"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» சின்ன வீடு - ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Today at 9:48 am

» வண்ணக் கனவுகள்!
by அ.இராமநாதன் Today at 9:26 am

» வாசகர் கவிதை
by அ.இராமநாதன் Today at 9:19 am

» கைப்பேசி யாருக்கு - காத்துவாயன் கவிதை
by அ.இராமநாதன் Today at 9:18 am

» இக்கரை அக்கரை - ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Today at 9:09 am

» நியாயமா- ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Yesterday at 3:54 pm

» காலண்டர் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Yesterday at 3:54 pm

» வேதம் நிறைந்த தமிழ்நாடு
by அ.இராமநாதன் Yesterday at 9:50 am

» 4 கூடுதல் குடும்ப நல நீதிமன்றங்கள் இன்று திறப்பு
by அ.இராமநாதன் Yesterday at 9:34 am

» ஜெமினிகணேசனும் சுருளிராஜனும்
by அ.இராமநாதன் Yesterday at 9:32 am

» ரூபாய் – திரைப்பட விமரிசனம்
by அ.இராமநாதன் Yesterday at 9:31 am

» வேட்டிக்கு அவமரியாதை!
by அ.இராமநாதன் Yesterday at 9:30 am

» பயண இலக்குகள் – கவிதை
by அ.இராமநாதன் Yesterday at 9:29 am

» கவித்துளிகள்
by அ.இராமநாதன் Yesterday at 9:27 am

» யானை பூஜித்த இறைவன்!
by அ.இராமநாதன் Yesterday at 9:26 am

» ‘பண்டிகை’- விமரிசனம்
by அ.இராமநாதன் Yesterday at 9:16 am

» இனிய காலை வணக்கம்...
by அ.இராமநாதன் Yesterday at 9:14 am

» பளீர் சிரிப்பு
by அ.இராமநாதன் Fri Jul 21, 2017 2:22 pm

» துளிப்பாக்கள்
by அ.இராமநாதன் Fri Jul 21, 2017 2:20 pm

» பத்தே விநாடியில் பளிச் முகம்…!
by அ.இராமநாதன் Fri Jul 21, 2017 2:18 pm

» மிஸ்…மிஸ் இண்டியா…!
by அ.இராமநாதன் Fri Jul 21, 2017 2:17 pm

» லிஸ்பனில் காந்திஜி சிலை...
by அ.இராமநாதன் Thu Jul 20, 2017 6:07 pm

» கேட்கக் கூடாத கேள்விகள்
by அ.இராமநாதன் Thu Jul 20, 2017 6:00 pm

» கருணை புரிவாய் கார்த்திகேயா…!
by அ.இராமநாதன் Wed Jul 19, 2017 8:55 am

» இறந்தும் துடிக்கும் இதயம்
by கவிப்புயல் இனியவன் Tue Jul 18, 2017 10:10 pm

» காதலுக்கும் திருமணத்திற்கும் உள்ள வித்தியாசம்
by அ.இராமநாதன் Sun Jul 16, 2017 8:58 pm

» நீயெல்லாம் அம்மாவா? – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Sun Jul 16, 2017 2:49 pm

» மாப்பிள்ளை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Sun Jul 16, 2017 2:47 pm

» தனி பெட்ரூம் - ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Sun Jul 16, 2017 1:53 pm

» என்ன சாப்பிடறீங்க - ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Sun Jul 16, 2017 1:52 pm

» தட்சிணை வை - ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Sun Jul 16, 2017 1:51 pm

» நூலைப் போல - ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Sun Jul 16, 2017 1:50 pm

» உடலில் வளமை உடையில் வறுமை
by அ.இராமநாதன் Sat Jul 15, 2017 11:08 am

» திருப்தி – கவிதை
by அ.இராமநாதன் Sat Jul 15, 2017 10:29 am

» காலத்தை வளைத்தல் – கவிதை
by அ.இராமநாதன் Sat Jul 15, 2017 10:28 am

» பொண்ணு கிளி மாதிரி இருப்பா…!
by அ.இராமநாதன் Sat Jul 15, 2017 10:26 am

» பாவம் போக்க ராமர் எடுத்த தவகோலம்! –
by அ.இராமநாதன் Sat Jul 15, 2017 10:25 am

» எதை உண்மையான பாவம் என்று கருதுவீர்கள்?
by அ.இராமநாதன் Sat Jul 15, 2017 10:22 am

» மகளே..!மகளே..!!
by அ.இராமநாதன் Sat Jul 15, 2017 10:18 am

» கிசு கிசு பாணியல் ஓலை வந்ததுள்ளது, மன்னா..!
by அ.இராமநாதன் Fri Jul 14, 2017 6:56 pm

» எங்கே எனது கவிதை கனவிலே எழுதி மடித்த கவிதை
by அ.இராமநாதன் Fri Jul 14, 2017 6:53 pm

» வண்டுகளின் அரட்டை
by அ.இராமநாதன் Fri Jul 14, 2017 6:51 pm

» கல்யாணம் வேண்டாம்…
by அ.இராமநாதன் Fri Jul 14, 2017 6:51 pm

» மனிதனின் சிறந்த செல்வம் –
by அ.இராமநாதன் Fri Jul 14, 2017 6:48 pm

» பேசா மடந்தையே விழி பேசும் சித்திரமே…
by அ.இராமநாதன் Fri Jul 14, 2017 6:46 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines புகழ்பெற்ற ஹைக்கூ கவிஞர் மு.முருகேஷ்.

View previous topic View next topic Go down

புகழ்பெற்ற ஹைக்கூ கவிஞர் மு.முருகேஷ்.

Post by அ.இராமநாதன் on Sun Dec 23, 2012 5:03 pm

மாலை முழுதும்....! -
By
- பா. சரவணகுமரன்

-------------------------------------------

---

30 மணி நேரம் தனிக் கவனம் செலுத்தினால் போதும். ஓர்
ஆரம்பப் பள்ளிக் குழந்தை தாய்மொழியில் சிறந்து விளங்க முடியும்' என்பது
புகழ் பெற்ற கல்வியாளர் ஜான் ஹோல்ட்டின் வரிகள். ஆனால் வருடத்திற்கு 200
நாட்களுக்கு மேல் வேலை நாட்கள் கொண்ட பள்ளியில் பயிலும் நமது மாணவர்கள்
பலர் தாய்மொழியான தமிழையே சரியாக வாசிக்க, எழுதத் தெரியாத நிலையை
என்னவென்று சொல்வது?'' என்று வருத்தப்படுகிறார் மு. முருகேஷ். புகழ்பெற்ற
ஹைக்கூ கவிஞரான இவர் "யுரேகா சூப்பர் கிட்ஸ்' என்கிற அமைப்பின்
ஒருங்கிணைப்பாளர். திருவண்ணாமலை மாவட்டத்தில் இயங்கும் இந்த அமைப்பு
அங்குள்ள மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு பெரும் உறுதுணையாக விளங்குகிறது.
இதுபற்றி முருகேஷே நம்மிடம்

பேசுகிறார்:

""புது டில்லியில் இயங்கும் "பிரதம்' என்கிற கல்வி அமைப்பு, இந்திய
மாநிலங்களில் ஓர் ஆய்வு நடத்தியது. அந்தந்த மாநிலங்களில் தாய்மொழிக் கல்வி,
அறிவியல் கல்வியில் மாணவர்கள் தரம் பற்றியது அந்த ஆய்வு. அதன்படி
தமிழத்திலும் ஆய்வு நடத்தினார்கள். அப்போது 5ஆம் வகுப்பு படிக்கும் மாணவ,
மாணவியர்களுக்குக்கூட தமிழே வாசிக்கத் தெரியாத நிலையை அறிந்து
அதிர்ந்தார்கள். இந்த நிலையில்தான் திருவண்ணாமலை மாவட்டத்தில் "எய்ட்
இந்தியா' என்ற அமைப்பின் உதவியுடன் "யுரேகா சூப்பர் கிட்ஸ்' என்ற அமைப்பு
தொடங்கப்பட்டது.

கல்வியில் பின் தங்கிய கிராமப் புற மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு
உதவுவது இந்த அமைப்பின் நோக்கம். அதன்படி திருவண்ணாமலைமாவட்டத்தில்
100க்கும் மேற்பட்ட கிராமங்களில் கற்றலில் பின் தங்கிய மாணவர்களுக்கு மாலை
நேரப் பள்ளி நடத்துகிறோம். கிராமப் புறத்தில் உள்ள அரசுப் பள்ளியில்
பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு மட்டுமல்ல... கான்வென்டில் பயிலும் மாணவ
மாணவியர்களுக்கும் மாலை நேரப் பள்ளி நடத்துகிறோம். கான்வென்டில்
பயில்பவர்கள் தமிழ் மட்டுமல்ல... ஆங்கிலத்தில்கூட போதிய வாசிப்புத் திறன்
இல்லாமல் இருப்பதுதான் வேதனை.

இப்படி மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்த அந்தந்த கிராமங்களில் ஆசிரியர்
பயிற்சி முடித்துவிட்டு அரசு உத்யோகத்திற்கு செல்லாதவர்களை
நியமித்துள்ளோம். அவர்களுக்கு மாதம் "மதிப்பூதியம்' என்ற அடிப்படையில் 400
ரூபாய்தான் கொடுக்கிறோம் என்றாலும் முழு ஈடுபாட்டோடு செயல்படுகிறார்கள்.
மாணவர்களின் பெற்றோர்கள் மாதம் தோறும் தங்களால் இயன்றதை கட்டணமாகக்
கொடுக்கிறார்கள். அப்போதுதான் மாணவர்கள் தவறாமல் வருவார்கள் என்பதாலேயே
அந்தக் கட்டணத்தைப் பெற்றுக் கொள்கிறோம்.

முதலில் தமிழ் வாசிப்பு மட்டுமே சொல்லிக் கொடுக்கப்பட்டது. இப்போது ஒரு
மையத்திற்கு மூன்று ஆசிரியர்களை நியமித்து, ஆங்கிலம், கணிதம், அறிவியல்
போன்றவற்றையும் சொல்லிக் கொடுக்கிறோம். பெரும்பாலும் ஆசிரியர்களின்
வீட்டிலேயே இந்த வகுப்பு நடைபெறுகிறது. அல்லது சில கிராமங்களில் பஞ்சாயத்து
மூலமாகவே இடம் ஒதுக்கித் தருகின்றனர். அப்படியும் இல்லையென்றால் பள்ளி
முடிந்த பிறகு அங்கேயே இந்த மாலை நேர வகுப்புகளை நடத்துகிறோம்.

இதன் சிறப்பு அம்சம் வெறும் பாடப்புத்தகத்தை மட்டுமே வைத்து சொல்லிக்
கொடுப்பதில்லை. கல்வி சம்பந்தப்பட்ட உபகரணங்கள் மூலம் மாணவர்கள் எளிதாகத்
தெளிவாகப் புரிந்துகொள்ளும் வகையில் பாடம் நடத்தப்படுகிறது. அவர்கள்
விளங்கிக்கொள்ளும் வகையில் பிரத்யேகமான சில புத்தகங்களும் எழுதப்பட்டுள்ளன.
குறிப்பாக பெரிய எழுத்தில் சிறிய கதைகள் அடங்கிய புத்தகத்தை
மாணவர்களுக்குக் கொடுத்து வாசிப்புத் திறனை மேம்படுத்துகிறோம். நான் எழுதிய
"டவுனுக்குப் போன சிட்டுக்குருவி', "மண் மணம் வீசும் மக்களின் விடுகதை'
போன்ற புத்தகங்களின் மூலமும் மாணவர்களின் திறனை மேம்படுத்துகிறோம்.

ஒரு மாணவனோ அல்லது மாணவியோ அவர்கள் கற்க வரும்போதே அவர்கள் இதுவரை
கற்றவற்றையும், திறனையும் அறிந்துகொள்கிறோம். அதன்படி அவர்களின் கல்வித்
தரத்தை மேம்படுத்தும் வகையில், இந்த நாட்களுக்குள் இவ்வளவு கற்றிருக்க
வேண்டும் என்ற குறிக்கோளை வகுத்துக் கொண்டு அவர்களை உருவாக்குகிறோம்.
பெரும்பாலும் அவர்களின் பள்ளிப் பாடப் புத்தகங்களை வைத்துப் பாடம்
நடத்துவதில்லை. ஆனால் உபகரணங்கள் மூலம் சொல்லிக்கொடுக்கும்போது பள்ளிப்
பாடங்கள் சம்பந்தப்பட்ட விஷயங்களையும் இயல்பாகத் தெரிந்துகொள்ளும்
மாணவர்கள் மதிப்பெண்கள் அதிகம் எடுக்கின்றனர். இதற்கு பெற்றோரிடமும் நல்ல
வரவேற்பு இருக்கிறது.

இதுதவிர 6 மாதங்களுக்கு ஒரு முறை பெற்றோர்களை அழைத்துக் கூட்டம்
நடத்துகிறோம். அப்போது வீட்டில் பள்ளிக் குழந்தைகளுக்கான சூழல் எப்படி
இருக்க வேண்டும், அவர்களை எவ்வாறு வழிநடத்த வேண்டும் போன்றவை பற்றியெல்லாம்
கவுன்சிலிங் கொடுக்கிறோம்.

இது ஒருபுறமிருக்க 5 கிராமங்களுக்கு ஒரு கருத்தாளரை நியமித்துள்ளோம்.
அவர்கள் அவ்வப்போது அந்த மாலை நேரப் பள்ளிகளுக்கு சென்று
பார்வையிடுவார்கள். மாணவர்களையும் ஆசிரியர்களையும் உற்சாகப்படுத்துவார்கள்.
அவர்களின் வளர்ச்சி குறித்து மேலும் சில ஆலோசனைகளை வழங்குவார்கள்.

தற்போது ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவ,
மாணவியர் இந்த மாலை நேரப் பள்ளிகளில் பயில்கிறார்கள். மேலும் ஏழை
மாணவர்களுக்கு வருடந்தோறும் ஸ்காலர்ஷிப் கொடுக்கிறோம்.

இதன்மூலம் நகர்ப்புற மாணவர்களுக்கு இணையாக கிராமப்புற மாணவர்களும்
சிறந்து விளங்குவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. அதைக் கண்கூடாகவே
நாங்கள் பார்த்துக்கொண்டிருக்கிறோம்'' என்கிறார் மு. முருகேஷ்.
------------------
நன்றி:

http://dinamani.com/weekly_supplements/sunday_kondattam/article1388924.ece

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
http://rammalar.wordpress.com
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 22960
Points : 49376
Join date : 26/01/2011
Age : 72

Back to top Go down

Re: புகழ்பெற்ற ஹைக்கூ கவிஞர் மு.முருகேஷ்.

Post by கவியருவி ம. ரமேஷ் on Sun Dec 23, 2012 5:34 pm

வாழ்த்துகளும் பாராட்டுகளும்... வளரட்டும் சேவை மிக்க மகிழ்ச்சி

_________________
http://www.kaviaruviramesh.com
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
http://www.kaviaruviramesh.com/p/blog-page.html
http://www.ebay.in/sch/rameshmkm/m.html?_nkw=&_armrs=1&_ipg=&_from=
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: புகழ்பெற்ற ஹைக்கூ கவிஞர் மு.முருகேஷ்.

Post by பார்த்திபன் on Wed Dec 26, 2012 1:10 pm

சேவைகள் செழித்தோங்கட்டும்! வாழ்த்துகள்! சியர்ஸ் அன்பு மலர்
avatar
பார்த்திபன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 572
Points : 614
Join date : 21/12/2011
Age : 40
Location : பெங்களூரு

Back to top Go down

Re: புகழ்பெற்ற ஹைக்கூ கவிஞர் மு.முருகேஷ்.

Post by ஹிஷாலீ on Thu Dec 27, 2012 2:16 pm

அண்ணா வாழ்த்துகளும் பாராட்டுகளும்
avatar
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4935
Points : 6106
Join date : 21/12/2011
Age : 22
Location : chennai

Back to top Go down

Re: புகழ்பெற்ற ஹைக்கூ கவிஞர் மு.முருகேஷ்.

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Wed Jan 02, 2013 12:17 pm


_________________

தமிழ்த்தோட்டம்

முகநூல் - தமிழ்த்தோட்டம்

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...

நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56783
Points : 69523
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum