"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» ‘உள்ளுவதெல்லாம்’ நூல் ஆசிரியர் : தமிழ்மாமணி வா.மு.சே. திருவள்ளுவர் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Yesterday at 9:55 pm

» கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்
by கவிப்புயல் இனியவன் Yesterday at 9:50 pm

» வெளிச்ச விதைகள் ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! மதிப்புரை பேராசிரியர் முனைவர் யாழ் சு. சந்திரா, மதுரை ஸ்ரீ மீனாட்சி அரசினர் பெண்கள் கல்லூரி !
by eraeravi Yesterday at 9:06 pm

» இரா. இரவியின் படைப்புலகம் ! நூல் ஆசிரியர் தமிழ்த் தேனீ முனைவர் இரா .மோகன் ! மதிப்புரை பேராசிரியர் முனைவர் யாழ் சு. சந்திரா, மதுரை ஸ்ரீ மீனாட்சி அரசினர் பெண்கள் கல்லூரி !
by eraeravi Yesterday at 9:06 pm

» கண்டிஷன் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Tue Jun 20, 2017 9:50 pm

» கொடுப்பினை – ஒரு பக்ககதை
by அ.இராமநாதன் Tue Jun 20, 2017 9:47 pm

» ரிசல்ட் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Tue Jun 20, 2017 9:46 pm

» கடன் பாட்டு…!!
by அ.இராமநாதன் Tue Jun 20, 2017 9:43 pm

» பிசுக்கு – பொசுக்கு (வீட்டுக்குறிப்புகள்)
by அ.இராமநாதன் Tue Jun 20, 2017 9:33 pm

» நீட் எக்ஸாம்…
by அ.இராமநாதன் Tue Jun 20, 2017 9:32 pm

» சாதுர்யம் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Tue Jun 20, 2017 9:31 pm

» நம்பிக்கை – குட்டி கதை
by அ.இராமநாதன் Tue Jun 20, 2017 9:31 pm

» பழமொழிகள்…
by அ.இராமநாதன் Tue Jun 20, 2017 9:29 pm

» நண்பரால் நன்மை பலவுண்டு – கவிதை
by அ.இராமநாதன் Tue Jun 20, 2017 9:21 pm

» சீற்றம் – கவிதை
by அ.இராமநாதன் Tue Jun 20, 2017 9:20 pm

» படிக்கணும் நாமும் படிக்கணும்
by அ.இராமநாதன் Tue Jun 20, 2017 9:20 pm

» அன்பு போர்வை
by அ.இராமநாதன் Tue Jun 20, 2017 9:19 pm

» சாதனைக்கு மட்டும் அல்ல
by அ.இராமநாதன் Tue Jun 20, 2017 9:19 pm

» வாசகர் கவிதை
by அ.இராமநாதன் Tue Jun 20, 2017 9:17 pm

» எதிரி ஆணவத்தோட அலைகின்றானாம்..!
by அ.இராமநாதன் Tue Jun 20, 2017 8:51 pm

» நிகழ்ச்சிக்கு பேரு பியூட்டி வைத்தியம்!
by அ.இராமநாதன் Tue Jun 20, 2017 8:50 pm

» புகழ்ச்சி பிடிக்காது என்றீர்களே…மன்னா..?
by அ.இராமநாதன் Tue Jun 20, 2017 8:50 pm

» டாஸ்மாக் திறந்த பிறகு சரக்கு வந்துவிடும் மன்னா!
by அ.இராமநாதன் Tue Jun 20, 2017 8:49 pm

» ரேஷன் கார்டு கதைகள்…!
by அ.இராமநாதன் Tue Jun 20, 2017 8:49 pm

» ஓங்கி அடிச்சா…!
by அ.இராமநாதன் Tue Jun 20, 2017 8:48 pm

» ஆறு வித்தியாசம்…
by அ.இராமநாதன் Tue Jun 20, 2017 8:48 pm

» சிரிக்கலாம்வாங்க..
by அ.இராமநாதன் Tue Jun 20, 2017 8:47 pm

» உன் லவ்வர் கிரிக்கெட் பிளேயரா…?
by அ.இராமநாதன் Tue Jun 20, 2017 8:46 pm

» உட்கட்சி ஜனநாயகம் காணாம போயிருச்சு..!
by அ.இராமநாதன் Tue Jun 20, 2017 8:46 pm

» நாட்டுல தண்ணி கரைபுரண்டு ஓடுது..!
by அ.இராமநாதன் Tue Jun 20, 2017 8:46 pm

» இது டஸ்ட் அலர்ஜி மாதிரி கெஸ்ட் அலர்ஜி…!
by அ.இராமநாதன் Tue Jun 20, 2017 8:45 pm

» தங்கரதம் ! திரைப்பட விமர்சனம்; கவிஞர் இரா .இரவி ! இயக்கம்; பாலமுருகன் ! நடிப்பு ;வெற்றி !
by eraeravi Tue Jun 20, 2017 8:07 pm

» தத்துவம் மச்சி தத்துவம்
by அ.இராமநாதன் Sun Jun 18, 2017 2:40 pm

» ஆன்மீகம்- காதல் -கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Sun Jun 18, 2017 8:51 am

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Jun 18, 2017 8:45 am

» குச்சி ஐஸ் வேணுமா…
by அ.இராமநாதன் Sun Jun 18, 2017 8:39 am

» மனிதநேயம் என்ன செய்கிறது – கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 18, 2017 8:34 am

» எதையும் தாங்குவோம்!- (கூர்ம அவதார தத்துவம்.)
by அ.இராமநாதன் Sun Jun 18, 2017 8:31 am

» அப்பாவின் நினைவில் மகள்!
by அ.இராமநாதன் Sun Jun 18, 2017 8:30 am

» கொள்ளை வேந்தனே வருக’னு போர்டு வெச்சிட்டாங்களாம்..!
by அ.இராமநாதன் Sun Jun 18, 2017 8:29 am

» பசங்களுக்குத்தான் பெரிய மனசு
by அ.இராமநாதன் Sun Jun 18, 2017 8:28 am

» கட்சியிலே தொண்டர் பலம் இலல்லையாம்…!!
by அ.இராமநாதன் Sun Jun 18, 2017 8:27 am

» உலகின் பெரிய சோலார் பூங்கா ஆந்திராவில் இம்மாதம் துவக்கம்
by அ.இராமநாதன் Sun Jun 18, 2017 8:26 am

» ஜெ.,சொத்தை விற்க கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு
by அ.இராமநாதன் Sun Jun 18, 2017 8:24 am

» இந்திய கலாச்சாரத்திற்கும் தாஜ்மஹாலுக்கும் எந்த தொடர்பும் இல்லை : யோகி ஆதித்யநாத் -
by அ.இராமநாதன் Sun Jun 18, 2017 8:23 am

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines துக்கம்

View previous topic View next topic Go down

துக்கம்

Post by udhayam72 on Sun May 12, 2013 4:05 pm

துக்கம்

அப்பா வாசலில் தயாராக இருந்தார். நான் வீட்டினுள் துண்டைத் தேடிக்கொண்டிருந்தேன்.

"நீ கிளம்பலையா இன்னும்...?"

"இதோ வந்துட்டேன்."

வாசலுக்கு அவசரமாகப் போனேன்.

"எப்போ எடுப்பாங்களாம்..?"

ரொம்ப வேண்டிய மனிதர் ஒருவர் தவறிப் போய்விட்டார். இன்று காலையில் தான் தெரிந்தது. இப்போதே நேரம் ஆகிவிட்டது.

"ம். எப்படியும் ரெண்டு....மூணு மணி ஆகும்."

"நல்ல வேளை....ஞாயித்துக் கிழமையாப் போனார்..."

"சும்மா தலையைக் காட்டிட்டுத் திரும்பிடலாம்."

நடந்தோம். நான்கூட அவசியம் இல்லைதான். ஆனாலும், அப்படியும் சொல்ல முடியாது. போனவர் - இருந்த காலத்தில் எங்கள் குடும்பத்திற்கு நிறைய உதவிகள் செய்திருக்கிறார்.

பண உதவி செய்வது எப்போதும் எல்லோராலும் இயலாது. இடிந்து விழுகிற மனசை வார்த்தைகளால் நிமிர்த்துவதும், தைரியம் சொல்லித் தேற்றுவதும் ஒருகலை. அது செத்துப் போனவருக்கு நிறைய வாய்த்திருந்தது.

பானு கல்யாணத்தை நிச்சயம் செய்தபோது அப்பா எதிர்பார்த்த பணம் கைக்கு வரவில்லை. இன்னும் இரண்டு நாளில் முகூர்த்தம். அப்பா தடுமாறிப் போய்விட்டார். நானும் அப்போது வேலையில் சேராத நேரம்.

"என்னடா ரெங்கா...ஏன் இப்படி இடிஞ்சு போய் உட்கார்ந்திருக்கே..?"

எப்படித் தெரிந்ததோ, ஆபத்பாந்தவன்போல் வந்துவிட்டார்.

"எனக்கு ஒண்ணுமே புரியலே..."

"போடா முட்டாள்! ஒண்ணுமில்லாத விஷயத்தைப் பொ¢சாக்கிக்கிட்டு. எழுத்திரு, வா என்கூட சட்டையைப் போட்டுக்க"

போனார்கள். என்ன நிகழ்ந்ததோ, திருமணம் மட்டும் நல்லபடியாக நடந்து முடிந்தது. அப்பா மலர்ச்சியாக இருந்தார். அடுத்த மாதம்தான் அப்பாவின் பணம் கிடைத்தது. இருந்தாலும், பிரச்னை எதுவும் எழவில்லை.

இது ஒரு உதாரணம்தான். இதுபோல் இன்னும் எத்தனையோ.

ஆனால், ஒன்று மட்டும் நிச்சயம். செத்துப் போனவரின் பங்கு எங்கள் குடும்பத்தின் இன்றைய வளர்ச்சியில் அதிகம். நன்றியுடன் நினைவு கூர வேண்டிய தருணங்கள் பல.

அம்மா பின்னால் கிளம்பி வருவதாகச் சொல்லியிருந்தாள். வீட்டு வாசலில் ஆண்கள். உள்ளே, உடல் அருகே வீட்டுப்பெண்மணிகள்.

"என்ன, இப்படித் திடீர்னு...." என்றார் அப்பா.

நான் பொதுவாக முகம் வைத்துக்கொண்டு நின்றேன். இறந்தவரின் கடைசி தினம் விளக்கமாகச் சொல்லப்பட்டது.

உள்ளே போனோம். தூங்குகிற மாதிரிதான் படுத்திருந்தார். வித்தியாசம் கைகளையும் கால்களையும் இணைத்த கட்டு.

திடீரென விக்கலெடுக்கிற பாணியில் ஒரு அழுகைச் சத்தம் கேட்டது. அப்பாதான். டவலால் முகத்தை மூடிக்கொண்டு விம்மி விம்மி அழுதார்.

சில விநாடிகளுக்குப் பின் வெளியே வந்தார்.

"எப்படியும் ரெண்டு...மூணு மணி ஆயிருமா...எடுக்கிறதுக்கு...?" என்றார் சாதாரண குரலில்.

'சற்றுமுன் அப்படி அழுதவரா?' என்றிருந்தது.

விரல்விட்டு எண்ணிவிடலாம்......அங்கிருந்த ஆண்களை. வீட்டுக் குழந்தைகளுக்குச் சாப்பிட என்ன கொடுத்தார்களோ..? நேற்றிரவே உயிர் பிரிந்துவிட்டது. இதர வேலைகளுக்கு யார் துணை...? கைச் செலவுக்குப் பணம் வைத்திருக்கிறார்களா..?

என் மனம் கேள்விகளால் குழம்பியிருந்தது.

அப்பா ஜாடை காட்டினார் - 'போகலாமா' என்பது போல. இன்று நல்ல முகூர்த்ததினம். இன்னொரு வேண்டியவர் வீட்டுப் பெண் திருமணம்.

வெளியில் வந்தேன், எதுவும் பேசாமலே.

"குளிச்சிட்டு, அங்கே வேறே போகணும். வரலேன்னா தப்பா நினைச்சுக்குவாங்க" என்றார் மெல்லிய குரலில்.

என் கவலைகளைச் சொன்னேன்.

"பாவம்...துணைக்கு ஆள் யாரும் இல்லை போலிருக்கே?"

"சீச்சீ....ஏன் இல்லாம? அந்தம்மாவுக்கு ஒன்றுவிட்ட தம்பியோ அண்ணாவோ, அதெல்லாம் அப்பவே ஏற்பாடு செஞ்சிருப்பாங்க. ரொம்ப உபகாரி, எல்லோருக்கும் வேண்டப்பட்ட மனுஷன். கரெக்டா எல்லாம் நடந்திடும். எத்தனை பேருக்கு உதவி பண்ணியிருக்கார். யாராவது இப்ப உதவிக்கு வராமலா இருந்திடுவாங்க?"

மனசுக்குள் முள் உறுத்த குனிந்த தலை நிமிராமல் அப்பாவைப் பின் தொடர்ந்தேன்.
avatar
udhayam72
குறிஞ்சி
குறிஞ்சி

Posts : 948
Points : 2454
Join date : 02/05/2013
Age : 35
Location : bombay

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum