"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» அறிமுகம்
by தியான் Today at 12:15 pm

» போறாளே பொன்னுத்தாயி .....
by அ.இராமநாதன் Today at 10:04 am

» கல்லீரலைக் காப்பது நம் கையில்!
by அ.இராமநாதன் Today at 10:01 am

» ஒன்றைவிட இரண்டு குழந்தைகளே சிறந்தது
by அ.இராமநாதன் Today at 9:34 am

» அடுத்த ஆண்டு முதல் நிதி ஆண்டின் தொடக்கம் ஜனவரிக்கு மாறுகிறது
by அ.இராமநாதன் Today at 9:30 am

» எல்லையில் சீன ராணுவம் அத்துமீறல் இந்திய ராணுவ வீரர்களின் பதுங்கு குழிகளை அழித்தது
by அ.இராமநாதன் Today at 9:29 am

» மாட்டு வண்டி ஊர்வலத்தில் மணவாழ்க்கை தொடக்கம்
by அ.இராமநாதன் Today at 9:24 am

» சீனாவில் 13 ஆண்டுகளாக தயாரித்த அதிவேக புல்லட் ரயில் சேவை துவக்கம்
by அ.இராமநாதன் Today at 9:08 am

» வானிலை மையம் எச்சரிக்கை:பருவமழை டில்லியை தாக்கும்
by அ.இராமநாதன் Today at 9:06 am

» 6 முஸ்லீம் நாடுகளுக்கு தடை விவகாரம்: டிரம்ப் உத்தரவுக்கு கோர்ட் அனுமதி
by அ.இராமநாதன் Today at 9:04 am

» மனிதர்கள் வாழ 10 புதிய கிரகங்களில் சூழல்: நாசா
by அ.இராமநாதன் Today at 9:03 am

» சிந்தனை சிகிச்சை - 4
by ராஜேந்திரன் Yesterday at 9:35 pm

» மழையே மழையே தூரத்திலிருந்து நனைக்காதே
by அ.இராமநாதன் Yesterday at 5:13 pm

» ஆசை நூறு வகை வாழ்வில் நூறு சுவை வா
by அ.இராமநாதன் Yesterday at 5:10 pm

» காசுதான் கடவுளா?
by அ.இராமநாதன் Yesterday at 4:54 pm

» தங்கையை சினிமாவில் இறக்கி விடும் சாய் பல்லவி!
by அ.இராமநாதன் Sun Jun 25, 2017 5:30 pm

» நடிகை கேத்ரின் தெரசா.
by அ.இராமநாதன் Sun Jun 25, 2017 5:13 pm

» சாய் பல்லவி தங்கை பூஜா நடித்திருக்கும் காரா குறும்படம்
by அ.இராமநாதன் Sun Jun 25, 2017 5:11 pm

» கதாநாயகியானார் எஸ்தர்!
by அ.இராமநாதன் Sun Jun 25, 2017 5:07 pm

» சினேகாவின் ரீ – என்ட்ரி!
by அ.இராமநாதன் Sun Jun 25, 2017 5:06 pm

» மன்மோகன்சிங் வாழ்க்கை திரைப்படமாகிறது!
by அ.இராமநாதன் Sun Jun 25, 2017 5:05 pm

» “கபட வேடதாரிகளை எனக்கு பிடிக்காது” நடிகை திரிஷா சொல்கிறார்
by அ.இராமநாதன் Sun Jun 25, 2017 1:37 pm

» சினி துளிகள்!
by அ.இராமநாதன் Sun Jun 25, 2017 9:50 am

» சர்ச்சையில் சிக்க விரும்பாத சிவகார்த்திகேயன்!
by அ.இராமநாதன் Sun Jun 25, 2017 9:49 am

» ஷீரடி பாபா - ஆன்மிக சிந்தனை
by அ.இராமநாதன் Sun Jun 25, 2017 8:53 am

» பொண்டாட்டியே உதைப்பா…!
by அ.இராமநாதன் Sat Jun 24, 2017 10:01 pm

» என்ன..! இது கவர்ச்சிப் பிரியாணியா?
by அ.இராமநாதன் Sat Jun 24, 2017 10:00 pm

» தலைவர் சின்னப்பசங்க கூட கோலி விளையாடறாரே?
by அ.இராமநாதன் Sat Jun 24, 2017 10:00 pm

» வழக்கம் போல் பீர் பாட்டிலை தான் தொறக்கிறீங்க!
by அ.இராமநாதன் Sat Jun 24, 2017 9:59 pm

» தலைவா ஐ டி ஆபிசர்ஸ் வந்திருக்காங்க!
by அ.இராமநாதன் Sat Jun 24, 2017 9:59 pm

» ஆந்தை லேகியம் கொடுத்து விட்டாராம்!
by அ.இராமநாதன் Sat Jun 24, 2017 9:58 pm

» அட்சதை கூட கல்லு வந்து மண்டையில விழுதே?
by அ.இராமநாதன் Sat Jun 24, 2017 9:58 pm

» ஓங்கி அடிச்சா…!
by அ.இராமநாதன் Sat Jun 24, 2017 9:21 pm

» அன்று சொன்னவை இன்று நடக்கிறது
by கவிப்புயல் இனியவன் Sat Jun 24, 2017 1:56 pm

» எதை விட்டுக் கொடுப்பது? – தென்கச்சி கோ. சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Sat Jun 24, 2017 11:38 am

» நபி மொழிகள்: நல்லெண்ணம் அழகிய வணக்கமாகும்
by அ.இராமநாதன் Sat Jun 24, 2017 11:29 am

» ரமலான் நோன்பு சிறப்புக் கட்டுரை: வீசும் காற்றைப் போல் தர்மம் செய்பவர்
by அ.இராமநாதன் Sat Jun 24, 2017 11:27 am

» லூயி பாஸ்டர்
by அ.இராமநாதன் Sat Jun 24, 2017 11:25 am

» அரசுப் பள்ளியில் பயின்று நீட் தேர்வில் வெற்றி பெற்ற தமிழகத்தைச் சேர்ந்த இரட்டை சகோதரிகள்
by அ.இராமநாதன் Sat Jun 24, 2017 11:22 am

» புற்று நோயால் பாதித்த 5 வயது சிறுமியின் திருமண ஆசையை நிறைவேற்றிய பெற்றோர்
by அ.இராமநாதன் Sat Jun 24, 2017 11:20 am

» பெண்களுக்காக பொது கூட்டம் நடத்தப் போறாராம்...!!
by அ.இராமநாதன் Sat Jun 24, 2017 10:55 am

» மனைவிக்கும் டாக்டர் பட்டம் வேண்டுமாம்…!!
by அ.இராமநாதன் Sat Jun 24, 2017 10:46 am

» பிரிட்டனில் குட்டை பாவாடையுடன் பள்ளி மாணவர்கள் நூதனப் போராட்டம்
by அ.இராமநாதன் Fri Jun 23, 2017 8:29 pm

» நட்பு நாடுகள் பட்டியலில் இருந்து பாகிஸ்தானை நீக்க அமெரிக்க செனட் சபையில் மசோதா
by அ.இராமநாதன் Fri Jun 23, 2017 8:28 pm

» ரம்ஜான் ட்ரீட்: சிறப்பு காம்போ திட்டங்களை அறிவித்த பி.எஸ்.என்.எல்.
by அ.இராமநாதன் Fri Jun 23, 2017 8:27 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



வெள்ளை யானை பறக்கிறது

View previous topic View next topic Go down

வெள்ளை யானை பறக்கிறது

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Sat Mar 05, 2011 8:37 pm

மதுராந்தகம் மன்னனுக்குக் கண் பார்வை மங்கிக் கொண்டே போனது.
வெள்ளை யானையின் தந்தங்களைத் தேய்த்து, கண்களில் பூசிக்கொள்ள வேண்டும்.
அப்படிச் செய்தால் மறுபடி கண்பார்வை வந்துவிடும், என்று மருத்துவர்கள்
கூறிவிட்டனர்.

வெள்ளை யானையை உயிரோடு பிடித்து வந்தால், ஒரு ஊரையே
பரிசாகத் தருவதாக அறிவித்தான், மன்னன். இந்தச் செய்தி பரமார்த்தருக்கும்,
அவரது சீடர்களுக்கும் எட்டியது.

குருநாதா! நமக்குத் தெரிந்தவரை யானை கருப்பு நிறமாகத்தானே இருக்கிறது? வெள்ளை யானை கூட உண்டா என்ன? எனக் கேட்டான், மட்டி.

தேவலோகத்தில் ஐராவதம் என்று ஒரு யானை இந்திரனிடம் இருக்கிறது. அது வெள்ளையாக இருக்குமாம், என்றான் மடையன்.

குருவே! அந்த யானையைப் பிடித்துவர உங்களுக்குத் தைரியம் இருக்கிறதா? என்று கேட்டான், முட்டாள்.

உடனே குருவுக்குக் கோபம் வந்து விட்டது!

கோழையே!
என்னால் முடியாத காரியம்கூட உண்டா? ஆனால், இந்திரனுக்கும் எனக்கும் போன
ஜென்மத்தில் இருந்தே தீராத பகை. அதனால் அங்கே போவதற்கு நான் விரும்பவில்லை,
என்று கூறியபடி தாடியை உருவிக் கொண்டார்.

குருதேவா! எனக்கு ஒரு
யோசனை தோன்றுகிறது... வீட்டுக்கு வெள்ளை அடிப்பது மாதிரி, யானைக்கும்
வெள்ளை அடித்து விட்டால் என்ன? என்று கேட்டான், மண்டு.

ஆமாம் குருவே! யானையின் மேல் சுண்ணாம்பு தடவி விட்டால் போதும். கருப்பு யானை வெள்ளையாக மாறிவிடும்! என்று குதித்தான், மூடன்.

ராஜாவுக்குத்தான் சரியாகக் கண் தெரியாதே! அதனால் அவரால் நம் மோசடியைக் கண்டுபிடிக்க முடியாது! என்று மகிழ்ந்தான், முட்டாள்.

ஆகா! ஆளுக்கு ஒரு ஊர் பரிசாகக் கிடைக்கப் போகிறது. இனிமேல் நாம் எல்லோரும் குட்டி ராஜாக்கள்தான்! என்றபடி மண்ணில் புரண்டான், மட்டி.

பலே, பலே! இப்போதுதான் உங்கள் மூனை நன்றாக வேலை செய்கிறது! எனப் பாராட்டினார், பரமார்த்தர்.

அப்போதே தன் சீடர்களை அழைத்துக் கொண்டு, யானைப் பாகனிடம் போனார்.

ஒருநாளைக்கு
மட்டும் உங்கள் யானையை வாடகைக்குக் கொடுங்கள். தேவையான பணம் தருகிறோம்.
நீங்களும் கூடவே வரவேண்டும், என்று வேண்டினான் மட்டி.

பணத்துக்கு ஆசைப்பட்ட பாகனும் சரி என்று சம்மதித்தான்.

நன்றாக இருட்டிய பிறகு, பானை பானையாகச் சுண்ணாம்பு கொண்டு வந்தான், மடையன்.

அதை எடுத்து அபிஷேகம் செய்வது போல, பானையின் மேல் ஊற்றினான், முட்டாள்.

கொஞ்சம் சுண்ணாம்பை வாரி எடுத்து, பயந்து கொண்டே யானையின் வாயில் பூசிவிட்டான், மண்டு.

பரமார்த்தரும் தம் கைத் தடியால் வரி வரியாக வெள்ளை அடித்தார்.

குருவே!
யானை கருப்பாக இருக்கும்போது தந்தம் வெள்ளையாக இருக்கிறது, அதுபோல யானை
வெள்ளையாக இருந்தால், தந்தம் கருப்பாக அல்லவா இருக்க வேண்டும்? எனக்
கேட்டான், பாகன்.

ஆமாம்! நீ சொல்வதும் சரிதான்! என்றபடி அடுப்புக் கரியைத் தேய்த்து, தந்தங்களில் பூசி விட்டான், முட்டாள்.

இது தேவலோகத்தில் இருந்து பிடித்து வந்தது என்பதை அரசன் நம்ப வேண்டும். அதனால் இரண்டு இறக்கைகள் கட்ட வேண்டும், என்றார் பரமார்த்தர்.

குருவின் யோசனையை உடனே செயல்படுத்தினான், மூடன்.

எல்லா
வேலையையும் முடிந்தது. யானையைச் சுற்றி வந்து பார்வையிட்ட குரு, அற்புதம்!
இது இந்திர லோகத்து யானையேதான்! என்றபடி அதன் தும்பிக்கையைத் தொட்டுக்
கும்பிட்டார்.

மறுநாள், அரண்மனைக்கு முன்னால் மக்கள் கூட்டம் ஜே ஜே
என்று இருந்தது. வெள்ளை யானையைப் பார்ப்பதற்காக மந்திரிகள் புடைசூழ
மன்னனும் வந்தான்.

திறந்த வெளியில் கட்டி இருந்த யானையைப் பார்த்த
அரசன், அதிசயமாக இருக்கிறதே! இந்த யானையை எங்கிருந்து பிடித்து வந்தீர்கள்?
என்று கேட்டான்.

தேவலோகம் வரை தேடிக் கொண்டு போனோம்! என்று புளுகினான், மண்டு.

ஐயோ! இதைப் பிடிக்க நாங்கள் பட்ட பாடு எங்களுக்குத்தான் தெரியும்! என்றான் மூடன்.

தந்தம் மட்டும் கருப்பாக இருக்கிறதே? என்று மந்திரி கேட்டதும், அது வைரம் பாய்ந்த தந்தம்! அப்படித்தான் இருக்கும்! என்றான் முட்டாள்.

இவர்கள்
பேசிக் கொண்டே இருக்கும்போது, திடீரென்று பலத்த காற்று அடிக்க
ஆரம்பித்தது. உடனே யானையின் மீது கட்டப்பட்ட இறக்கைகள் பிய்த்துக் கொண்டு
கீழே விழுந்தன.

உடனே பலத்த மழையும் பெய்ய ஆரம்பித்தது. மழை நீர்
யானையின் மீது பட்டதும் கொஞ்சம் கொஞ்சமாகச் சுண்ணாம்பு எல்லாம் கரைந்து,
வெள்ளை யானை கருப்பாக மாறியது.

இதைப் பார்த்த குருவுக்கும் சீடர்களுக்கும் பயத்தால் உடம்பு வெட வெட என்று நடுங்கியது!

சிறிது நேரத்திலேயே பரமார்த்தரின் சாயம் வெளுத்து விட்டது - ஊகும் - கருத்து விட்டது. வழக்கம்போல் தண்டனைக்கு ஆளானார்கள்.

தேவலோகத்தில் ஐராவதம் என்று ஒரு யானை இந்திரனிடம் இருக்கிறது. அது வெள்ளை

_________________

தமிழ்த்தோட்டம்

முகநூல் - தமிழ்த்தோட்டம்

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.]
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56783
Points : 69523
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: வெள்ளை யானை பறக்கிறது

Post by அ.இராமநாதன் on Sat Mar 05, 2011 8:53 pm

02 ஜூலை 2010
---------------------
[You must be registered and logged in to see this image.]
-
மியன்மாரில் கடந்த வாரம் வெள்ளை யானை ஒன்று அதிகாரிகளால் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. வெள்ளை யானை மிகவும் அரிதான விலங்கினங்களில் ஒன்றாகும். அரசியல் மாற்றத்தின் சகுனமாக வெள்ளை யானைகள் வரலாற்றில் காலங்காலமாகப் பேசப்பட்டு வருகின்றன.

இந்த பெண் வெள்ளை யானை கடந்த சனிக்கிழமை மியன்மாரின் Rakhine மாநிலத்தில் உள்ள Maungtaw என்கிற கடலோரப் பிரதேசத்தில் வைத்துக் கண்டு பிடிக்கப்பட்டிருக்கிறது. இதன் வயது சுமார் 38. உயரம் ஏழு அடி, நாலு இஞ். மியன்மார் அரசர்கள் வெள்ளை யானைகளை கிடைத்தற்கரிய பொக்கிசங்களாகப் பாதுகாத்து வந்திருக்கிறார்கள்.

நல்ல அரசியல் மாற்றம், செழிப்பான எதிர்காலம் ஆகியவற்றின் அடையாளங்களாக நம்பப்படுகின்றன. 1962 ஆம் ஆண்டிலிருந்து மியன்மாரில் இராணுவ ஆட்சி இடம்பெற்று வருகின்றது.சுமார் இரு தசாப்த காலங்களின் பின்னர் இந்த ஆண்டு அங்கு தேர்தல் இடம்பெற உள்ளது. இன்னமும் தேர்தல் திகதி அறிவிக்கப்படவில்லை.

===========
நன்றி:
[You must be registered and logged in to see this link.]

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 22765
Points : 48915
Join date : 26/01/2011
Age : 72

Back to top Go down

Re: வெள்ளை யானை பறக்கிறது

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Sat Mar 05, 2011 9:04 pm

நன்றி ஐயா..

_________________

தமிழ்த்தோட்டம்

முகநூல் - தமிழ்த்தோட்டம்

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.]
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56783
Points : 69523
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: வெள்ளை யானை பறக்கிறது

Post by கவிக்காதலன் on Sun Mar 06, 2011 3:27 am

இருவருக்கும் நன்றி!!!

_________________
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.] | Am I Online? [You must be registered and logged in to see this image.]


இமை மூடினால் இருள் தெரியவில்லை...! அவள்தான் தெரிகிறாள்...!!
avatar
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 17
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum