"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» நம்பிக்கை கொடு! நம்பி கை கொடு நூல் ஆசிரியர் : கவிஞர் ஸ்ரீ பாரதி கிருஷ்ணன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Today at 12:19 am

» 300 மொழிகளில் வெளியான முதல் புத்தகம் எது?
by அ.இராமநாதன் Yesterday at 10:28 pm

» இந்த வார பல்சுவை- தொடர் பதிவு
by அ.இராமநாதன் Yesterday at 10:24 pm

» சாலையில் சென்றவர்களை ஆச்சர்யப்பட வைத்த மணமக்கள்!
by அ.இராமநாதன் Yesterday at 5:51 pm

» மருத்துவ தகவல்கள் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Yesterday at 3:00 pm

» ஆப்பிள் போன ஏண்டா இரண்டா பிளந்தே...?!
by அ.இராமநாதன் Yesterday at 2:35 pm

» 2018 - அமாவாசை, பௌர்ணமி, கிருத்திகை....
by அ.இராமநாதன் Yesterday at 11:29 am

» போலியோ சொட்டு மருந்து 28-1-18 & 11-3-18
by அ.இராமநாதன் Yesterday at 10:55 am

» இனிய காலை வணக்கம்...
by அ.இராமநாதன் Yesterday at 10:51 am

» டாக்டர் ஏன் ரொம்ப படப்பாக இருக்குறாரு...?
by அ.இராமநாதன் Yesterday at 10:42 am

» அறிவை வளர்க்கும் விநாடி வினாக்கள் -
by அ.இராமநாதன் Yesterday at 10:32 am

» ஆமா...யாரு அந்த சக்களத்தி...!!
by அ.இராமநாதன் Fri Jan 19, 2018 8:46 pm

» 2018 - தைப்பொங்கல் வாழ்த்துகள்
by ராஜேந்திரன் Thu Jan 18, 2018 7:49 pm

» பல்சுவை - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Thu Jan 18, 2018 7:31 pm

» இது வாட்ஸ் அப் கலக்கல் -தொடர்பதிவு
by அ.இராமநாதன் Thu Jan 18, 2018 9:13 am

» யுத்தம் செய்யும் கண்கள் ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Wed Jan 17, 2018 8:56 pm

» வீணையின் நாதம்! கவிஞர் இரா. இரவி
by eraeravi Wed Jan 17, 2018 8:55 pm

» நினைவுப் பெட்டகம்! கவிஞர் இரா. இரவி !
by eraeravi Wed Jan 17, 2018 8:54 pm

» பண்டிகை காலங்களில் ரயில் கட்டணம் உயர்வு?
by அ.இராமநாதன் Wed Jan 17, 2018 5:31 pm

» கின்னஸ் சாதனை படைத்த வீடியோ கேம் (வீடியோ இணைப்பு)
by ராஜேந்திரன் Tue Jan 16, 2018 9:00 pm

» 40 மில்லிபவுன் எடையில் சிவலிங்கம்
by அ.இராமநாதன் Tue Jan 16, 2018 3:45 pm

» விஜய் சேதுபதியின் பிறந்தநாளை முன்னிட்டு 'சீதக்காதி' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
by அ.இராமநாதன் Tue Jan 16, 2018 2:46 pm

» அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் சிறந்த காளை, வீரருக்கு கார் பரிசு
by அ.இராமநாதன் Tue Jan 16, 2018 2:40 pm

» ஜிமிக்கி கம்மல் ஷெரிலின் அடுத்த வீடியோ
by அ.இராமநாதன் Tue Jan 16, 2018 2:34 pm

» இளவட்டக்கல் போட்டி: ஆண்களுக்கு இணையாக களமிறங்கிய பெண்கள்!
by அ.இராமநாதன் Tue Jan 16, 2018 2:21 pm

» ஒரு வரி தகவல்கள்
by அ.இராமநாதன் Tue Jan 16, 2018 12:47 pm

» அறிவை வளர்க்கும் விநாடி வினாக்கள் -
by அ.இராமநாதன் Tue Jan 16, 2018 12:34 pm

» ஏர் இந்தியாவை நான்காக பிரித்து விற்பனை செய்ய முடிவு
by அ.இராமநாதன் Tue Jan 16, 2018 10:17 am

» டோர் டெலிவரி திட்டத்திற்கு ‛ஒகே' : மனம் மாறிய டில்லி துணை நிலை கவர்னர்
by அ.இராமநாதன் Tue Jan 16, 2018 10:15 am

» இந்து ஆன்மிக கண்காட்சியையொட்டி விவேகானந்தர் ரத யாத்திரை தொடக்கம்
by அ.இராமநாதன் Tue Jan 16, 2018 10:15 am

» சட்டமன்றத்தை 90 நாட்கள் நடத்த வேண்டும்..! ஜி.கே.வாசன் சொல்கிறார்
by அ.இராமநாதன் Tue Jan 16, 2018 10:13 am

» பிரவீன் தொகாடியா மயக்க நிலையில் மீட்பு..!'' விஸ்வ இந்து பரிஷத் தொண்டர்கள் அதிர்ச்சி
by அ.இராமநாதன் Tue Jan 16, 2018 9:53 am

» ஊர் சுற்றும் மனசு! - ஹைகூ
by அ.இராமநாதன் Mon Jan 15, 2018 11:40 pm

» அழகிய புருவங்கள்! - ஹைகூ
by அ.இராமநாதன் Mon Jan 15, 2018 11:38 pm

» விலைவாசி உயர்வு - ஹைகூ
by அ.இராமநாதன் Mon Jan 15, 2018 11:36 pm

» சபலம் தந்த சங்கடம்...!
by அ.இராமநாதன் Mon Jan 15, 2018 10:08 am

» மனதோடு மழைச்சாரல் ! நூல் ஆசிரியர் : கவிஞர் இந்துமதி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Sun Jan 14, 2018 2:37 pm

» ஜன.26 முதல் தமிழகம் முழுவதும் சுற்று பயணம் : கமல்
by அ.இராமநாதன் Sun Jan 14, 2018 10:15 am

» இராயேந்திரனின் எண்ணங்கள்
by yarlpavanan Sun Jan 14, 2018 10:03 am

» கூடங்குளத்தில் விரைவில் மின்உற்பத்தி நீராவி சோதனை நடப்பதால் பீதிவேண்டாம்
by அ.இராமநாதன் Sun Jan 14, 2018 10:03 am

» பிரதமர் மோடி தமிழில் பொங்கல் நல்வாழ்த்து
by அ.இராமநாதன் Sun Jan 14, 2018 10:00 am

» இலங்கை துறைமுகத்தை மேம்படுத்த ரூ.294 கோடி இந்தியா நிதி உதவி
by அ.இராமநாதன் Sun Jan 14, 2018 9:56 am

» தை பிறந்தால் வழி பிறக்க வருக
by கவிப்புயல் இனியவன் Sun Jan 14, 2018 6:48 am

» *உலகின் முக்கிய தினங்கள்
by அ.இராமநாதன் Sat Jan 13, 2018 11:36 pm

» மனைவி கத்த ஆரம்பிச்சதும்....
by அ.இராமநாதன் Sat Jan 13, 2018 11:32 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



ஏன்? இந்தக் கொலை வெறி ! கவிஞர் இரா .இரவி

View previous topic View next topic Go down

ஏன்? இந்தக் கொலை வெறி ! கவிஞர் இரா .இரவி

Post by eraeravi on Sat Feb 25, 2012 10:46 pm

ஏன்? இந்தக் கொலை வெறி ! கவிஞர் இரா .இரவி


பள்ளி மாணவன் ஆசிரியரைக் கொலைப் புரிந்த செய்திப் படித்து ,அதிர்ந்துப்
போனேன் .மாதா ,பிதா குரு,தெய்வம் என்றார்கள். தெய்வத்திற்கும் முன்பாக
குருவை வைத்தார்கள் .குருவை வணங்கிய காலம் மாறி ,கொலை செய்யும் வெறித்தனம் ஏன்?வந்தது. எப்படி? வந்தது , எதனால் ? வந்தது
இப்படி பல கேள்விகள் என்
மனதில் எழுந்தது .குடியிருப்பில் இருப்பதுக்
கூடத் தெரியாமல் அமைதியாக வாழ்ந்த மாணவன் ,கொலை செய்துள்ளான் .இன்று ஆசிரியர் மாணவர் உறவில் ஏன் ? இந்த விரிசல் வந்தது. இருவருக்கும் இடையே அன்பு நிலவ வேண்டும் .ஆசிரியர்கள் மாணவர்களிடம் மிகக் கடுமையாக நடந்துக் கொள்வதும் தவறு. மாணவர்கள் ஆசிரியர்களை மதிக்காமல் இருப்பதும் தவறு .



ஆசிரியை உமா மகேஸ்வரியின் கொலைக்கு காரணங்களை ஆராய்ந்தால் ,கொலை செய்த
மாணவன் வன்முறை திரைப்படம் பார்த்து இருக்கிறான் .கொலைவெறிக்கு அதுவும் ஒரு
காரணமாகிறது .திரைப்பட வன்முறையால் சமுதாயம் சீரழிகிறது என்பதற்கு இந்த
நிகழ்வு ஒரு உதாரணம் .
கொலைவெறிப் பாடலின் பொருள் தெரியாமல் சிறு குழந்தைகளும் இன்றுப் பாடுகின்றனர் .நல்ல திரைப்படங்கள் அத்திப் பூத்த மாதிரி எப்போதாவதுதான் வருகின்றன
.ஆனால் ஆபாச ,வன்முறை திரைப்படங்கள்தான் வரிசை வரிசையாக வருகின்றது
.திரைத்துறையினர் சமுதாய அக்கரையுடன் படம் எடுக்க முன் வர வேண்டும் .
பெரிய திரை இப்படி என்றால் சின்னத்திரைப் பற்றி சொல்லவே மனம் கூசுகின்றது .குடும்பத்தை எப்படி? கெடுப்பது ,யாரை எப்படி? பழி வாங்குவது ,எப்படி? குழிப் பறிப்பது ,வக்கிரம் குணம் எப்படி? வளர்ப்பது ,எப்படி ?துரோகம் செய்வது ,எப்படி ?மோசடி செய்வது என்று வகுப்பு எடுக்கும் விதமாக தொலைக்காட்சித் தொடர்கள் .உடனடியாக தொலைக்காட்சித் தொடர்களுக்கு தணிக்கை கொண்டு வர வேண்டியது, மிகவும் அவசர அவசியம் .ஒருவனுக்கு ஒருத்தி என்ற நம் தமிழ்ப் பண்பாட்டைச் சிதைக்கும் விதமாக தொடரில் வரும் கதாநாயன்கள் அனைவருக்கும் இரண்டு மனைவி . சில தொடர்களில் மாணவன் ஆசிரியரை எப்படி? கேலி செய்ய வேண்டும் என்று கற்பிக்கும் விதமாகவே வருகின்றன .இந்தக் கொலைக்கு மற்றொரு காரணம் பள்ளியின் நிர்வாகம் .மாநிலத்தில் முதல்
மூன்று இடத்தில தம் பள்ளி வந்து விட்டால், அந்த விளம்பரத்தின் மூலம்
பள்ளியின் கட்டணத்தை ,நன்கொடையை உயர்த்தி பணம்
கொள்ளை அடிக்க வேண்டும் . என்ற வெறியோடு பல தனியார் பள்ளிகள் செயல்படுகின்றனர் . பள்ளி நிர்வாகம் ஆசிரியர்களுக்கு நெருக்கடிக் கொடுக்கின்றனர் .அதன் காரணமாக ஆசிரியர்கள் மாணவர்களுக்கு நெருக்கடிக் கொடுக்கின்றனர் ..தமிழ் நாட்டில் தமிழ் சொல்லித் தராமல் ,இந்தி, சமஸ்கிருதம் ,பிரன்ச் படிக்கச் சொல்லி துன்புறுத்துகின்றனர் .பிஞ்சு நெஞ்சங்களில் கட்டாயப்படுத்தி நஞ்சு கலக்கின்றனர் .தாய் மொழி
தமிழ் நன்கு புரியும். அதை விடுத்து அந்நிய மொழிகளை படிக்கச் சொல்லி
துன்புறுத்துகின்றனர் .உலக
மொழிஆங்கிலம் தாய் மொழி தமிழ் .இந்த இரண்டு மொழி பள்ளிப் படிப்பிற்குப்
போதும் .வேறு மொழிகள் கற்பிப்பதை முதலில் ஒழிக்க வேண்டும் .

நீதி போதனை வகுப்பு முன்பு இருந்தது .ஆனால் இன்று பெரும்பாலான பள்ளிகளில் நீதி போதனை வகுப்பை எடுத்து விட்டனர் .உடனடியாக எல்லாப் பள்ளிகளிலும் நீதி போதனை வகுப்பு கட்டாயம் ஆக்க வேண்டும் .



இந்தி சரியாகப் படிக்கவில்லை ,படிப்பு வரவில்லை என்று ஆசிரியர்
குறிப்பு எழுதி உள்ளார் .இதனைப் படித்த பெற்றோர் மிகக் கடுமையாக திட்டி
உள்ளனர் .பெற்றோர்களும் படிப்பு சரியாக வராத குழந்தைகளைக் கண்டப்படி
திட்டுவதை நிறுத்த வேண்டும். அன்பு செலுத்த வேண்டும் .பக்குவமாக எடுத்துச்
சொல்ல வேண்டும் .கல்வியின் பயனை பொறுமையாக எடுத்துச் சொல்லி புரிய வைக்க
வேண்டும் .
தனியார் பள்ளி நிர்வாகங்கள் உடனடியாகத் திருந்த வேண்டும் .திருந்த
மறுத்தால் கல்வி அதிகாரிகள் திருத்த வேண்டும் .பத்தாம் வகுப்பு பனிரெண்டாம்
வகுப்பில் முடிவு சதவிகிதத்தில் தங்கள் பள்ளி முழுமையாக வெற்றிப் பெற
வேண்டும் என்ற வெறியில், ஒன்பதாம் வகுப்பில் ,பதினொன்றாம் வகுப்பில்
சுமாராகப் படிக்கும் மாணவர்களை பள்ளியில் இருந்து விரட்டு விடும் போக்கு
உள்ளது .மாற வேண்டும் .இப்படி விரட்டப் படும் மாணவர்களின் மனசு பற்றி
,அவர்களது பெற்றோர்கள் மனசுப் பற்றி ஒரு நிமிடம் யோசித்துப் பாருங்கள்
.படிக்காத
மாணவனைப் படிக்க வைப்பதுதான் பள்ளிக்குப் பெருமை .அன்று கல்விக்கு சேவை செய்ய தனியார் முன் வந்தனர் .ஆனால் இன்று பணம் கொள்ளை அடிப்பதற்காகவே தனியார் வருகின்றனர்..இந்த நிலை மாற வேண்டும். மாறினால் கொலை வெறி ஒழியும்.மனித நேயம் மலரும் .ஆசிரியர் மாணவர் நட்பாக இருக்கும் காலம் வரும் .



--
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com

www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://en.netlog.com/rraviravi/blog

இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க

கண் தானம் செய்வோம் !!!!!

eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2161
Points : 4919
Join date : 18/06/2010

Back to top Go down

Re: ஏன்? இந்தக் கொலை வெறி ! கவிஞர் இரா .இரவி

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Mon Feb 27, 2012 11:17 am


_________________

தமிழ்த்தோட்டம்

முகநூல் - தமிழ்த்தோட்டம்

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...

நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56810
Points : 69552
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum