவும் களவு தான். அதாவது, 

திருடப்பட்ட ஒரு பொருளை திருட்டுப் பொருள் என நாம் அறியாமல்  திருடியவரிடம் விலை கொடுத்து வாங்கினாலும் அதுவும்  திருட்டுத்தான்.  ஏனெனில் அந்தப் பொருளின் மீதான உரிமை அதன் உண்மையான உரிமையாளரிடம் இருந்து மாற்றப்படவில்லை என்பதனாலாகும்.

திருடர்கள் பலவிதமானவர்களாக இருந்தாலும் அவர்களையும் இரண்டு வகைக்குள் உள்ளடக்கலாம். உங்களை (மனதை)த்  திருடுபவர்கள் ஒரு வகை.  உடைமைகளைத் திருடுபவர்கள் இன்னொரு வகை. உண்மையில் நாம் எல்லோரும் திருடர்கள் தான்.  ஏனெனில் இந்த இரண்டு வகைத் திருட்டில் ஏதாவது ஒன்றை நாம் செய்திருப்போம் அல்லது செய்துகொண்டிருக்கிறோம்.

இந்தத் திருடர்களில் அசையும் அசையாச் சொத்துக்களைத் திருடுபவர்கள் சட்டத்தால் குற்றவாளிகளாகக் கருதப்பட்டு திருட்டின் தன்மைக்கும் திருடப்படும் சொத்தின் பெறுமதிக்கும்  ஏற்றவாறு தண்டனையின் தன்மை அமையும். 

 மாறாக மனதைத் திருடுபவர்கள் சமுதாய ஒழுக்க விதிகளுக்கு முரண்படாமல் திருடுவார்களாயின்  அவர்கள் தண்டிக்கப் படாமல் தட்டிக்கொடுக்கப்படுகிறார்கள்.  இந்தத் திருடர்கள் அன்பு, அறிவு, அமைதி ஆகிய மூன்றையும் தமது திருட்டுக்கான கருவிகளாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

திருட்டு சிலருக்கு ஒருதொழில். சிலருக்கு ஒரு கலை.   திருடர்கள்   திறமைசாலிகள். ஆனால் புத்திசாலிகள் அல்ல. இவர்களால் ஒருவரிடம் இருக்கும் அத்தனை சொத்துக்களையும் திருட முடியாது. 

ஏனெனில் மற்றவர்களுக்குத் தெரியாமல் அங்கு இங்கு என்று புதைத்து வைத்திருக்கும்  சொத்துக்களையோ , ஒருவரிடம் உள்ள தொட்டுணர முடியாத கல்வி, புத்திக் கூர்மை , அனுபவம் போன்ற  சொத்துக்களையோ திருட முடியாது.  ஆனால் எந்தவித  மட்டுப்படுத்தலுக்கும், கட்டுப்படுத்தலுக்கும் இடங்கொடாத ஒரேயொரு  திருடன் இருக்கிறான்.
 
 இந்தத் திருடன் தான் புத்திசாலியான திருடன். யார் இந்தத் திருடன்?  இந்தப் புத்திசாலியான திருடன்  எம்முடன் சேர்ந்தே இருப்பான்.  ஒரு கணப் பொழுதேனும் எம்மை விட்டுப் பிரியமாட்டான்.  எம்மால் சேகரிக்கப்படும் அனைத்தும் இந்தத் திருடனின் பார்வையிலும் பதிவிலும் இருந்து தப்புவதில்லை.  

நாம் ஒவ்வொருவரும் எமக்கே உரித்தான பிரத்தியேகமான வாழ்க்கை முறையைக் (exclusive living system)  கொண்டவர்கள்.  .  நாம்  வாழ்வது போல்  இன்னொருவர் வாழ்ந்ததுமில்லை, வாழப் போவதுமில்லை. அத்தனை சிறப்பு வாய்ந்த வாழ்க்கை முறையை நாம் ஒவ்வொரும் நகர்த்திக்கொண்டிருக்கிறோம். 

இந்த வாழ்க்கை முறையில் நாம் ஒவ்வொருவரும் அறிவு, மதி நுட்பம், அனுபவம், அசையும் அசையாச் சொத்துக்கள் உட்பட பலவற்றைச்  சேகரித்தவண்ணம் நகர்ந்துகொண்டிருக்கின்றோம். இந்த நகர்வுடன் புத்திசாலியான அந்தத் திருடனும் இணைந்து நகர்ந்துகொண்டிருக்கின்றான். தனக்குச் சாதகமான ஒரு

 சந்தர்ப்பத்தில் இந்தப் பிரத்தியேகமான வாழ்க்கை முறைக்கு, எமது நகர்வுக்கு ஓரு  முற்றுப்புள்ளி வைக்கும் ‘மரணம்’ தான் அந்தத் திருடன். முற்றுப்புள்ளி வைப்பதன் மூலம் நாம் சேர்த்து வைத்த  அனைத்தையும் எமது அனுமதி இல்லாமல் எடுத்துச் செல்லும்

   அந்தத் திருடன்தான் (கூற்றுவன், காலன், இயமன் எனப் பல்வேறு  பெயர்களால் அழைக்கப்படும்) 'மரணம்'. மரணத்தைப் போல் எவருமே திருட முடியாது. உலகில் அதீத திறமைமிக்க திருடனிடம் கூட இந்தப் புத்திசாலியான திருடன் திருடிவிடுவான்.   

                           நன்றியுடன் - KG Master
avatar
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14365
Points : 17189
Join date : 07/07/2013
Age : 52
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

Re: புத்திசாலியான திருடன்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Wed Jul 17, 2013 12:50 pm

அருமையான பகிர்வு பகிர்வுக்கு நன்றி ஐயா

_________________

தமிழ்த்தோட்டம்

முகநூல் - தமிழ்த்தோட்டம்

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...

நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56806
Points : 69546
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: புத்திசாலியான திருடன்

Post by கவிப்புயல் இனியவன் on Wed Jul 17, 2013 4:46 pm

நன்றிகள் ..
avatar
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14365
Points : 17189
Join date : 07/07/2013
Age : 52
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum