"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» இதப்படிங்க முதல்ல...சினிமா செய்திகள்
by அ.இராமநாதன் Today at 4:05 am

» நோய்கள் உருவாகும் இடம் சாக்கடையோ, கொசுவோ கிடையாது
by அ.இராமநாதன் Yesterday at 10:18 pm

» நல்ல மனைவி....
by அ.இராமநாதன் Yesterday at 10:09 pm

» கட்டைப்பையும் காணாமல் போன கூச்சமும்.... - ஒரு குடும்ப தலைவரின் தீபாவளி பர்ச்சேஸ்
by அ.இராமநாதன் Yesterday at 9:44 pm

» நீரிழிவு நோய்க்கு ஒரு நல்ல செய்தி
by அ.இராமநாதன் Yesterday at 9:34 pm

» சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்
by கவிப்புயல் இனியவன் Yesterday at 8:54 pm

» நிலவில் 50 கி.மீ நீள குகை: ஜப்பான் விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு
by அ.இராமநாதன் Yesterday at 2:48 pm

» ரயில்களின் பயணநேரம் குறைகிறது
by அ.இராமநாதன் Yesterday at 2:45 pm

» ஜெயலலிதா மரணம்: அக்.,25 முதல் விசாரணை
by அ.இராமநாதன் Yesterday at 2:44 pm

» ரூ.1,500 கோடி வங்கி கடன்; 'ஏர் - இந்தியா' கோருகிறது
by அ.இராமநாதன் Yesterday at 2:37 pm

» 4 நாட்களில் துவங்குது வடகிழக்கு பருவ மழை
by அ.இராமநாதன் Yesterday at 2:36 pm

» கொசு உற்பத்தி: திருவாரூர் ரயில் நிலையத்திற்கு ரூ.10,000 அபராதம்
by அ.இராமநாதன் Yesterday at 2:35 pm

» 'எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களை எழுந்து நின்று வரவேற்கணும்'
by அ.இராமநாதன் Yesterday at 2:34 pm

» 'வங்கி கணக்கு எண்ணுடன் ஆதார் இணைப்பு கட்டாயமில்லை'
by அ.இராமநாதன் Yesterday at 2:33 pm

» வேறு எந்த நாட்டுக்காகவும் ஸ்ரீசாந்தால் விளையாட முடியாது: பிசிசிஐ
by அ.இராமநாதன் Yesterday at 2:33 pm

» 7000 ஊழியர்களின் மனைவிகளுக்கு ஹெல்மெட் வழங்கிய வைர வியாபாரி!
by அ.இராமநாதன் Yesterday at 2:32 pm

» ஸ்பானிஷ் திரைப்பட விழா சென்னையில் நடைபெறவுள்ளது.
by அ.இராமநாதன் Yesterday at 2:31 pm

» ஹைக்கூ பாவை! நூல் ஆசிரியர் : கவிஞர் ந.க. துறைவன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Fri Oct 20, 2017 10:27 pm

» சிந்தனை சிகிச்சை - 4
by ராஜேந்திரன் Fri Oct 20, 2017 9:17 pm

» வெற்றிப் பூக்கள்! நூல் ஆசிரியர் : சிந்தனைக் கவிஞர் கவிதாசன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி!
by eraeravi Fri Oct 20, 2017 8:14 pm

» அம்மாவின் முத்தம்! நூல் ஆசிரியர் : முனைவர் மருதம் கோமகன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Fri Oct 20, 2017 8:12 pm

» தமிழ்நாட்டில் 12,254 கிராமங்களில் பாரத் நெட் : தமிழக அரசு தகவல்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2017 4:50 pm

» விலையேறியது ஜியோ பிளான்கள்: அக்டோபர் 19 முதல் அமல்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2017 4:49 pm

» 2000 ரூபாய் நோட்டில் காந்திக்குப் பதில் மோடியின் படம்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2017 4:48 pm

» நியூஸிலாந்து நாட்டின் பிரதமராகிறார் 37 வயதான ஜெசிந்தா ஆர்டர்ன்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2017 4:35 pm

» போக்குவரத்துக்கழகப் பணிமனை ஓய்வறை மேற்கூரை இடிந்து விழுந்ததில் 8 ஊழியர்கள் உயிரிழந்தனர்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2017 4:33 pm

» பொது இடங்களில் ‛வைபை' பயன்பாடு: மத்திய அரசு எச்சரிக்கை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2017 4:31 pm

» காதலுக்கு ஜாதி, மதம் தடையில்லை: கேரள ஐகோர்ட்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2017 4:30 pm

» சிறை மருத்துவமனைக்கு ஆருஷி பெயர்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2017 4:30 pm

» முதலிடத்தை இழந்தது இந்தியா
by அ.இராமநாதன் Fri Oct 20, 2017 4:29 pm

» இந்து மன்னர்களிடம் இருந்து திருடிய நிலத்தில்தான் தாஜ்மகால் அமைந்துள்ளது: சுப்பிரமணியன் சுவாமி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2017 4:28 pm

» மகாபாரதம் உணர்த்தும் உண்மைகள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2017 1:02 pm

» என் மாமியார் கிட்ட சமையல் கத்துக்க போறேன் .
by அ.இராமநாதன் Fri Oct 20, 2017 11:13 am

» ‘டிராபிக்’ ராமசாமியாக எஸ்.ஏ.சந்திரசேகரன்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2017 12:40 am

» கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் நடிக்கும் அரவிந்த் சாமி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2017 12:40 am

» நடிகர் சிபிராஜூக்கு கிடைத்த இரண்டாவது புரமோஷன்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2017 12:38 am

» கிரிக்கெட் வீரர் கபில்தேவ் வாழ்க்கை படமாகிறது...!!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2017 12:37 am

» தனுஷின் வில்லனாகும் மலையாள நாயகன்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2017 12:37 am

» தமிழ் தெலுங்கில் நயன்தாரா படம்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2017 12:36 am

» ‘தொட்ரா’​.​ -திரைப்படம்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2017 12:35 am

» அடடே - ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Thu Oct 19, 2017 11:06 pm

» ஆத்தாடி - ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Thu Oct 19, 2017 11:05 pm

» எப்போதும் காதல் - ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Thu Oct 19, 2017 11:04 pm

» எப்போதும் கொஞ்சிக் குலாவி - ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Thu Oct 19, 2017 11:02 pm

» ஜூனியர் உலக கோப்பை கால்பந்து: பிரதமர் மோடியின் கையில் இருந்து பந்தை பெற்ற தமிழ் மாணவி -
by அ.இராமநாதன் Thu Oct 19, 2017 10:56 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



என்னையே நானறியேன்

View previous topic View next topic Go down

என்னையே நானறியேன்

Post by kowsy2010 on Mon Jun 27, 2011 1:23 am


எதிர்கொள்காதை

வரம் பெற்ற வாழ்வு
திறம் கெட்டுப் போனாலும்
உரம் கொண்ட வரமது
உருக்குலைக்கும் உருக்கினார் வாழ்வை

வாழ்நாட்களில் வந்து போகும் சோகநினைவுகள் வரதேவி மூளைப் புதையலில் அழியாத அறிவுப்பலகையாய் அச்சடிக்கப்பட்டிருந்தன. அவ்வப்போது தலைகாட்டும் நினைவுகளை விரட்டியடிக்க வரதேவி விரும்பிய பணி மீண்டும் வீடு தேடி வந்தது. திறமையும் அறிவும் மறைக்கப்பட்டாலும் மறுக்கப்பட்டாலும் மடைதிறந்த வெள்ளம் போல் ஓர்நாள் பெருக்கெடுத்தே தீரும். இதனாலேயே அறிவுச்செல்வம் அழிக்கமுடியாத செல்வமாய்க் கருதப்படுகிறது. அறியாதமொழி, புரியாத மனிதர்கள், தெரிந்திராத வாழ்வு எதுவாய் இருந்தாலும் அறிவுச் செல்வம் கிடைக்கப்பெற்றார் அந்தஸ்து வாழ்வை அகிலம் எங்கு சென்றாலும் அடையப் பெறுவார். வரதேவி இவ்வாறே எதிர்காலத் தலைமுறைகள் தமிழால் தலைநிமிர்ந்து நிற்கத் தேடித் தன் மனைபுகுந்தார் தம் வேண்டுகோளுக்குத் தலைசாய்த்தாள். மீண்டும் ஒரு நம்பிக்கை நட்சத்திரம் மனதில் பிரகாசித்தது. மீண்டு;ம் ஆர்வ வெள்ளம் மனமெங்கும் பாயத் தொடங்கியது. தொழிலாய்க் கொள்ளாது, பணியாய்க் கொண்டு பயின்ற பல கல்விக்களஞ்சியங்களைப் பாலர் தொட்டுப் பருவ வயதினர்வரைத் தாரைவார்க்கத் தீர்மானித்தாள். தமிழ்ப்பாடசாலை சென்றாள். பயின்றாள், பயிற்றுவித்தாள், மனநிறைவு பெற்றாள். ஆசிரியத்தொழில் நாளுங்கற்று நாளுங்கற்பிக்கும் தொழிலல்லவா! மாணவர்கள் கற்க ஆசிரியர்கள் கற்க வேண்டியதும் கற்பிக்க வேண்டியதும் கடமை அல்லவா. இனியொரு தடவை இவ்வரதேவி கற்பித்தலில் தடை காணமாட்டாள். தடைசெய்வார் துணிவுதளர்ந்த நிற்கும் நேரமிதுவென முற்றாக நம்பியதனால், முடிவாய் இப்பணிக்கு முகங்கொடுக்கத் துணிந்தாள். வாரம் இருதடவைகள் காணும் தமிழ்ச்சிறுவர்கள் முகங்கள், அவள் மனதிற்கு மருந்தாகியது. நோயை விரட்டியடிக்கும் பயிற்சியாகியது.

இந்நிலையில் கரண் வாழ்வில் காலம் என்ன மாற்றத்தைக் காட்டியது? காத்திருக்கும் வாழ்வில் காலம் தந்த பரிசை யாராக இருந்தாலும் ஏற்றுக் கொள் வேண்டியது கட்டாயமாகிறது. கரண் கால் விரலில் கறுப்பாய் ஒரு புள்ளி அதிசயமாய்த் தோன்றியது. மெல்ல மெல்லக் கால்விரல் நிறம் மாறத் தொடங்கியது. உருக்குலையும் நிலை கண்ட வைத்தியர்கள், இவ்விரலைப் பாதத்திலிருந்து அகற்றிவிட்டனர். ஓர்விரல், ஈர்விரல் என அவ்விரல்கள் அனைத்தும் பாதத்திலிருந்து விடைபெற, இதன் தாக்கத்தால் முழங்காலில் கீழ்ப்பகுதி பழுதடையும் நிலை கண்ட வைத்தியர்கள் முழங்காலின் கீழுள்ள பகுதியை அகற்றிவிட்டார்கள். ஒற்றைக்காலில் வாழ்வைக் கழிக்க வேண்டிய தண்டனை கிடைக்கப் பெற்றுத் தடுமாறிவிட்டான் கரண். இதை விதி என்பதா? இல்லை வினை விதைத்தான் வினை அறுப்பான் என்பதா? ஒரு மனிதன் செய்யும் தவறுகள் தண்டிக்கப்படும் வேளையில் அவன் அகற்றிய புண்ணியங்கள் புதுப்பொலிவு பெற்றுத் துணை தரத் துடித்துக் கொண்டு ஓடிவரும் இந்த வகையில் ஒற்றைக் கால் இழந்த கரணுக்கு ஒரு தடியாய் யார் இருப்பார்? தாலியின் மகத்துவம் இங்கு தலைநிமிர்ந்து நிற்கின்றது. தமிழர் கலாசாரம் என்றும் அழிந்துவிட மாட்டாது என வரதேவியின் பணிவிடை ஆணித்தரமாகக் காட்டியது. நடந்தது நடந்ததாகவே இருக்கட்டும் நடக்கப் போவது நல்லதாகட்டும் எனத் தன் அணைப்பில் மட்டுமே எதிர்காலத்தைக் கழிக்கவிருக்கும் கணவனைப் பராமரிக்கும் பாரிய பொறுப்பைத் தலைமேல் கொண்டாள். உலகம் உருண்டையானது. எங்கு சுற்றியும் திரும்பவும் அந்த இடத்திற்கே வந்தேயாக வேண்டும். மருத்துவமனை கரணுக்கு நல்ல பல பாடங்களைக் கற்றுத் தந்தது. சிந்தித்துச் சிந்தித்துத் தனக்குத் தானே பட்டை தீட்டித் தன் வாழ்வைப் பொலிவாக்கினான். தன் எதிர்கால வாழ்வைத் தன் மனையாள் கையிலே தங்கியிருக்கும் பேருண்மை புரிந்து கொண்டான். பெட்டிப்பாம்பாய் வீட்டினுள் அடங்கிக் கிடக்கும் கணவனின் தேவைகளைத் தெரிந்து புரிந்து தீர்த்து வைத்த வரதேவி, வாழ்வை மாற்றியமைக்கும் காலத்தை எண்ணிப் பார்த்தாள். தனக்குள்ளே ஒரு சிரிப்பு. இது அலட்சியச் சிரிப்பா! இல்லை வாழ்ந்து பார்த்த வாழ்வுஞானச் சிரிப்பா! குடியிருக்கும் வீடானது அடிக்கடிப் பழைய நினைவுகளை நினைவுபடுத்திக் கொண்டிருந்தது. வேறு மனை புகுந்தால் வேற்று எண்ணங்கள் மனதில் பதியத் தொடங்கும். புதியவீடு, புதிய சூழ்நிலை புதிய வீட்டின் மாற்று அலங்காரம், அனைத்திலும் ஏற்படும் மாற்றமானது மனதில் மாறுதலை ஏற்படுத்தலாம் என்ற தீர்மானம் மனதில் வலுப் பெற்றது. இப்போது ஒரு புதிய முயற்சி முனைப்புப் பெற்றது. பத்திரிகைப் பக்கங்கள் திருப்பப்படுகின்றன. வீடு வாடகைக்கு விடப்படும்...... இது எமது தராதரத்திற்கு ஒத்துவருமா? வீடு இருக்கும் சூழ்நிலை பொருத்தமாக இருக்குமா? தேடத் தொடங்கினாள். அடுத்துவரப் போகின்ற தூரத்து வெளிச்சத்தை எதிர்பார்த்து வரதேவி காத்திருக்கின்றாள்.
கதையின் கதாநாயாகி கண்ணீர்வரிகள் என் கைப்பட்டு இலக்கிய வரிகளாயின. இது ஒரு பக்கப் பார்வையின் அலசலே. வரதேவி கணவன், மகன், சூழலிலுள்ளோர் பார்வையில் வேறுவிதமாய் இக்கதை அலசப்படலாம். அனைத்துப் பக்கப் பார்வையிலும் உருமாறி இலக்கியம் விரிவுபடலாம். ஆயினும் 6 பாகங்களும் காத்திருந்து பொறுமையுடன் வாசித்து மனம் பதித்த உங்களுக்கு நன்றியைத் தெரிவித்து உங்களிடம் இருந்து விடைபெறுகின்றேன்.
[justify]

kowsy2010
ரோஜா
ரோஜா

Posts : 233
Points : 405
Join date : 29/12/2010

Back to top Go down

Re: என்னையே நானறியேன்

Post by arony on Tue Jun 28, 2011 3:56 am

அடுத்த தொடரோடு விரைவில் வாங்க.

_________________
“எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்”
நான் நானாக....
என்னைப் பார்க்க...[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]
avatar
arony
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 22
Location : எங்கட வீட்டிலதான்:)

Back to top Go down

Re: என்னையே நானறியேன்

Post by ஜான் on Thu Sep 29, 2011 8:51 am

மிக உயர்ந்த நடையாக இருக்கிறது

முழுக் கதையையும் ஒரே பதிவில் கொடுங்கள் அல்லது லிங்க் தாருங்களேன்

நன்றி
avatar
ஜான்
மல்லிகை
மல்லிகை

Posts : 103
Points : 119
Join date : 08/08/2011
Age : 53
Location : மதுரை

Back to top Go down

Re: என்னையே நானறியேன்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Thu Sep 29, 2011 11:35 am

[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]

_________________

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.]
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56806
Points : 69546
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum