"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» கற்றாழை சாறு பருக வைத்தாய்....!!
by அ.இராமநாதன் Yesterday at 8:39 pm

» பழைய காதலி இன்னும் மாறவேயில்லை...!!
by அ.இராமநாதன் Yesterday at 8:31 pm

» சரியான வாழ்க்கை முறை...(பொன்மொழிகள்)
by அ.இராமநாதன் Yesterday at 8:26 pm

» காகிதம் ! நூல் ஆசிரியர் : முதன்மைச் செயலர் முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப.! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Yesterday at 12:58 pm

» அமெரிக்க பெண் தூதர் மனதை கொள்ளையடித்த காஞ்சி பட்டு
by அ.இராமநாதன் Yesterday at 12:56 pm

» வனநாயகம் ! நூல் ஆசிரியர் : முதன்மைச் செயலர் முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப. நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Yesterday at 12:56 pm

» மதுக்கடை ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Yesterday at 12:55 pm

» மாற்றுத்திறனாளி பெண் சீ.பிரித்திக்கு கல்பனா சாவ்லா விருது
by அ.இராமநாதன் Yesterday at 12:54 pm

» ரூ.900 கோடிக்கு செல்லாத நோட்டு அனுப்பி வைப்பு
by அ.இராமநாதன் Yesterday at 12:49 pm

» ஜெ., மரணம் குறித்து விசாரிக்க விசாரணை கமிஷன்
by அ.இராமநாதன் Yesterday at 12:48 pm

» அமெரிக்க கச்சா எண்ணெய் இறக்குமதி துவங்கியாச்சு!
by அ.இராமநாதன் Yesterday at 12:48 pm

» அரசு பெட்ரோல் பங்க்குகளில் மலிவு விலை மருந்தகம்
by அ.இராமநாதன் Yesterday at 12:46 pm

» ஆஸ்திரேலிய பாராளுமன்ற செனட் சபையில் பெண் எம்.பி., ‘பர்தா’ அணிந்து வந்ததால் பரபரப்பு
by அ.இராமநாதன் Yesterday at 12:45 pm

» வடக்கு வாழ்கிறது.. தெற்கு தேய்கிறது! தெரிந்தே புறக்கணிக்கப்படும் தென் மாவட்டங்கள்
by அ.இராமநாதன் Yesterday at 11:53 am

» இன்று முதல் மழை குறையும்: வானிலை மையம்
by அ.இராமநாதன் Yesterday at 11:49 am

» வேதா இல்லம் எங்கள் குடும்ப சொத்து. -தீபா
by அ.இராமநாதன் Yesterday at 11:48 am

» முன்னாள் ஜனாதிபதி பிரதீபா மகளுக்கு ரூ.1 வாடகையில் நிலம்
by அ.இராமநாதன் Yesterday at 11:47 am

» இந்தியாவுக்கு ஜப்பான் ஆதரவு: சீனா பாய்ச்சல்
by அ.இராமநாதன் Yesterday at 11:46 am

» வெற்றிக்காக எதையும் செய்கின்றனர்': தேர்தல் கமிஷனர் ராவத்
by அ.இராமநாதன் Yesterday at 11:45 am

» மைசூரு தசரா விழா: அர்ஜூனா உள்பட 8 யானைகளுக்கும் நடைபயிற்சி
by அ.இராமநாதன் Yesterday at 11:45 am

» இன்று 63 வது ஆண்டில் பவானிசாகர் அணை
by அ.இராமநாதன் Yesterday at 11:44 am

» அரசு பள்ளியை தத்தெடுத்த மாவட்ட கலெக்டர்
by அ.இராமநாதன் Yesterday at 11:43 am

» கோடநாட்டில் கண்காணிப்பு கேமரா பொருத்தமா? எஸ்.பி., விளக்கம்
by அ.இராமநாதன் Yesterday at 11:41 am

» மத்திய அரசை கண்டித்து வரும் 22ல் வங்கி ஊழியர்கள் போராட்டம்
by அ.இராமநாதன் Yesterday at 11:40 am

» ‘புளூ வேல்’ கேமிற்கு மத்திய அரசு தடைவிதிப்பு
by அ.இராமநாதன் Yesterday at 11:39 am

» கொசு... உயிரை பறிக்கும் 'பிசாசு' இன்று உலக கொசு ஒழிப்பு தினம்
by அ.இராமநாதன் Yesterday at 11:38 am

» ராகுல், சோனியாவை தொடர்ந்து ‘மோடியை காணவில்லை’ என சுவரொட்டி வாரணாசியில் பரபரப்பு
by அ.இராமநாதன் Yesterday at 11:37 am

» காலை 8 மணிக்கு தேசிய கீதத்துக்கு மரியாதை செலுத்தும் கிராம மக்கள்
by அ.இராமநாதன் Yesterday at 11:35 am

» வெளிச்சம் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Fri Aug 18, 2017 9:39 pm

» நிஜம் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Fri Aug 18, 2017 9:32 pm

» லவ் டெஸ்ட் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Fri Aug 18, 2017 9:31 pm

» ஏக்கம் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Fri Aug 18, 2017 9:29 pm

» நாயகன், கையெழுத்து – கவிதை
by அ.இராமநாதன் Fri Aug 18, 2017 9:23 pm

» முடிவு எடுத்தல் ! நூல் ஆசிரியர் : முதன்மைச் செயலர் முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப.! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by eraeravi Thu Aug 17, 2017 8:46 pm

» அவசரப்படாதே மச்சி!!
by அ.இராமநாதன் Tue Aug 15, 2017 9:32 pm

» பாப்பி – நகைச்சுவை
by அ.இராமநாதன் Tue Aug 15, 2017 9:27 pm

» ரதிதேவியா நடிக்கிறது யாரு மேடம்…?
by அ.இராமநாதன் Tue Aug 15, 2017 9:26 pm

» தலைவருக்கு மது வாடையை கண்டாலே பிடிக்காது…!!
by அ.இராமநாதன் Tue Aug 15, 2017 9:22 pm

» தலைவருக்கு சிறப்பு நாற்காலி போட்டிருக்காங்க…!!
by அ.இராமநாதன் Tue Aug 15, 2017 9:21 pm

» நம் மன்னர் வெற்றியின் முதல் படியை அடைந்து விட்டார்…!
by அ.இராமநாதன் Tue Aug 15, 2017 9:20 pm

» கடல் போல் இருக்கும் மனைவி!
by அ.இராமநாதன் Tue Aug 15, 2017 9:19 pm

» நமக்கு வாய்த்த தலைவர்
by அ.இராமநாதன் Tue Aug 15, 2017 9:18 pm

» என் டேஸ்ட்டுக்கு தான் சமைப்பேன்..!!
by அ.இராமநாதன் Tue Aug 15, 2017 9:02 pm

» தலைவர் தர்ம தரிசனம்தான் செய்வார்!
by அ.இராமநாதன் Tue Aug 15, 2017 8:50 pm

» ஏண்டா வீட்டுக்காரரை கொலை பண்ணினே?
by அ.இராமநாதன் Tue Aug 15, 2017 8:48 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines குறுந்தொகைக் கதைகள் -9) கார்கால நினைவுகள்-சிங்கை டாக்டர் மா.தியாகராசன்

View previous topic View next topic Go down

குறுந்தொகைக் கதைகள் -9) கார்கால நினைவுகள்-சிங்கை டாக்டர் மா.தியாகராசன்

Post by Dr Maa Thyagarajan on Wed Mar 16, 2011 5:31 pm

குறுந்தொகைக் கதைகள்


9) கார்கால நினைவுகள்

சிங்கை டாக்டர் மா.தியாகராசன்
[You must be registered and logged in to see this link.]


அடர்ந்த காடுகள்! அவற்றில் நடுவே ஒரு கிராமம். அக்கிராமத்தில் ஒரு வீடு!

அவ்வீட்டில், வீட்டின் தலைவியாகிய வெள்ளையம்மாளும் அவள் தோழி அல்லியும் அமர்ந்திருந்தனர்.

அப்பொழுது!

மழை! பெருமழை! வீதி எங்கும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது!

வெள்ளையம்மாள் வாசலுக்கு வந்தாள்; வெளியே பொழியும் மழையைப் பார்த்தாள்; ஏதோ ஒரு சிந்தனையில் மூழ்கினாள்.

அதைப் பார்த்தாள் அல்லி; அவள் அருகே வந்தாள்; நின்றாள்; வெள்ளையம்மாளின் முகத்தைக் கூர்ந்து கவனித்தாள்; பொழியும் மழையையும் பார்த்தாள்; ஏதோ ஒன்றைப் புரிந்து கொண்டவள் போல் தலையை ஆட்டினாள்; அவள் தோளை மெல்லத் தொட்டாள்.

அதை உணர்ந்த வெள்ளையம்மாள் சிந்தனை களைந்தாள். உறக்கத்திலிருந்து திடீரென விழித்து எழுபவளைப் போல் உணர்வு பெற்றாள் - திரும்பினாள் - அல்லியைப் பார்த்தாள் - மெல்லச் சிரித்தாள்.

“ஏண்டியம்மா! வெள்ளையம்மா! உன்னுடைய ஏக்கம் புரிகிறது! சிந்தனை ஓட்டம் தெரிகிறது!

மழை பெய்கிறது! இது மழைக்காலம்! - கார்காலம்! இந்த மழையைப் பார்த்தவுடன் உன் சிந்தனைப் பறவை எங்கோ சிறகடித்துப் பறக்கிறது! இல்லையா?”

“என்னடி அல்லி? ஏனிப்படிப் பேசுகிறாய்? என்ன சிந்தனையில் நான் மூழ்கி இருக்கிறேன்? என்ன கூறுகிறாய்? எனக்கு ஒன்றும் புரியவில்லையே?” என்றாள் தலைவி.

வெள்ளையம்மா! சும்மா மறைக்காதே! நம் ஐயா பொருள் சம்பாதிப்பதற்காக வெளியூர் சென்றுள்ளார். அவர் போகும்பொழுது

‘மழைக்காலம் (கார்காலம்) வருவதற்கு முன்பே திரும்பி வந்து விடுவேன்!’

என்று சொல்லிச் சென்றார். ஆனால் மழைக்காலம் வந்துவிட்டது. மன்னவர் மட்டும் ஏனோ இன்றும் வரவில்லை? அதை எண்ணித்தானே அம்மா துடிக்கிறாய்? மழையைப் பார்த்தவுடன் மன்னவன் நினைப்பு மனத்தில் தோன்றிவிட்டதல்லவா? இனி எப்படி தான் தாங்கிக் கொள்ளப் போகிறாயோ? எப்படித்தான் ஆற்றிக் கொள்ளப் போகிறாயோ? எப்படித்தான் உனக்கு ஆறுதல் கூறுவதோ? ஒன்றும் புரியவில்லையே அம்மா!” என்று புலம்பினாள்.

அதனைக் கேட்ட வெள்ளையம்மாள் அசட்டுச் சிரிப்பு ஒன்று சிரித்தாள்.

“அடீ! பைத்தியக்காரி! அப்படி நான் என்ன கோழையா? அவரது பிரிவை ஆற்றிக் கொள்ள முடியாமல் அரற்றித் திரியும் அறிவில்லாதவளா? - தாங்கிக் கொள்ள முடியாமல் தவித்திடும் பேதை என்றா எண்ணினாய்?

அவர் பிரிவை நான் தாங்கிக் கொள்வேன்.

ஏன் தெரியுமா?

அவர் சென்றுள்ள ஊரிலும் இப்பொழுது கார்காலம் தொடங்கி இருக்கும் - அங்கு மழை பொழியத் துவங்கி இருக்கும். அதைப் பார்த்தவுடன் அவர்க்கு நம் நினைப்பு வரும் - நம்மிடம் கூறிச் சென்ற உறுதிமொழி நினைவுக்கு வரும். எனவே அவர் உடனே திரும்பி வருவாரடி! - விரைந்து வருவாரடி!
கார்காலத்திற்கு முந்தியது முதுவேனில் காலம். அந்த முதுவேனில் காலத்தில் கொடுமையான வெப்பத்தால் அவர் சென்றுள்ள ஊர் பொலிவிழந்து மழை இல்லாது இருந்திருக்கும்.

ஆனால், இப்பொழுது மழை பொழிவதால், அங்கு காய்ந்து கிடந்த காயா மரங்கள் எல்லாம் மீண்டும் துளிர்த்துச் செழித்துத் தழைத்திருக்கும்; பூத்துக் குலுங்கி நிற்கும்.

இக்காயாம் பூக்கள் கார்காலத்தின் வரவை அவர்க்குத் தெரிவிக்கும் - உணர்த்தும். அதனால் நமக்குக் கொடுத்த உறுதிமொழி அவர்க்கு நினைவுக்கு வரும். உடனே அவர் புறப்பட்டு வருவாரடி!

பூக்கள் நிறைந்த அம்மரத்தின் கிளைகள் மயிலின் அழகிய கழுத்தைப் போல் காட்சி தந்து நிற்கும். அதைப் பார்த்தவுடன் அவர்க்கு மயிலின் சாயல் நினைவுக்கு வரும். உடனே மயிலின் சாயலைப் பெற்றிருக்கும் என்னை நினைப்பார். உடனே புறப்பட்டு வருவாரடி!

அங்குள்ள காட்டு நிலத்திடையே அவர் நடந்து செல்வார். அங்கு ஆண் மான்கள் எல்லாம் பெண் மான்களோடு இணைந்தே இருக்கும். தன்னைப்போல் எந்த ஆண் மானும் தனித்து இருப்பதை அவரால் பார்க்கவே முடியாது. எனவே, இணை மான்களைப் (ஆண் மான் பெண் மான் ஜோடி) பார்த்தவுடன் அவர் காதல் வயப்படுவார்; தனித்திருக்கும் தன் நிலையை உணர்வார்; தன்னைக் காட்டிலும் பல மடங்கு தவித்து நிற்கும் என்னை நினைப்பார்; உடனே புறப்பட்டுத்தேர் ஏறி வருவாரடி!

அது மட்டுமா?

கொன்றை மலர்கள் கொத்துக் கொத்தாய்ப் பூத்திருக்கும். அது பூத்து நிற்கும் தோற்றம் பெண் ஒருத்தியின் மேனியில் பசலை பூத்திருக்கும் தோற்றம் போல் தோன்றும். எனவே, பிரிவால் பசலை பூத்திருக்கும் என் மேனி அவர் நினைவுக்கு வரும். உடனே தேர் ஏறி விரைந்து வருவாரடி!

ஆகவே, விரைந்து அவர் வரும் காலம் நெருங்கி உள்ளது. எனவே, அவர் பிரிவை இன்றும் சில நாள்களே பொறுத்துக் கொள்ள வேண்டும்.

எனவே, நான் பொறுத்துக் கொள்வேன் - ஆற்றிக் கொள்வேன்.

என்னால் பிரிவை ஆற்றிக் கொள்ள முடியாது என்று கருதாதே!

அப்படிக் கருதினால் உன் கருத்துத் தவறு ஆகுமடி!” என்று கூறித் தோழியின் கூற்றை மறுத்தாள்.

“சென்ற நாட்ட கொன்றை அம் பசுவீ
நம்போல் பசக்கும் காலை, தம்போல்
சிறுதலைப் பிணையின் தீர்ந்த நெறிகொட்டு
இரலை மானையும் காண்பர் கொல், நமரே?
புல்லென் காயப் பூக்கெழு பெருஞ்சினை
மென்மயில் எருத்தின் தோன்றும்
புன்பல வைப்பிற் கானத் தானே” (குறுந்தொகை -183)


எழுத்து : டாக்டர் மா.தியாகராசன்
சிங்கப்பூர் 558286.


%%%%%%%%%%%%%%%%%%% முற்றும் %%%%%%%%%%%%%%%%%%%

avatar
Dr Maa Thyagarajan
மல்லிகை
மல்லிகை

Posts : 147
Points : 391
Join date : 11/01/2011

Back to top Go down

Re: குறுந்தொகைக் கதைகள் -9) கார்கால நினைவுகள்-சிங்கை டாக்டர் மா.தியாகராசன்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Wed Mar 16, 2011 7:25 pm

அருமையான பகிர்வு பகிர்வுக்கு நன்றி

_________________

தமிழ்த்தோட்டம்

முகநூல் - தமிழ்த்தோட்டம்

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.]
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56783
Points : 69523
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: குறுந்தொகைக் கதைகள் -9) கார்கால நினைவுகள்-சிங்கை டாக்டர் மா.தியாகராசன்

Post by RAJABTHEEN on Wed Mar 16, 2011 10:46 pm

pathukathu vaika venadiya pathivuthu romba arumaiya ullathu

_________________
[You must be registered and logged in to see this image.][You must be registered and logged in to see this image.]

                 
[You must be registered and logged in to see this image.]
avatar
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 95
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum