"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» படித்ததில் பிடித்த வரிகள் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Yesterday at 2:55 pm

» மகாபாரதம் உணர்த்தும் உண்மைகள்
by அ.இராமநாதன் Yesterday at 2:44 pm

» ஓலம்! - கவிதை
by அ.இராமநாதன் Yesterday at 2:27 pm

» தலைவர் ரொம்ப ஸ்ட்ரிக்ட்...!!
by அ.இராமநாதன் Yesterday at 2:24 pm

» இணையத்தில் மெர்சல் படம் பார்த்த ஹெச்.ராஜா!!
by அ.இராமநாதன் Yesterday at 2:22 pm

» தலாய் லாமாவை சந்திப்பது மிகப்பெரும் குற்றம்: உலக தலைவர்களுக்கு சீனா எச்சரிக்கை
by அ.இராமநாதன் Yesterday at 2:19 pm

» சிறிய சிறுசேமிப்பு திட்டங்கள் வங்கிகளுக்கு அரசு அனுமதி
by அ.இராமநாதன் Yesterday at 2:18 pm

» சினிமாவை வைத்து அரசியலா? சமூக வலைதளத்தில் கண்டனம்
by அ.இராமநாதன் Yesterday at 2:18 pm

» பாதுகாப்பான நகரங்கள் பட்டியல்: டில்லி, மும்பைக்கு இடம்
by அ.இராமநாதன் Yesterday at 2:17 pm

» ஆதார் கட்டாயமில்லை' ஜார்க்கண்ட் அரசு அதிரடி
by அ.இராமநாதன் Yesterday at 2:16 pm

» போர்க்கவசம் கூடத் தரிக்காமல், வலையால் உடம்பை மூடிக்கிட்டே போறாரே
by அ.இராமநாதன் Yesterday at 9:19 am

» 'டிவி' சீரியலில் எமி ஜாக்சன்!
by அ.இராமநாதன் Yesterday at 9:15 am

» மசாலா கதைகளில் விஜயசேதுபதி
by அ.இராமநாதன் Yesterday at 9:11 am

» சங்கமித்ரா’ நாயகி: குஷ்பு அதிகாரபூர்வ அறிவிப்பு
by அ.இராமநாதன் Yesterday at 8:56 am

» தமிழ் படத்தில் நடிக்காததற்கு காரணம்…
by அ.இராமநாதன் Yesterday at 8:55 am

» இதப்படிங்க முதல்ல...சினிமா செய்திகள்
by அ.இராமநாதன் Yesterday at 4:05 am

» நோய்கள் உருவாகும் இடம் சாக்கடையோ, கொசுவோ கிடையாது
by அ.இராமநாதன் Sat Oct 21, 2017 10:18 pm

» நல்ல மனைவி....
by அ.இராமநாதன் Sat Oct 21, 2017 10:09 pm

» கட்டைப்பையும் காணாமல் போன கூச்சமும்.... - ஒரு குடும்ப தலைவரின் தீபாவளி பர்ச்சேஸ்
by அ.இராமநாதன் Sat Oct 21, 2017 9:44 pm

» நீரிழிவு நோய்க்கு ஒரு நல்ல செய்தி
by அ.இராமநாதன் Sat Oct 21, 2017 9:34 pm

» சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்
by கவிப்புயல் இனியவன் Sat Oct 21, 2017 8:54 pm

» நிலவில் 50 கி.மீ நீள குகை: ஜப்பான் விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு
by அ.இராமநாதன் Sat Oct 21, 2017 2:48 pm

» ரயில்களின் பயணநேரம் குறைகிறது
by அ.இராமநாதன் Sat Oct 21, 2017 2:45 pm

» ஜெயலலிதா மரணம்: அக்.,25 முதல் விசாரணை
by அ.இராமநாதன் Sat Oct 21, 2017 2:44 pm

» ரூ.1,500 கோடி வங்கி கடன்; 'ஏர் - இந்தியா' கோருகிறது
by அ.இராமநாதன் Sat Oct 21, 2017 2:37 pm

» 4 நாட்களில் துவங்குது வடகிழக்கு பருவ மழை
by அ.இராமநாதன் Sat Oct 21, 2017 2:36 pm

» கொசு உற்பத்தி: திருவாரூர் ரயில் நிலையத்திற்கு ரூ.10,000 அபராதம்
by அ.இராமநாதன் Sat Oct 21, 2017 2:35 pm

» 'எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களை எழுந்து நின்று வரவேற்கணும்'
by அ.இராமநாதன் Sat Oct 21, 2017 2:34 pm

» 'வங்கி கணக்கு எண்ணுடன் ஆதார் இணைப்பு கட்டாயமில்லை'
by அ.இராமநாதன் Sat Oct 21, 2017 2:33 pm

» வேறு எந்த நாட்டுக்காகவும் ஸ்ரீசாந்தால் விளையாட முடியாது: பிசிசிஐ
by அ.இராமநாதன் Sat Oct 21, 2017 2:33 pm

» 7000 ஊழியர்களின் மனைவிகளுக்கு ஹெல்மெட் வழங்கிய வைர வியாபாரி!
by அ.இராமநாதன் Sat Oct 21, 2017 2:32 pm

» ஸ்பானிஷ் திரைப்பட விழா சென்னையில் நடைபெறவுள்ளது.
by அ.இராமநாதன் Sat Oct 21, 2017 2:31 pm

» ஹைக்கூ பாவை! நூல் ஆசிரியர் : கவிஞர் ந.க. துறைவன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Fri Oct 20, 2017 10:27 pm

» சிந்தனை சிகிச்சை - 4
by ராஜேந்திரன் Fri Oct 20, 2017 9:17 pm

» வெற்றிப் பூக்கள்! நூல் ஆசிரியர் : சிந்தனைக் கவிஞர் கவிதாசன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி!
by eraeravi Fri Oct 20, 2017 8:14 pm

» அம்மாவின் முத்தம்! நூல் ஆசிரியர் : முனைவர் மருதம் கோமகன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Fri Oct 20, 2017 8:12 pm

» தமிழ்நாட்டில் 12,254 கிராமங்களில் பாரத் நெட் : தமிழக அரசு தகவல்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2017 4:50 pm

» விலையேறியது ஜியோ பிளான்கள்: அக்டோபர் 19 முதல் அமல்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2017 4:49 pm

» 2000 ரூபாய் நோட்டில் காந்திக்குப் பதில் மோடியின் படம்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2017 4:48 pm

» நியூஸிலாந்து நாட்டின் பிரதமராகிறார் 37 வயதான ஜெசிந்தா ஆர்டர்ன்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2017 4:35 pm

» போக்குவரத்துக்கழகப் பணிமனை ஓய்வறை மேற்கூரை இடிந்து விழுந்ததில் 8 ஊழியர்கள் உயிரிழந்தனர்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2017 4:33 pm

» பொது இடங்களில் ‛வைபை' பயன்பாடு: மத்திய அரசு எச்சரிக்கை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2017 4:31 pm

» காதலுக்கு ஜாதி, மதம் தடையில்லை: கேரள ஐகோர்ட்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2017 4:30 pm

» சிறை மருத்துவமனைக்கு ஆருஷி பெயர்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2017 4:30 pm

» முதலிடத்தை இழந்தது இந்தியா
by அ.இராமநாதன் Fri Oct 20, 2017 4:29 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



குறுந்தொகைக் கதைகள் -5) ஒளியினைத் தேடும் குத்துவிளக்கு-சிங்கை டாக்டர் மா.தியாகராசன்

View previous topic View next topic Go down

குறுந்தொகைக் கதைகள் -5) ஒளியினைத் தேடும் குத்துவிளக்கு-சிங்கை டாக்டர் மா.தியாகராசன்

Post by Dr Maa Thyagarajan on Wed Mar 16, 2011 5:24 pm

குறுந்தொகைக் கதைகள்


5) ஒளியினைத் தேடும் குத்துவிளக்கு

சிங்கை டாக்டர் மா.தியாகராசன்
[You must be registered and logged in to see this link.]


அது ஒரு வளமான கிராமம்!

வளம் செறிந்த வயல்கள் சுற்றிலும் நிறைந்த கிராமம்! - செல்வம் கொழிக்கும் செழிப்பான கிராமம்!

செல்லம்மாள் - செல்லப்பன்; இருவரும் இல்லறத்தை இனிதே, இன்புற, எந்தக் குறையும் இல்லாமல் நடத்தி வந்தனர்.

இது இயல்பு தானே! - செல்வம் நிறைந்த குடும்பத்து இளைஞர்களுக்கு இது சாதாரணம் தானே!

செல்லப்பனும் தடம் மாறினான் - நிலை தடுமாறினான் - மனைப் பெண்டியை விடுத்து விலைப் பெண்டியை நாடினான் - ஆற்று நீரில் குளிப்பதை விட்டுச் சேற்று நீரில் குளிக்க முனைந்தான்.

அவ்வூரில் இருந்த விலைமாது ஒருத்தியை - பரத்தை ஒருத்தியை நாடிச் சென்றான்; அடிக்கடி அவளைச் சந்திப்பதை வழக்கமாகக் கொண்டான்.

மழைக் காலம்!

மழை பொழிந்து அவ்வூர் ஆற்றில் புது வெள்ளம் பெருக்கெடுத்து ஒடியது.

புதுவெள்ளம் வரும் பொழுது ஆற்றில் நீராடிக் களிப்பது அக்கால மக்கள் வெள்ளம்.

அன்று!

செல்லம்மாளை அழைக்காமல் செல்லப்பன் மட்டும் தனியே ஆற்றுக்குச் சென்றான்.

அங்கே அவன் வரவுக்காக ஆவலுடன் காத்திருந்தாள் பரத்தை!

இருவரும் சந்தித்தனர்; இன்ப வெள்ளத்தில் மூழ்கினர்; இன்பமாய் வெள்ளத்தில் மூழ்கிக் களித்தனர்.

இந்தக் காட்சியை எல்லாரும் பார்த்தனர்!

செல்லம்மாளின் தோழி சின்னபெண்ணும் பார்த்தாள்; மனம் பதைத்தாள்; பதறானாள்; செல்லம்மாளிடம் விரைந்து சென்றாள்; கண்டதைக் கூறினாள்.

அதுகேட்ட செல்லம்மாள் அதிர்ச்சி அடைந்தாள்; நெருப்பில் விழுந்த புழுவெனத் துடித்தாள்; ஏதும் செய்ய முடியாதவளாய் அதிர்ந்து நின்றாள்; இதயம் படபடத்தாள்; என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்தாள்.

அந்தச் சமயத்தில் ...............?

ஆற்றில் பரத்தையோடு ஆடிக் களித்த செல்லப்பன் அது முடித்து வீட்டிற்குள் நுழைந்தான்.

அவன் நுழைந்தானோ, இல்லையோ வீட்டிற்குள் இடிமுழக்கம் எழுந்தது!

சாது மிரண்டால் காடு கொள்ளாது!
அமைதியான பெண் வெகுண்டால் அவனியே தாங்காது!
ஆம்!

செல்லப்பனின் அமைதி தவழ்ந்த வீடும் அருஞ்சமம் புரிந்திடும் போர்க்களமாய் மாறிற்று.

“என்னங்க! இது உங்களுக்கே நியாயமா?

எங்கே சென்று வருகிறீர்கள்? எந்த முகத்தோடு இங்கே வந்தீர்கள்?

ஆற்று நீர் பிடிக்கவில்லையோ சேற்று நீரை நாடிச் சென்றீர்கள்? நான் பிடிக்கவில்லையோ அடுத்தவளை நாடிச் சென்றீர்கள்?

அதிலும் அவள் எப்படிப்பட்டவள்?

ஒரு வேசி - விலைமாது - பலரைக் கூடும் பரத்தை - பணத்திற்காகத் தன் உடலை விற்பனைச் செய்பவள் - பலரோடு தொடர்பு கொள்ளும் ஒரு இழி பிறவி -

சீ! அவளோடு தொடர்பு கொண்டீரே! கேவலம்! மகா கேவலம்!

அவளோடு கூடினீரே அருவருப்பாக இல்லையா? அதுதான் போகட்டும்!

யாருக்கும் தெரியாமல் மறைவாகவாவது அவளுடன் கூடினீரா?

ஊரெல்லாம் கூடியிருக்கும் ஆற்றில், பலரும் பார்க்க, அவளுடன் மூழ்க, நீராடினீரே! அது எவ்வளவு கேவலம்! குடும்ப மானமே போய்விட்டதே! இது உங்களுக்கே தகுமா?

மானத்தை விற்றுப் பிழைப்பவளிடம் மனத்தைப் பறிகொடுத்தீரே! இது உங்களுக்கே அடுக்குமா?” என்று பலவாறு பேசி ஆர்ப்பரித்தாள்.

இதை, வீட்டுக்கு வெளியே வீதியில் நடந்து சென்று கொண்டிருந்த பரத்தைரின் தோழி கேட்டு நின்றாள் - நின்றவள் எல்லாவற்றையும் நன்கு கேட்டாள் - கேட்டவள் நேரே பரத்தையிடம் விரைந்தாள் - செல்லம்மாள் அவளைப் பற்றி இழிவாகப் பேசியதை எல்லாம் தெளிவாக, ஒன்றுவிடாமல் சொன்னாள்.

அது கேட்ட பரத்தை ஆத்திரம் கொண்டாள் - ஆர்ப்பரிக்கத் தொடங்கினாள்:

“அடியே! என்னை இழித்துப் பேச அவளுக்கென்ன தகுதி இருக்கிறது?

நான் பரத்தை தான்! ஒப்புக் கொள்கிறேன்! ஊருக்கே தெரியும்!

ஆனால், தன் கணவனை அடக்கி வைக்கும் ஆற்றல் அவளுக்கு இல்லையே! - தன் கணவனைத் திருப்திப் படுத்த அவளால் முடியவில்லையே! அதற்கு நான் என்ன செய்வேன்?
அவன் என்னை நாடி வருகிறான்! அதற்கு நான் என்ன செய்ய முடியும்?

அடியே! தோழியே! ஆம்பல் மலர் பூத்திருக்கும் அழகான செடியைப் பார்த்திருப்பாயே!

அந்த ஆம்பல் செடியின் அழகுத் தழைகளை என் மேனியில் சுற்றி உடுத்துக் கொண்டு பெருவெள்ளம் புரண்டோடும் ஆற்றிலே மூழுகுவேன் - நீருக்குள் நுழைவேன் - நீரைக் குடைவேன் - நீராடுவேன் - நீண்ட மகிழ்ச்சி அடைவேன்.

இப்படி நீராடுவதில் எனக்குப் பெருவிருப்பம் உண்டு. அது என் விருப்பம். அதைத் தடுக்கவோ, குறை கூறவோ யாருக்கும் உரிமை கிடையாது. என் விருப்பப்படியே நீராடுவேன்.
அதைப் போலவே, அவன் என்னை நாடி வந்தால் நான் அவனுடன் சேர்ந்திருப்பேன். அதுவும் என் விருப்பம். அவள் வேண்டுமானால் அவனை அடக்கி வைத்துக் கொள்ளட்டும்! - தடுத்துக் காத்துக் கொள்ளட்டும்!

அதியமான் அஞ்சி (எழிலி) என்று ஒரு மன்னன் இருந்தான். அவன் தன்னாட்டுப் பசுக் கூட்டத்தைக் கவர்ந்து செல்ல வந்த பகைவர்களோடு போரிட்டு, வென்று, அவற்றைப் பாதுகாத்தான். இது வரலாறு.
அந்த அதியமானைப் போல் அவளும் தன் கணவனைக் காத்துக் கொள்ளட்டும்!அவளால் முடியாது என்றால் அவளுடைய உறவினர்களைக் கொண்டாவது காத்துக் கொள்ளட்டுமே!

அப்படிச் செய்யாமல் என்னை இழித்துப் பேசுவதால் எந்தப் பயனும் இல்லையே!” என்று அவள் தன் செயலுக்காகச் சிறிதும் நாணம் கொள்ளாமல், செல்லம்மாளின் பரிதாப நிலைக்காக இரக்கம் கொள்ளாமல் எள்ளி நகையாடினாள் - ஆணவத்தோடு பேசினாள்.

“கூந்தல் ஆம்பல் முழுநெறி அடைச்சி,
பெரும்புனல் வந்த இருந்துறை விரும்பி,
யாம் அஃது அயர்கச் சோறும்; அஃது
அஞ்சுவது உடையாள் ஆயின், வைம்போர்
நுகம்படக் கடக்கும் பல்வேல் எழிலி
முனை ஆன் பெருநிறை போல
கிளையோடு காக்கதன் கொழுநன் மார்பே”
- குறுந்தொகை 80

எழுத்து : டாக்டர் மா.தியாகராசன்
சிங்கப்பூர் 558286.

%%%%%%%%%%%%%%%%%%% முற்றும் %%%%%%%%%%%%%%%%%%%

avatar
Dr Maa Thyagarajan
மல்லிகை
மல்லிகை

Posts : 147
Points : 391
Join date : 11/01/2011

Back to top Go down

Re: குறுந்தொகைக் கதைகள் -5) ஒளியினைத் தேடும் குத்துவிளக்கு-சிங்கை டாக்டர் மா.தியாகராசன்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Wed Mar 16, 2011 7:31 pm

குறுந்தொகை கதைகள் அருமை இலக்கிய பகிர்வுக்கு நன்றி

தொடர்ந்து உங்கள் பகிர்வுகளை தாருங்கள்

_________________

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.]
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56806
Points : 69546
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum